தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தான் நாட்டுப்புற கதைப்பாடல்கள் நிறைய உண்டு. அவற்றில் பல வரலாற்று உண்மைகள் உள்ளன. கட்டபொம்முவைப் பற்றிய நாடகங்கள் கிராமங்களில் நடத்தப்பட்டன. வேறு எந்த அரசருக்கும் இது மாதிரி இல்லை எனலாம்.
பானர்மேன், காலின்ஸ் என்ற ஆங்கில தளபதிகள் இருவர்தான் முதலில் கட்டபொம்மன் கோட்டையைத் தகர்க்க ஒட்டபிடாரத்திலே முகாமிடுகிறார்கள். இதனை ஒரு நாட்டுப்புறப் பாடலில் காணலாம்.
“ஒட்டப்பிடாரப் பாதையிலே அவன்
ஒழுகு கூடாரம் தானடித்துப்
பட்டாளத்தை நிறுத்தி விட்டான் அவன்
பாங்குடனே”
என்ற வரிகள் வரலாற்று செய்திகளை எடுத்துக்கூறும். முதலில் கோட்டையின் தெற்குப் பகுதியிலிருந்து தாக்கத் திட்டமிட்டான்.
“தெற்கு கோட்டைத் தலைவாசலில் அவன்
தீர்த்தானே பீரங்கி காலனுந்தான்”
காலன் – காலின்ஸ் என்ற ஆங்கில தளபதி.
வீரபாண்டிய கட்டபொம்முவின் வரலாறு நாட்டுப்பாடல்களிலே காணமுடியும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல் பாதிரியார் தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவர் எழுதிய ‘History of Tirunelvely’ என்ற நூலில் கட்டபொம்மனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னார் தான் கட்டபொம்மன் வரலாறு பற்றி பலர் தமிழ் நாடோடிப் பாடல்களில் உள்ள தகவல்களைத் திரட்டி வரலாறு எழுதினார்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
KSR_Post
06.02.2021
No comments:
Post a Comment