Wednesday, February 10, 2021

#உத்தரகண்ட்டில்_பனிச்சரிவு


———————————————————
உத்தரகண்டில் சுற்றுச்சூழலை புறக்கணித்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பதிப்புகள் அங்கு நடந்துள்ளது. அதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது.
இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தின் ஜோஷிமட் பகுதியில் நந்தாதேவி மலைச்சிகரத்தில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை திடீரென உடைந்து பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் கங்கை நதியின் துணை நதியான தவுலிகங்கை நதியில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் தவுலிகங்கை நதி பாயும் தபோவன்ரேனி பகுதியில் என்.டி.பிசி நிறுவத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள நீர் மின் நிலையம் வெள்ளப்பெருக்கினால் சிதைந்தது.
125-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 16 பேர் மின் நிலைய சுரங்கத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஐ.டி.பி.பி எனப்படும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையும், என்.டி.ஆர்.எப் எனப்படும் தேசிய பேரிடம் மீட்புப் படையினரும், இந்திய விமானப் படையும் மீட்பு பணியில் களமிறங்கி உள்ளனர்.

உத்தரகண்ட்டில் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அண்டை மாநிலங்மான உத்தரப்பிரதேசத்தில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2019-ல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், இமயமலை பிராந்தியத்தில் பனிப்பாறைகள் உருகி வருவது, இருமடங்காக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, நேபாளம், பூட்டானின் 40 ஆண்டுகால செயற்கைகோள் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், 1975 – 2000 கால கட்டத்தில் இமயமலையில் ஒரு ஆண்டில் 0.25 மீட்டர் அளவுக்கு பனிப்பாறைகள் உருகியுள்ளன. அதுவே 2000 – 2019 காலகட்டத்தில் இரண்டு மடங்களாக உயர்ந்துள்ளது. பருவநிலை மாறுபாடு, அதிகரிக்கும் வெப்பம் ஆகிய காரணங்களோடு பனிப்பாறைகள் மிகவேகமாக உருகுகின்றன.
இந்த திடீர் இயற்கைப் பேரிழவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09.02.2021

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...