Wednesday, April 8, 2020

நான்_பார்த்த_பல்கலைக்கழக துணைவேந்தர்கள்

*நான்_பார்த்த_பல்கலைக்கழக துணைவேந்தர்கள்.*
————————————
நேற்றைக்கு படித்த சான்றிதழ்களை எல்லாம் பல ஆண்டுகளுக்குப் பின் எடுத்துப் பார்த்த போது நான் பார்த்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நினைவுக்கு வந்தனர். 
•தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - மதுரை பல்கலைக்கழகம். தெ.பொ.மீயின் சொந்த ஊர் பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தென்பத்தூர் ஆகும். பின் சென்னையில் சிந்தாதரிப்பேட்டையில் குடியேறினார்.  , •நெ.து. சுந்தரவடிவேலு - சென்னைப் பல்கலைக்கழகம், 
•டாக்டர். ஜி. ஆர். தாமோதரன் - 
ஜி. ஆர். டி  சென்னைப் பல்கலைக்கழகம் கோவை பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தமிழ் அறிவியல் மாத இதழ் கலைக் கதிர் நிறுவன ஆசிரியர், எம்.பி,(பொள்ளாச்சி தொகுதி)எம்.எல்.சி(இரு முறை) யாக இருந்தவர்.
•எஸ். வி. சிட்டிபாபு - மதுரை பல்கலைக்கழகம், வரலாற்று அறிஞர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். கல்லூரிக் கல்வி இயக்குனராக இருந்தார்
•. ஜி. பார்த்தசாரதி - ஜேஎன்யூ புது டில்லி. இவர் இந்திரா காந்திக்கு ஆலோசகர், ஈழத் தமிழர் தலைவர்களுக்கும் இந்திய அரசுக்கும் இலங்கையில் இனப்படுகொலை நடக்கும்போது பாலமாக இருந்தவர். அரசியல் சாசனத்தை வடிவமைக்க காரணமாக இருந்த கோபால்சாமி ஐயங்காரின் மகனாவார். 

தெபொமீ, ஜி. பார்த்தசாரதி,  பழ. நெடுமாறன் அவர்களோடு பலமுறை சந்தித்ததுண்டு. நெடுமாறனின் செய்தி ஏட்டை காமராஜர் வெளியிட தெபொமீ முதல் பிரதியை 1973ல் பெற்றுக் கொண்டார்.எஸ் வி.சிட்டிபாபு வரலாற்று அவையால் நேரடியாக அறிமுகமும் சந்திப்பதுண்டு. 
ஜி. ஆர். தாமோதரன் அவர்களினுடன் நெருக்கமாக இருந்தததுண்டு. அவரோடு அண்ணா சதுக்கத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை மாலை நடைப் பயிற்சி செய்யும்போது பல அன்றாட செய்திகளை விவாதிப்பதுண்டு. 
மு. வரதராசனாரை ஒருமுறை மதுரையில் சந்தித்ததுண்டு. இப்படியான அறிஞர் பெருமக்கள் துணைவேந்தர்களாக தங்கள் பணிக்காலத்தில் தவமாக பணியாற்றியது அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அடையாளத்தையும் கீர்த்தியையும் பெற்றுத் தந்தது. 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
08.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

2023-2024