Tuesday, August 25, 2015

தகர்க்கப்பட்ட 2000ஆண்டுகள் பழமையான தேவாலயம் - பால் ஷமின்.





கடந்த ஜூன் மாதம் சிரியாவின் பல்மைரா நகரின் பழம்பெரும் தேவாலயங்கள் இரண்டினை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்து இருந்தனர். கூடவே பல்மைராவில் இருந்த ரோமானியர் கால நினைவுச் சின்னங்கள் பலவற்றையும் தகர்த்தெடுத்தனர். இங்குள்ள பால் ஷமின் தேவாலயமும் 2000ஆண்டுகள் பழமையானது. நேற்று முன்தினம் பால் ஷமின் கோவிலும் தீவிரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் பழமையான அந்தத் தேவாலயம் அடியோடு தரைமட்டமானது. சிரியாவின் பழம்பொருள் பாதுகாப்புத் துறையின் தலைவர் மமூன் அப்துல்கரீம் என் கண்கள் முன்பாகவே பல்மைரா நகரம் அழிக்கப்பட்டு வருகிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டார். பால் ஷமின் தேவாலயம் தகர்க்கப்பட்ட பின்பு, தங்கப் புதையல் ஏதேனும் இருக்கலாம் என்று கருதி தீவிரவாதிகள் அந்த இடத்தை தோண்டியும் இருக்கிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்மைரா நகரை கைப்பற்றுவதற்கு சிலமாதங்களுக்கு முன்பாகவே, அந்த நகரின் புராதன தேவாலயங்களில் உள்ள விலைமதிப்பு மிகுந்த அனைத்து சிலைகளையும் சிரியா அரசாங்கம் அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. இதனால் அந்த சிலைகள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளது. The destruction of the temple of baalshamin, located in the historic city of palmyra. This act wild deserves our strongest condemnation. The Director General of UNESCO, Irina Bokova, stated: "" The systematic destruction of the cultural symbols that embody the cultural diversity Syria reveals the true intention of such attacks: depriving the Syrian people from her to know, of their identity and of their history (...) The killer dáesh to people and destroys sites but can not silence the #history and will fail in their attempt to delete this great culture of the memory of the world ". According to information received, the temple constuido nearly more than 2.000 years, he would have been dinamitado on Sunday 23 th of August. The inside would have been seriously damaged and the columns that we have seen around would have collapsed. -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 25-08-2015. #Palmyra #KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...