எனக்கு அனுப்பட்ட வரிகள்
————————————-
என் விபரமறிய வயதில்
நீ ஊர் போற்றும் ஆளாய்
வளர்ந்திருந்தாய்.பின்னும்
கொஞ்சம் கற்க எழுத்துக்கூட்டும்
நாட்களில் நீ நாடறிந்த நாயகனாய்
வளர்ந்திருந்தாய்.விளையாட்டாய்
அன்னாந்து நோக்கும் காலம்
ஒன்றிருந்தது எனக்கு
அப்போது ஒரு மாமலையாய்
நிமிர்ந்திருந்தாய் நான் மலை
தழுவும் முகிலாய் மாறி
மாமழையாய் உன் மீது
களங்கமற்ற அன்பைப்
பொழியத் தொடங்கியிருந்தேன்
மலையும் முகிலும் அவ்வப்போது
உரசுவதுண்டு பெரு மழையின்
பொருட்டாக குளிர்ந்து போகும்
மலையை அதன் பசுமையைக்
கண்டபடியே நகர்வதுண்டு முகிலும்.
-தங்கள் நல விரும்பி
—
ஏமாற்றியவன்,உதாசினப்படுத்தியவன், முதுகில் குத்தியவனென அத்தனை பேரின் முகத்திலும் கரியை பூச ஓடிக்கொண்டிருக்கிறேன்!
-Abe Lincoln

No comments:
Post a Comment