Saturday, August 29, 2015

மகிழ்ச்சியான இளவரசன்- Happy Prince- Oscar Wilde,




1960 இறுதிகளில் அரசு உயர்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி (அதாவது பள்ளி இறுதிவகுப்பு) யில் ஆங்கிலப் பாடத்தில் , ஆஸ்கர் ஒயில்டின் “ Happy Prince,” மகிழ்ச்சியான இளவரசன் என்ற பாடம் இருந்தது.

அப்போது பள்ளி இறுதி வகுப்புக்கான ஆங்கிலம், தமிழ் மொழிப்பாட புத்தகங்கள் சென்னைப் பல்கலைக்கழகம், திருச்சி கீதா அச்சகத்தில் அச்சிட்டு, நீளமான வடிவில் வெளியிடும். அதில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினையும் (Logo) இருக்கும்.

நான் படித்த அந்த புத்தகத்தில் இடம்பெற்ற ஹேப்பி பிரின்ஸ் இன்றைக்கும் நினைவில் உள்ள கதையாகும். அப்போது , I will stay with you one night longer,’ said the Swallow, ‘but I cannot pluck out your eye. You would be quite blind then.’

‘Swallow, Swallow, little Swallow,’ said the Prince, ‘do as I command you.’இந்த வார்க்கியங்களை தன்னிச்சையாக உதடுகள் வேடிக்கையாக உச்சரிக்கும். 46ஆண்டுகளுக்கும் முன்னால் உள்ள இந்த நினைவுகள் இந்துஸ்தான் டைம்ஸ் இதழைப் பார்க்கும் போது திரும்பவும் நினைவுக்கு வந்ததனால் இந்தப் பதிவு.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஒயில்ட் எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். மிகச் சிறிய வயதிலேயே எழுதத் தொடங்கியவர். ஆங்கில இலக்கிய தளத்தில் மகத்தான இடத்தைப் பெற்றவர்.

இந்த கதை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பில் (NCBH ) யூமா வாசுகி தமிழாக்கம் செய்து, “சந்தோஷமான இளவரசன் ” என்று வெளியாகியுள்ளது.
இவருடைய கதைகளில் நேசம், அரவணைப்பு, அன்பு என்ற விஷயங்களைச் சொல்வதுண்டு. குழந்தைகளுக்கான கதைகளையும் ரசித்துப் படிக்கக்கூடிய அளவில் எழுதியுள்ளார்.

“In the square below,’ said the Happy Prince, ‘there stands a little match-girl. She has let her matches fall in the gutter, and they are all spoiled. Her father will beat her if she does not bring home some money, and she is crying. She has no shoes or stockings, and her little head is bare. Pluck out my other eye, and give it to her, and her father will not beat her.’

‘I will stay with you one night longer,’ said the Swallow, ‘but I cannot pluck out your eye. You would be quite blind then.’

‘Swallow, Swallow, little Swallow,’ said the Prince, ‘do as I command you.’

So he plucked out the Prince’s other eye, and darted down with it. He swooped past the match-girl, and slipped the jewel into the palm of her hand. ‘What a lovely bit of glass,’ cried the little girl; and she ran home, laughing.

Then the Swallow came back to the Prince. ‘You are blind now,’ he said, ‘so I will stay with you always.”

― Oscar Wilde, The Happy Prince


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...