Thursday, October 3, 2019

சிந்தனை !

நமது உடமைகள், சொத்து,
ஆபரணங்கள், பதவிகள், புகழ், அறிவு,பக்குவம்,கருணைச் செயல்கள், கலையுணர்வுகள்,  நாம் செய்த தன்னலமற்ற தொண்டு, கோடி கோடியாக வாரி வாரி வழங்கிய மனிதத் தன்மை, அமைதி, பொறுமை, இரக்கம், நம்மைப் புரிந்து கொள்ளாமல் நமது பெருந்தன்மையை பொறுத்துக்கொள்ள முடியாமல் நமக்குத் தீங்கிழைத்த, தீங்கு செய்யத் தூண்டிய மனிதச் சட்டையைச் சார்த்தியிருக்கும்  மாக்களை மன்னித்து அவர்களும் “மண்ணில் நல்ல வண்ணம்” வாழட்டும்.மனிதர்களின் உடல் மண்ணில் புதைக்கப் பெற்ற பின்னர் உணர்ந்தால் என்ன ? உணராவிட்டால் என்ன ? சிறப்புச் செய்தால் என்ன ? செய்யாவிட்டால் என்ன ?   மனிதன் மனிதனாக வாழவேண்டாமா ? வாழ்வது மிக மிகக் குறுகிய காலம் அல்லவா ?  “நிலையாமையை” உணர்ந்து வாழ வேண்டாமா ?  

தனது ஏற்றத்துக்கு உதவியவர்களை நன்றி மறந்து முதுகில் குத்தி விட்டு நான் நேர்மையானவன் என பாசாங்காக நடிப்பவர்கள் நிரந்தரமற்றவர்கள்தான்;
அவர்களும் ஒரு நாள் உயிர்யற்ற ஜடங்களாக இந்த மண்ணில் இறுதிப்படுத்தப்படுவார்கள்.
தனக்கு நம்பிக்கையோடு தங்களையே
அழித்துக்கொண்டு உதவியவர்களின்
வாழ்வை அழிப்பது பெரும் குற்றமாகும்.

இவைதான் நல்லோர்களின் சிந்தனை !


No comments:

Post a Comment

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்

#அரிட்டாப்பட்டியில்டங்ஸ்டன்சுரங்கம்  ———————————————————- மதுரை மாவட்டத்தில் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் போராட்டங்கள் நட...