Friday, May 12, 2017

சேலம் -மேக்னசைட் சுரங்கம் விவகாரம்

சேலம் -மேக்னசைட் சுரங்கம் விவகாரம் 
-------------------------------------
சேலம் அருகே செயல்பட்டு வந்த, மேக்னசைட் சுரங்கம், 1,150 கோடி ரூபாய் நில வாடகை, சுற்றுச்சூழல் சான்று பெறுதல் விவகாரத்தால் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு, தமிழக அரசிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால், சுரங்கம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில், மத்திய அரசின், செயில் நிறுவனத்தின் இணை நிறுவனமான, ‘செயில் ரெப்ரேக்டரி கம்பெனி லிமிடெட்’ என்ற, எஸ்.ஆர்.சி.எல்., கட்டுப்பாட்டில்,மேக்னசைட் சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான, 1,800 ஏக்கர் நிலம், ஓமலூர் அடுத்த, தாத்தையங் கார்பட்டி கிராம பகுதிகளில் உள்ளது. இங்கு கிடைக்கும் மேக்னசைட் தாது பொருளை, பல்வேறு உருக்குஆலைகளுக்குஅனுப்புகின்றனர்.
இந்நிறுவனத்தில், நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள், 1,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இருந்தும், நிலத்திற்கான வாடகை, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கல் போன்ற விவகாரத்தால், தற்போது ஆலை மூடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.

கடந்த, 1943 முதல், 2009 வரை, நில வாடகையாக, 458 கோடி ரூபாய் மற்றும், 2017வரை, அதற்கு பட்டியுடன் சேர்த்து, 1,150 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என, மாநில அரசின் சார்பில், ஆலை நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
தமிழக அரசு கோரும், 458 கோடி ரூபாய் நில வாடகை பிரச்னையை, மத்திய, மாநில அரசுகள் தீர்க்க வேண்டும். சுரங்க உரிமத்தை, எஸ். ஆர்.சி.எல்., நிறுவனத்திற்கு மாற்றுவதோடு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி, தடை பட்ட சுரங்க பணியை துவங்க வேண்டும்.

கடந்த, 1998ல் போடப்பட்ட அரசாணை மூலம், 1943ல் இருந்து, 2009 வரை, 455 கோடி ரூபாய் தமிழக அரசு நில வாடகை கேட்கிறது. ஆனால், 1943 முதல், 1953 வரை சென்னை மாகாணம் என்று தான் உள்ளது. 1953க்கு பின் தான், தமிழக அரசு உருவானது.
அதனால், 1998க்கு முந்தைய ஆண்டுகளுக்கும் சேர்த்து நிலவாடகை கேட்பது, சட்ட விதி மீறல்.
மேலும், 458 கோடி ரூபாய்க்கு, 2017 வரை வட்டியுடன் சேர்த்து, 1,150 கோடி ரூபாய் கேட்கின்றனர். இந்த தொகை, நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை விட, பல மடங்கு அதிகம்.
#சேலம்மேக்னசைட்சுரங்கம் 
KS Radha Krishnan post

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...