Monday, August 3, 2015

பாராட்டப்படவேண்டியவர்களைப் பாராட்ட வேண்டும்.




கடந்த 01-08-2015 சனிகிழமை அன்று, என்னுடைய உறவினரும், கவிஞர் லீனா மணிமேகலையின் தாயாருமான  ரமா அம்மையாரின்  உழைப்பைக் கண்டு மெய் சிலிர்த்தேன்.

திருவில்லிப்புத்தூர் , கிருஷ்ணன் கோயில்- வத்திராயிருப்பு சாலைக்கு அருகே உள்ள, புதுப்பட்டி கிராமத்தில்  மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில்  குண்டும் குழியுமாக இருந்த தனது நிலத்தைத் திருத்தி மாமரம், தென்னை, எலுமிச்சை, வாழை, பலா, நாவல் போன்ற மரங்களும், மல்லிகை, செவ்வந்தி, கதம்பம், மனோரஞ்சிதம் என பல்வகை பூச்செடிகொடிகளும் என அற்புதமான சோலையை உருவாக்கியுள்ளார்.


பாதை வசதிகள் போன்ற அடிப்படைகூட  இல்லாத மலைக்காட்டில், கடுமையாக உழைத்து இந்தச் சோலையை  உருவாக்கி இருப்பதைப் பார்க்கும் போது, அவர்களைப் பாராட்ட வேண்டிய பொறுப்பு எனக்கும், ச.தங்கவேலு எம்.பி அவர்களுக்கும் ஏற்பட்டது.

ஆரம்பகட்டத்தில், இந்த நிலத்தைத் திருத்த  கால்நடையாகச் சென்று,  கிண்ற்று நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப்பாசன முறையில், மோட்டார் மூலம் நீர்ப்பாய்ச்சி அந்தச் சோலையை உருவாக்கியுள்ளார்.

அவருடைய கணவர் பேராசிரியர்.ரகுபதி திருச்சி பிஷப் கல்லூரியில் பணியாற்றி நாற்பத்தி எட்டு வயதிலே காலமான பின்பு, தனியாக உழைத்துச் சாதித்துள்ளார்.  பாராட்டப் படவேண்டியவர்கள் பாராட்டப் படவேண்டாமா. அந்த தனியொரு மனுஷிக்கு நமது சல்யூட்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-08-2015


Leena Manimekalai​ 

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...