Friday, November 27, 2020

 

*#நேர்மையின்_அடையாளம்*
#மத்திய_அமைச்சராக_பொறுப்பேற்க #டில்லி_செல்ல_விமான_டிக்கெட் #வாங்கவே_பணமில்லை
————————————————






இந்திரா காந்தி பிறப்பித்த அவசர நிலை காலம் முடிந்து 1977ல்தேர்தல் நடந்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் அமைச்சரவை மத்தியில் அமைந்தது. மத்திய சென்னையில் வெற்றிப் பெற்ற *பேராசிரியர். பா.ராமச்சந்திரன்* மத்திய மின் துறை அமைச்சராக அறிவிக்கப் படுகின்றார். அவர் சென்னையிலிருந்து பதவியேற்க டெல்லி போக வேண்டும். விமான டிக்கெட் வாங்க கையில் பணமில்லை. திகைக்கின்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே செல்ல வேண்டும். அவருக்கு தேர்தல் பணியில் உதவியாக உடன் இருந்த இராம்மூர்த்தி தேர்தல் செலவு போக 700 ரூபாய் மிச்சம் இருக்கின்றது அதோடு சேர்த்து நண்பர்களிடம் வசூல் செய்து 1500 வரை கையில் கொடுத்து அவர் டெல்லி சென்று மத்திய அமைச்சரவையில் அமைச்சராபார்.

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, பிரதமர் மொரார்ஜி தேசாய் அனைவரும் ராஜ்தானி காந்தி நினைவிடத்தில் நேர்மையான அமைச்சராக பணியாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்து குடியரசுத் தலைவர் முன் பொறுப்பேற்றனர். பா. இராமச்சந்திரன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டம் கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஸ்தாபன காங்கிரசில் தலைவராக இருந்தபோது அவரது தலைமையின் கீழ் மாணவர் காங்கிரஸ் பணிகளை செய்தோம். பெரணமல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

அப்போது பழ நெடுமாறன், குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, தண்டாயுதபாணி ஆகியோர் காங்கிரசின் பொதுச் செயலாளர்கள். பா. இராமச்சந்திரன் எளிமையான மனிதர். என் மீது எப்போதும் அன்பு காட்டுவார். ஒரு முறை என்னுடைய கிராமத்திற்கும் வந்திருக்கிறார். கேரள ஆளுநராகவும் பதவி வகித்தார். இப்படியான அரசியலாளர்களை எல்லாம் இப்போது பார்க்க முடியாது. மத்திய அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய ஒருவர் விமான டிக்கெட் வாங்கவே சிரமப்பட்டார் என்றால் அதவே அவரின் நேர்மையின் அடையாளம்.

#பேராசிரியர்_பா_ராமச்சந்திரன்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
02.06.2020
#ksrpost

No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...