———————————————————-
தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர்.
கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சர்க்கார் சாம்பகுளம் , செங்காளிபாளையம்- வையம்பாளையம் கிராமத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தார் நாராயணசாமி. பெற்றோர் சின்னம்ம நாயுடு - அரங்கநாயகி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணசாமி அதன் பிறகு தன்னை முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். 1957முதலே உழவர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டார் நாராயணசாமி. உழவர்கள் தனித்து இருப்பதாலேயே தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற முடிவதில்லை என்பதை உணர்ந்து உழவர்கள் இயக்கத்தை கட்டமைப்பதிலே கவனம் செலுத்தினார். 1968-ல் கோவை வட்ட உழவர் இயக்கம் 1969-ல் கோவை மாவட்ட உழவர் இயக்கம், 1970-ல் தமிழக உழவர் இயக்கம் என உழவர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கட்டமைத்தார்.
1970-லிருந்து 1984 வரை தமிழகத்தில் நடைபெற்ற உழவர்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார் நாராயணசாமி. உழவர் போராட்டங்களிலே கலந்து கொண்டதற்காக பல முறை சிறை சென்றார். 1980-க்கு பிறகு இந்திய அளவில் உழவர்களை திரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் நாராயணசாமி. அதன் அடிப்படையில் கர்நாடகாவில்பேராசிரியர் நஞ்சுண்ட சாமியையும், ஆந்திராவில் செங்காள் ரெட்டியையும் மராட்டியத்தில் சரத் ஜோசியையும் உத்தரப்பிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத்தையும் சந்தித்து உழவர் இயக்கத்தை கட்டமைக்க தூண்டினார். அதன் பிறகே இம்மாநிலங்களில் உழவர் இயக்கங்கள் ஏறபடுத்தப்பட்டன. கட்டை வண்டிப் போராட்டம் முக்கியமாக நிகழ்ந்தது.
1970-80களில் நாராயணசாமி முன் வைத்த முதன்மையான கோரிக்கைகளில் சில;
• உழவுக்கான மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும்.
• கட்ட இயலாத நிலையில் உள்ள உழவர்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
• வேளாண் பொருட்களுக்கு அரசு அடிப்படை விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
• வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்.
46 பேர் உயிரை துப்பாக்கிக்கு குண்டுக்கு பலி கொடுத்து வாங்கியது
இலவச மின்சாரம் பெற போராடி துப்பாக்கி சூட்டுக்கு தன்னுடைய உயிரை கொடுத்த
1. ஆயிக்கவுண்டர்,பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
2. மாரப்பன் (37) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
3. ராமசாமி (25) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
4. ஆறுமுகம் (25) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
5. முத்துச்சாமிநாயக்கர் (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
6. சாந்தமூர்த்தி (20) 05.07.1972Nr பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
7. மணி (30) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
8 . ராமசாமி (முத்து) (32) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம்,
சேலம்
9.. பிச்சைமுத்து (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
10. கோவிந்தராஜுலுநாயுடு (16) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
11. விவேகானந்தன் (35) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
12 . ராமசாமி (23) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
13. முத்துக்குமாரசாமி (22) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா
14. சுப்பையன் (32) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா
15. கந்தசாமி நாயக்கர் (55) 05.07.1972 பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா
16. சீனிவாசநாயக்கர் (18) 05.07.1972 சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா
17. கந்தசாமிரெட்டியார் (42) 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா
18. நம்மாழ்வார்நாயுடு (20) 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தலுகா
19. கிருஷ்ணசாமி நாயக்கர் கோவை சிறையில்.
20. பெரியகருப்பன் திருச்சி சிறையில்.
21. நாச்சிமுத்துக்கவுண்டர் (50) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
22. வி.சுப்ரமணியன் (30) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
23. பி.சின்னசாமி கவுண்டர் (51) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
24. கே.குப்புசாமி (29) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
25. பி.கிருஷ்ணமூர்த்தி (25) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
26. பி.மணிக்ககவுண்டர் (52) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
27. ஆரோக்கியசாமி (50) 10.04.1978 நொச்சியோடைப்பட்டி, திண்டுக்கல் தாலுகா
28. முருகேசக்கவுண்டர் (47) 11.04.1978 ஒடுகத்தூர், வேலூர் தாலுகா, (வா.ஆ)
29. ஆர்.அரசுத்தேவர் (39) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
30. பி.சர்க்கரை தேவர் (35) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
31.வி.புலியுடை தேவர் (32) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
32. முத்து வேலம்மாள் (52) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
33. வி. பாக்யத்தாள் (37) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
34. மகாலிங்கம் (19) 23.04.1979 உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா
35. வேலுச்சாமி (34) 23.04.1979 உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா
36. சாத்தூரப்பநாயக்கர் (56) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
37.வெங்கடசாமி நாயக்கர் (55) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
38. வரதராஜ் நாயக்கர் (32) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
39. என்.வெங்கடசாமி நாயக்கர்(22) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
40. ரவீந்திரன் (17) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
41. முரளி (13) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
42. மணி (17) 31.12.1980 டி.சி.கண்டிகை, திருத்தணி தாலுகா
43. ஏழுமலை (22) 31.12.1980 வீரப்பார், பண்ருட்டி தாலுகா, கட்லூர்மாவட்டம்.
