Monday, January 13, 2020

கடந்த 1975, 76 வரை மை ஊற்றி எழுதுகின்ற நிப் பேனாக்களே பயன்பாட்டில் இருந்தது.

கடந்த 1975, 76 வரை மை ஊற்றி எழுதுகின்ற நிப் பேனாக்களே பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு பந்து முனை எனப்படும் பால்பாயின்ட் பேனா வந்தது. இன்றைக்கும் பலர் இந்த பேனாக்களை வாங்குவதும், அதை வைத்து எழுதுவதும் விரும்பவுது உண்டு. மை கூடு, இங்க் பேனா என்று ஒரு தலைமுறை மாறிவிட்டாலும், அதற்கென்று ஒரு மவுசு உள்ளது. இந்தியாவில் முதன்முதலாக 1932இல் ரத்தினம் பேனா கம்பெனி தான் உருவாக்கப்பட்டது. அதனுடைய பேனா உத்தமர் காந்திக்கு 1935இல் பரிசளித்தபோது அதை பெரிய பெருமையாக அவர் நினைத்தது உண்டு. இந்தியாவில் ரத்தினம், ரத்தினம் சன், கெயிடர், டெக்கான், சுல்தான், காமா, பென்கோ, வில்சன்என்ற பல பேனா கம்பெனிகளும், கிருஷ்ணவேணி, ஹாட்ஸ், கேமல், சுலேகா போன்ற பவுண்டேன் பேனா மை கம்பெனிகளும் அன்றைக்கு முக்கியமாக இருந்தன. அதுபோல, வெளிநாட்டிலிருந்து பார்க்கர், ஜப்பான் - பைலட், வாட்டர்மேன், பேப்பர் மேட், செனட்டர், பென்டல், லேமி, பேன்செயா, யுனிபால் போன்ற வெளிநாட்டு பேனாக்களும் 1960,70களில் புழக்கத்தில் இருந்தன. இன்றைக்கு மை பேனாக்கள் பலரால் தவிர்க்கப்பட்டாலும் சிலர் அதை பழமையில் வடிவம் என்று விரும்புகின்றனர். சென்னை பாரிமுனை நேதாஜி போஸ் சாலை, பிராட்வே சந்திப்பில் உள்ள ஜெம் & கோ, பென் கார்னர் போன்ற பேனாக் கடை நஷ்டத்தில் கூட்டமில்லாமல் கலையிழந்தாலும் அந்த கடையின் உரிமையாளர்கள் தாங்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் கடையை விடாமல் தொடர்ந்து நடத்தி வருவது ஒரு அரிய பணியாகும். இந்த கடைக்கு பிரிட்டிஷ் வைசிராயிலிருந்து முதல்வர்கள் ராஜாஜி, ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், சிவாஜி என அனைத்து துறையினரும் புதுப் பேனாக்களை வாங்கிய விற்பனை மையமாகும். இந்த கடைக்கு அடிக்கடி நானும் செல்வதுண்டு. மை பேனா மீது எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. விதவிதமான பேனாக்கள் இன்றைக்கும் என்னிடம் உள்ளன. இதை குறித்து ஆங்கில மின்ட் இதழில் பிபிக் டெப்ராய் அவர்களின் பத்தி வருமாறு,





கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-01-2020.

#KSRpostings
#KSRadhakrishnanpostings
#ink_pen
#nip_pen

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...