Thursday, January 15, 2015

தேர்தலில் வாக்களிப்பது கட்டாயப்படுத்துதல்
பன்னாட்டு அளவில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பது கடமை அந்த கடமையை அடிப்படை கடமையாக்க வேண்டுமென்று தேர்தல் சீர்த்திருதங்கள் பற்றி விவாதங்கள் நடைபெறுகின்றன . இன்றைக்கு உலகளவில் ஆஸ்திரேலியா, சிங்கபூர், சைப்ரஸ், பெல்ஜியம், அர்ஜென்டினா, உருகுவே , பிரேசில், பெரூ, ஈக்வேடர், நவ்ரோ போன்ற பல நாடுகளில் வாக்களிப்பது கடமையாக்கப்பட்டது.
பெல்ஜியத்தில் 1892 லிருந்து வாக்களிப்பது கடமை என்று சட்டமாக்கப்பட்டது. அவ்வாறு வாக்களிக்கவில்லை என்றால் அங்கு அரசு மற்ற பணிகளில் சேர முடியாது.
ஆஸ்திரேலியாவில் வாக்களிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு அபராதம் செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும். கிரேக்கத்தில் பொது தேர்தலில் வக்களிக்கவிட்டால் கடவு சீட்டு, ஓட்டுனர் உரிமம் வழங்கபடாது. இதே போல் பிரேசில், சிலி , ஸ்விட்சர்லாந்து, வெனிசுலா, ஆகிய நாடுகளிலும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என சட்டங்கள் உள்ளது. இந்தியாவில் குஜராத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பது அவசியம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் கிட்டத்தட்ட 23 நாடுகளில் வாக்களிப்பது அவசியம், கடமை அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கு தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படும். இதே போல் இந்தியாவிலும் எல்லோரும் வாக்களிக்க வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிதுவ சட்டத்தையும் திருத்த வேண்டும்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...