Friday, January 24, 2020

மோகமுள்- தி.ஜானகிராமன்

”சமுத்திரம் மாதிரி இருக்கிறது அவர் ஞானம். அதைவிடப் பெரிதாக இருக்கிறது அவர் சுபாவம். பெரிய மனிதர்... மனிதனுரைய நல்ல அம்சங்கள் எல்லாம் உருவாகி வந்தவர் அவர். அவரோடு பழகுவதே போதும், அவர்கூட இருந்தாலே போதும். உன்னையும் அறியாமல் நீ பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பாய். அவர் பேசக்கூட வேண்டாம்.


...இவர்கள் யாருக்கும் வாயைத் திறந்து உபதேசமா நல்ல வார்த்தைகளோ சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்த மாதிரி மகான்களால் உபயோகமில்லை என்று லோகாயதவாதிகள் சொல்லல்லாம். ஆனால் லோகாயதவாதிகளுக்கே பதில் சொல்ல முடியும் - அவர்களுடைய வாதத்தை வைத்துக் கொண்டு வேறு ஜன்மம் - முன் ஜன்மமோ, இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வாழ்க்கையில் சாப்பிடுவது, குழந்தைகள் பெறுவதைத் தவிர மனிதகள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாகச் செய்வதில்லை. இல்லாவிட்டால் எல்லாரையும் நடத்தத் தலைவன் என்று ஒருவன் இருப்பானேன்? அவனுக்கு எல்லோரும் கீழ்பரிவானேன்? அறிவாளி, விஞ்ஞானி என்று பத்துப்பேர் இருப்பானேன்? அவர்களை மற்றவர்கள் பெரியவர்களாக ஒப்புக் கொள்வாளேன்? அப்படியே சிறந்த குழந்தைகளையே பிறக்கச்செய்வது, சிறந்த அதி மனிதர்களாக எல்லாரையும் ஆக்கிவிடுவது என்று விஞ்ஞானம் முன்னேறினால்கூட, அந்தக் கூட்டத்திலும் பெரியவன் ஒருவன் இருப்பான். தன்னைக் கட்டுப் படுத்தி, சாதாரண இச்சை இன்பங்களுக்கு மேல் நின்று, பெரிய வாழ்க்கை வாழ முயல்கிற ஒருவன் இருப்பான். அவனைப் பார்க்கும் எல்லா ஜனங்களும் கண்ணகல வியப்புடன் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள், அவனுடைய வார்த்தைக்கு கெளரவம் கொடுப்பார்கள். அவன் இருந்தாலே தங்களுக்கு பக்கபலம் என்று நினைப்பார்கள். சாதாரண சராசரி வாழ்க்கையில் இருந்து, முயற்சி செய்து தன்னையே எழுப்பிக் கொண்டு உயர்ந்து நிற்கிறவர்கள், எப்போதும் சிலர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.”

- மோகமுள்.

#ksrpost
24-1-2020.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...