Friday, November 27, 2020

 








நீங்கள் யார் என்பதை அறிய, ஏன் இவ்வாறு நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதை கண்டறிய ஒரு நாளை கூட, ஏன், ஒரு மணி நேரத்தைகூட செலவழிக்க மாட்டீர்கள்.அதுதான் காரணம் உங்களின் சிக்கல்களுக்கு......

முக்கியமானது என்னவெனில், தன்னை அறியும் அறிவே. தன்னை புரிந்துகொள்வது இல்லையெனில், உலகத்தில் ஒழுங்கு, சீர்மை எப்படி வரும்? எண்ணவோட்டத்தின் செயல்பாடு, மனதின் உணர்வுகள், விகாரங்கள், மனதிலிருந்து வெளிப்படும் செயல்கள் ஆகிய அனைத்தை பற்றியும் விசாரணை செய்யாமல், ஒருவரால் உலகத்தில் அமைதி, ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுவரமுடியாது.

ஆகவே, தன்னைப்பற்றி கற்பதே முதன்மையானது, அதுவே முக்கியம். அது, தன்னிலிருந்து தப்பிக்கும் செயல் அல்ல, தன்னைப் பற்றி கற்பது செயலற்ற நிலையல்ல. மாறாக, அதற்கு, தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் உணர்ந்து கொள்ளும் அசாதாரண விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அந்த விழிப்புணர்வில் எடைபோடும் செயலோ, அதிருப்தியுறும் உணர்வோ, குறைகூறுவதோ இருக்கலாகாது.

உங்கள் அன்றாட வாழ்க்கையில் எப்படி அனுகுமுறை என்பதை முழுவதுமாக இன்றைய பார்க்கும் விழிப்புணரவை உங்கள் மனது உங்களை குறிப்பிட்ட திசையில் குறுகிவிடச்செய்யாது. அதற்கு மாறாக, உங்கள் மன விரிவாக்கும் வேண்டும். விசால பின் நவீனத்துவ விழிப்புணர்வு ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு தெளிவையும், அமைதியும், செல்ல வேண்டிய பாதையை காட்டும்.

No comments:

Post a Comment

2023-2024