Friday, May 26, 2017

பம்பை - அச்சன்கோவில் - தமிழக வைப்பாறுடன் இணைப்பு.

பூகோள அறிவின்றி அமைச்சர்கள் கோரிக்கை வைப்பது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதகாதா?

பம்பை - அச்சன்கோவில் - தமிழக வைப்பாறுடன் இணைப்பு. 
-------------------------------------
சற்று முன் டெல்லி வட்டாரத்தில் இருந்து ஒரு செய்தி கிடைத்தது. அந்த செய்தி என்னவெனில் , வைப்பாறு கேரளாவை சார்ந்தது என்றும் அச்சன்கோவில், பம்பை ஆற்று நீர்  வைப்பாறில் கலந்து அரபிக்கடலில் கலங்கின்றது எனவும் , இதில் பிரதமர் தலையிட்டு தமிழகம் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் வைத்தாக நம்பப்படுகின்றது. 
 


வைப்பாறு தமிழகத்தின்  எல்லைக்குட்பட்டது. அங்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டு வறண்டு காணப்படுகின்றது. மேலே கிடைக்கப் பெற்ற செய்தி உண்மையெனில் பூகோள அறிவில்லாத அமைச்சர்களை நாம் தேர்வு செய்ததற்கு வெட்கி தலைக்குனிய வேண்டிய நிலை.

தேசிய நதிநீர் இணைப்புக் குறித்து  உச்சநீதி மன்றத்தில் நான் தொடுத்த பொதுநல வழக்கில் நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு , கங்கை-மகாநதி-கிருஷ்ணா-காவேரி-வைகை-தாமிரபரணி-குமரியில் உள்ள நெய்யாற்றில் கலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும். கங்கை குமரியை தொட வேண்டும்.

கேரளாவில் உள்ள அச்சன்கோவில்- பம்பை நதிப்படுகைகளை தமிழகத்தின் சாத்தூர் பகுதிதில் உள்ள வைப்பாறு உடன் இணைக்கப்பட வேண்டும். இத்துடன் கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலந்து வீணாகும் நீரை கிழக்கு முகமான தமிழகத்தின் பக்கம் திருப்பி விடவேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து  1983ல் வழக்கு தொடுத்து உச்சநீதிமன்றத்தில் 27-02-2012ல் என்னுடைய வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றேன்.

அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 1975 முதல்  43 வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தை பரிந்துரைத்தது.  உண்மை நிலை இவ்வாறு இருக்க வைப்பாறு எப்படி கேரளாவின் எல்லைக்குட்பட்டு இருக்கும்? பூகோள அறிவின்றி அமைச்சர்கள் கோரிக்கை வைப்பது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதகாதா?

தேசியநதிநீர்இணைப்பு 
#அச்சன்கோவில்பம்பைவைப்பாறு 

#KSRadhakrishnanpostings
#KSrpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-05-2017
 

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...