Wednesday, August 5, 2015

செண்பக வல்லி அணையும் அணையா அரசியலும் - சுப.உதயகுமாரன்.










காலச்சுவடு ஆகஸ்டு 2015 இதழில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர், அன்புக்குரிய சகோதரர் திரு. சுப. உதயகுமாரன் அவர்கள், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் வரை பயன்பெறும் செண்பகவல்லி அணையைப் பற்றி,  “செண்பகவல்லி அணையும்   அணையா அரசியலும்” என்ற தலைப்பில் பத்தி எழுதியுள்ளார்கள். 

செண்பகவல்லி அணை பற்றிய தரவுகளோடு, குறிப்பாக என்னுடைய உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நதிநீர் இணைப்பு வழக்கில் குறிப்பிடப்பட்ட, குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லைமாவட்டத்தில் அடவிநயினார், அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறு இணைப்பு, உள்ளாறு, செண்பகவல்லி அணை, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி, காவேரி, பாலாறு, பொன்னியாறு போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான நீர் ஆதாரத் திட்டங்கள்  பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

#செண்பகவல்லி அணையைக் குறித்து,  திரு. சுப.உதயகுமாரன் அவர்கள் எழுதிய பத்தியில், அண்ணன் பெ.மணியரசன் அவர்களின் தரவுகளோடு , என்னுடைய குறிப்புகளைக் கொண்டு எழுதியுள்ளார்.  

என்னுடைய பல கட்டுரைகளையும், குறிப்புகளையும் நாடாளுமன்றத்தில் அந்த அவைகளின் உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். பலர் என்னுடைய கட்டுரையை அப்படியே எழுத்து வடிவம் மட்டும் மாற்றி திருத்தி எழுதுயதும் உண்டு. பெயரை மட்டும் குறிப்பிடமாட்டார்கள். 

ஆனால் திரு.சுப.உதயகுமார் அவர்கள் தரவுகள் பெற்ற 
அண்ணன் பெ. மணியரசன் அவர்களையும் என்னையும் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

டாக்டர் சுப உதயகுமார் பிரச்சனைகளை நேர்மையாகக் கையாள்பவர்.  அப்படிப்பட்ட நேர்மையாளர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகின்றது என்று சொல்லும் அற்பர்கள் புள்ளறிவாளர்களுக்குச் சமமானவர்கள்.  

நன்றி திரு.சுப.உதயகுமார் அவர்களுக்கு...





-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 
05-08-2015



No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...