Monday, August 10, 2015

விவசாயிகள் தற்கொலை- Farmers suicide



கடந்த 22-06-2015 இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேடு, சிறிய கடன்களைத் தங்களின் பெரிய தொல்லையாகக் கருதி, மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் விபரங்களை உரிய புள்ளிவிபரப் படத்துடன் வெளியிட்டுள்ளது.

மானம் உயர்ந்ததெனக் கருதி, பத்தாயிரம் ரூபாய் கடனுக்காகக் கூட தற்கொலை செய்துகொள்கின்றனர் விவசாயிகள் என்று அந்த செய்தி கூறுகிறது. நாட்டில் கொள்ளையடிக்கின்றவர்களும், சுரண்டுகின்றவர்களும் நாளுக்கு நாள் கொழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கடன்வாங்கி, நிலத்தில் உழைத்து பாடுபடும் அப்பாவி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்களே இதற்கு ஒரு தீர்வு என்பதே கிடையாதா?

அறம், நெறி எல்லாம் எங்கே சென்றுவிட்டது? ஒயற்கையின் நீதி எங்கே? நேற்றுவரை ஒரு லுங்கியை மட்டும் கட்டிக் கொ|ண்டு இருந்தவர் எந்தவிதமான உழைப்பும் இல்லாமல், பல லட்சம் மதிப்புள்ள ஏசி காரில் செல்கின்றார். உழைத்த அப்பாவி விவசாயி எவ்வளவு நிலங்கள் சொந்தமாக இருந்தாலும் பக்கிரியாகத் தான் காட்சியளிக்கின்றார்.

ஒருவேளை காந்தி தேசம் என்பதால்,  எப்படி காந்தி தன்னுடைய ஆடைகளை மதுரை ஒப்புலா படித்துறையில் களைந்ததுவிட்டு அரை நிர்வாணப் பக்கிரி என்று தன்னை அழைத்துக் கொண்டாரோ அப்படி அவர் வழியில் விவசாயிகளும் கோமணம் தான் மிச்சம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்களோ என்ற எண்ணம் தான் நமக்குள் எழுகிறது.

விவசாயத் தற்கொலையில், மகராஷ்ட்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், குஜராத் என்ற வரிசைக்கிரமத்தில் தற்கொலைகள் நடந்துள்ளன.  கடந்த 2014ல் மட்டும் தமிழ்நாட்டில் 63பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த ஆண்டு கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை.

See also : http://ksr1956blog.blogspot.in/2015/08/good-agricultural-practices-help-raise.html#uds-search-results




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-08-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KsRadhakrishnan‬

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...