Saturday, January 18, 2020

தோழர் #ப_ஜீவானந்தம்

இன்று (ஜன.18) தோழர் #ப_ஜீவானந்தம் 

 நினைவு நாள்.
————————————————




இன்று (ஜன.18) தோழர் #ப_ஜீவானந்தம் நினைவு நாள்.
————————————————
கோடிக்கால் பூதமடா - தொழிலாளி
கோபத்தின் ரூபமடா!
                                    - ஜீவா.
தமிழக அரசியலில் வாசிக்கப்பட வேண்டிய இன்னும் அறியப்பட வேண்டிய போற்றப்பட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் தோழர் ஜீவா. அவர் ஆற்றிய களப்பணிகளுக்கு அவருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் இல்லையென்றாலும் அவர் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். தமிழக அரசியலில் வ.உ.சி., திரு.வி.க, ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, சேலம் வரதராஜு நாயுடு, மதுரை வைத்தியநாத ஐயர், கக்கன், அலமேலு மங்கத்தாயார் அம்மையார்., நாவலூர் சோமசுந்தர பாரதி,
கோவை அய்யாக்கண்ணு, மதுரை ஜார்ஜ் ஜோசப் போன்ற பல ஆளுமைகளோடு ஜீவாவும் வாசிக்கப்பட வேண்டிய தலைவர்கள். ஆனால் அவர்களெல்லாம் நம்முடைய கவனத்திற்கு வருவதில்லை. பல போலிகள், தவறான போக்காளிகள் தான் தர்போது மக்களின் நினைவிற்கு வருகின்றனர். தமிழக பண்டைய வரலாறு மட்டுமல்ல இம்மாதிரியான தலைவர்களை பற்றியும் விரிவான பதிவுகள் நூல் வடிவில் வந்தால் தான் நாம் எங்கே இருக்கின்றோம் தமிழக அரசியல் எப்படியெல்லாம் திசை மாறியது, தமிழக அரசியலில் கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகளெல்லாம் எப்படி மறக்கப்பட்டார்கள் என்ற செய்தி புலப்படும்.

காந்தியவாதி, சுயமரியாதை இயக்க வீரர்,கம்யூனிசவாதி,தொழிற்சங்கத்
தலைவர்,தமிழ்ப்பற்றாளர்,இலக்கியவாதி, பத்திரிகையாளர் என  பன்முகத்தன்மை கொண்ட ஜீவா , தன்னை ஒரு நாத்திகரென அறிவித்துக் கொண்டார்.
நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள பூதப்பாண்டியில் 1907 ஆகத்து  21இல் பிறந்தவர். அவர்களின் குலதெய்வமான சொரிமுத்து  ஐயனாரின் நினைவாக 'சொரிமுத்து  என்பதேஅவரின்பெற்றோர்
வைத்த பெயராகும். சிறுவயதிலேயே. 
காந்தியக்கொள்கைகளால்ஈர்கக்கப்
பட்டார். தேசபக்தி நாடக க்கலைஞர் விசுவநாத தாசுடன் பழக்கம் ஏற்பட்டு அவருக்காக சில   நாடகங்கள் எழுதிக்கொடுத்தார். கவிதைகளும் எழுதினார்.
சிறையில் பகத்சிங் எழுதியகடிதங்களை 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதனால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
கலை , இலக்கிய வளர்ச்சிக்காக 'கலை இலக்கியப்பெருமன்றம்' தொடங்கினார். பொதுவுடமைக்கொள்கைகளைப்பரப்ப, தொழிலாளர்  உரிமைக்குக்குரல் கொடுக்க 'ஜனசக்தி'   நாளிதழையும் இலக்கிய வளர்ச்சிக்காக 'தாமரை' இலக்கிய இதழையும் தொடங்கி நடத்தினார்.

"நீங்கள் தான் இந்த தேசத்தின் சொத்து..." என் காந்தியே புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு தீண்டாமைக்கு எதிராக காரைக்குடி அடுத்துள்ள சிராவயலில் 'காந்தி ஆசிரமம்' நடத்தி வந்தார்.
ஜீவா 1963 சனவரி 18 ஆம் நாள் தனது 56 ஆம் வயதில் காலமானார்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts
#தோழர்_ப_ஜீவானந்தம்

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...