Tuesday, January 21, 2020

*#ஷேக்ஸ்பியரின்_கிங்_லீயர் - #லீயர்_அரசன்_ஜஸ்டிஸ்_மகாராஜன்*

*#ஷேக்ஸ்பியரின்_கிங்_லீயர் - 
#லீயர்_அரசன்_ஜஸ்டிஸ்_மகாராஜன்*
————————————————
ஷேக்ஸ்பியரின் King Lear  அதன் தமிழாக்கம் சென்னை   உயர்நீதி
மன்றத்தின்  நீதிபதியாக இருந்த,  இரசிகமணி  டி.கே.சியின் வட்டதொட்டி இயக்கத்தில் பங்கேற்ற ஜஸ்டிஸ் எஸ். மாகாராஜன் இதை லியர் அரசன் என்று 1965ல் தமிழாக்கம் செய்து 1965லும்1971-72லும் என்று மூன்று பதிப்புகளாக வெளிவந்து அன்றைய சென்னை மாகாணத்தில் முக்கிய தமிழுக்கான வரவு என்று அப்பொழதுகொண்டாடப்பட்டது. 

நான்  கல்லூரியில்   1970களில் படிக்கும்போது தமிழ் துணைப்பாடமாக இந்த நூல் மதுரைபல்கலைக்கழகத்தால் பாடப் புத்தகமாகவும் வைக்கப்பட்டது. இதற்கு இராஜாஜி அணிந்துரையும் வழங்கியுள்ளார். அது கீழ்வருமாறு:

‘’ஷேக்ஸ்பியரின் கிங் லீயர் அவருடைய சோக நாடகங்களில் எல்லாம் தலைசிறந்த ஒன்று. ஆனால் கதையின் சோகம் ஆங்கிலேய சூழ்நிலையை சார்ந்திருக்கிறது என்றாலும் கதையில் பொதிந்துள்ள துராசைகளும் பாசங்களும் மனிதர் அனைவருக்கும் பொதுவான பாவச்சுமையும் துயரமும் ஆகும்._ 

_ஸ்ரீ மகாராஜனின் நூலைப் படித்து அதன் பயனாக நம்முடைய கண்கள் கலங்கி, அந்தக் கண்ணீர், வினைப் பயனாக உள்ளங்களில் அமைந்து அல்லற் படுத்தும் துர்குணங்களை கழுவித் தீர்க்கும் என்பது என்னுடைய எண்ணம்._

_கிங் லீயர் தற்காலத் தமிழ்ப் படைப்புகளில் நல்ல மதிப்பும் ஸ்தானமும் பெற்ற ஒரு நூலாகும்.’’
- ராஜாஜி_

நீதித்துறையிலும்,தமிழ்இலக்கியத்திலும் 
ஒரு ஆளுமையாக திகழ்ந்த  ஜஸ்டிஸ் மகாராஜன்   திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றியவர். 2012ல் அவருடையநூற்றாண்டுகொண்டாடப்
பட்டு அவருடைய தமிழ் படைப்புகளை எல்லாம்ஒரேதொகுப்பாகவெளியிடப்
பட்டது. 

நீண்ட காலத்திற்கு பிறகு கோவை சிறுவாணி  வாசகர் மையம்   அதன் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ்  இந்த அரிய நூலை திரும்பவும் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். இந்த பணியில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கிய நாஞ்சில் நாடன் மற்றும் கோவை ரவீந்திரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி அரிய நூல்களை சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து வெளியிட வேண்டும். 

இந்த மாதம் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட இந்த லியர் அரசன் மற்றும் உஷா தீபனின் முழு மனிதன்  என்ற இரண்டு நூல்களையும் அனுப்பி வைத்த பிரகாஷ் அவர்களுக்கு மிக்க  நன்றி.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.01.2020
#கிங்_லீயர்
#ஷேக்ஸ்பியர்
#சிறுவாணி_வாசகர்_மையம்
#இராஜாஜி


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...