Tuesday, August 25, 2015

கதைசொல்லி - Kathaisolli






"கதைசொல்லி" இந்த காலாண்டிதழ்  www.kathaisolli.in இணையதளத்தில் மின்னதழாகப் பதிவேற்றப்பட்டுள்ளது.  விருப்பமுள்ளவர்கள்  இணையத்தில் வாசிக்கலாம்.   இதழ் அச்சுப் பிரதிகள் தூதஞ்சல் மூலமாகவும், அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைவருக்கும் வந்து சேர்ந்துவிடும் என்று நம்புகிறேன். 

இந்த இதழில், கி.ரா அவர்கள்,  தனது பங்கங்களில் தன் நண்பர் ஜெயகாந்தனையும், கு.அழகிரிசாமி பற்றியும் சிலாகித்துள்ளார்.  தோப்பில் மீரானுடைய “தென்பத்தன் பெருமைகள்” தொடர் ஏழாவது பாகம் வந்துள்ளது. 
நாவலாசிரியர் பொன்னீலன்,  “வளர்தல்” என்ற படைப்பில், சிறார்களுடைய மகிழ்ச்சியான பால்ய காலங்களை காட்சிப்படுத்திருக்கிறார். 

கவிஞர்.கலாப்ரியா நாட்டுப்புற பாணியில் உலவும் மகாபாரதக் கதைகளில் சிலவற்றை தொகுத்துள்ளார். நாட்டுப்புறப் படைப்பாளி கழனியூரன், தமிழ்பாடல் இயற்றி, தான் இழந்த ஊத்துமலை ஜமீனை திரும்பப் பெற்ற  “பூசைத்தாயார்” பற்றின வரலாற்றுப் பதிவை நாட்டுப்புற தரவுகளோடு விவரித்துள்ளார்.

முனைவர் க.பஞ்சாங்கம் எழுதியுள்ள, கி.ராவின்  “நண்பர்களோடு நான்” நூலின் மதிப்புரை.  சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் பிரெஞ்சு சிறுகதையின் தமிழ் மொழியாக்கம். 

நாட்டுப்புற எழுத்தாளர். சூரங்குடி. அ. முத்தானந்தத்தின் தெற்கத்திக் கதை, இளம்படைப்பாளி ஏக்நாத்தின் அம்பை வட்டாரச் சிறுகதை,  பாரததேவியின் பழைய மேற்கு முகவை மாவட்ட வட்டார வழக்குப் படைப்பு, கனவுப் பிரியன், கார்த்திக் புகழேந்தி, என இளம் புதிய படைப்பாளிகளுடைய படைப்புகளோடும் மற்றும் என்னுடைய குறிப்புகளோடும் இந்த இதழ் வெளிவந்துள்ளது. 

நாட்டுப்புற இலக்கியங்களுக்காகவே 1994லிருந்து “கதைசொல்லி” கத்தாய இதழாக வெளிவருகிறது. தங்களுக்கு வாய்ப்பிருந்தால் கதைசொல்லியின் இதழ் வழியே கிராமிய வழக்காறுகளையும், படைப்புகளையும் அசைபோட்டு தங்களின் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டுகிறேன். 

அன்புடன்,
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

பொதிகை-பொருநை-கரிசல் 
rkkurunji@gmail.com

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...