44. கி. துளசிமணி சித்தோடு கங்கார்புரம், பவானி வட்டம்
45. எத்திராஜ நாயக்கர் - 29.03.1993 வெங்கடாசலபுரம் தாலுகா, சங்கரன்கோவில் வட்டம்
46. ஜோசப் இருதய ரெட்டியார் - 29.03.1993 அகிலாண்டபுரம், ஒட்டபிடாரம் வட்டம்.
எங்கள் கிராமத்தில் 1980 இறுதியில் டிச. 31இல் ஆறு பேர் துப்பாக்கி சூட்டில்
இறந்தனர்.
விவசாயிகள் போராட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, கோவை விவசாயிகள் தாலுகா, ஜில்லா அளவில் குழு அமைத்து போராட்டம் நடத்தி, அதன் வளர்ச்சியின் பெருக்கமாக தமிழகம் தழுவிய அளவில் அதனை போராட்ட வடிமாக மாற்றி காட்டியவர் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள்.
அவர் திமுக கூட்டணியில் இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு சோ,அழகர்சாமி அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய வந்தவர்,அன்று பிரச்சாரம் முடித்துவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் 20.12.1984 ஆம் தேதியில் தங்கி இருந்தபோது, அன்று இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் நெஞ்சி வலி ஏற்பட்டு மறைந்து போனார். அன்றைக்கு அவர் உடன் இருந்தவர்களில் நானும் ஒருவன். அன்றைக்கு கங்கர்சல்பட்டி கென்னினி பெருமாள்சாமி, பிச்சை தலைவன்பட்டி கென்னினி ராமசாமி, புளியங்குளம் கானப்பாடி பெருமாள்சாமி,, சத்திரப்பட்டியை சேர்ந்த ராமசுப்பு, எங்கள் ஊர் ராமானுஜம் ஆகியோர் சிலர் உடன் இருந்தார்கள். நானும் அந்த அறையில் தான் அவருடன் தான் தங்கி இருந்தேன். நாராயணசாமி நாயுடு இறந்த செய்தி காட்டு தீயாக பரவி, பயணியர் விடுதி முன்பு மிகப் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. இப்படி அய்யாவுடன் நானும் வையம்பாளையம் வரை அவரின் இறுதி பயணத்தில் பயணித்தேன் என்ற பெருமித உணர்வு இன்னும் மறக்க முடியாத நினைவுகள் ஆகும்.
அதன் பிறகு 1993ஆம் ஆண்டு கோவில்பட்டியில் மிகப் பெரிய ஊர்வலம் விவசாயிகள் நடத்தினார்கள். மேற்படி ஊர்வலத்தின் தொடக்கத்திலே விவசாயிகளுக்கும் போலீஸ்க்கும் மிகப் பெரிய கலவரம் மூண்டது அந்த கலவரத்தில் வெங்கடாச்சலபுரம் எத்திராஜ் நாயக்கர், அகிலண்டபுரம் ஜோசப் இருதய ரெட்டியார் ஆகியோர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். அவர்களுக்கு நீதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, புதைக்கப்பட்ட ஜோசப் இருதய ரெட்டியார் உடலை மீண்டும் தோண்டி எடுத்து, பிண கூராய்வு (Re postmortem)நடத்தி துப்பாக்கி சூடு காரணமாக தான் மரணம் நிகழ்ந்தது என்று உறுதியூட்டி, நிவாரணம் பெற்று கொடுத்தேன். அன்றைய தேதியில் மாவட்ட ஆட்சியர், கோவில்பட்டி கோட்டாச்சியர் மற்றும் அன்றைய ஆட்சியாளர்கள் என்னை எவ்ளோ வேண்டி கொண்டும் நான் கேட்காமல் விவசாயிகள் பக்கம் போராடி நிவாரணம் பெற்று கொடுத்தத்துடன் அரசாங்கம் செய்தது தவறு என்று நிரூபணம் செய்தேன். இந்த சம்பவம் குறித்தான விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணிய விசாரணை குழுவை முதல்வர் ஜெயலலிதா அன்று அமைத்தார். இந்த விசாரணை குழுவில்
கோவில்பட்டி, சென்னையில் நான் ஆஜராகி எனது கடமையை செய்தேன்.
அதன் பிறகு பல்வேறு போராட்டங்களில் ஏற்பட்ட கலவரத்தால் விவசாயிகளின் உரிமை காக்க இறந்த போன நபர்களின் பட்டியலை 1998 இல் நான் தான் தயார் செய்து வெளியிட்டேன். கடந்த 2014 எனது சமூக ஊடகங்களில் இநன 46 பேர் பட்டியலை வெளியிட்டேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாரிசுகளுக்கு உரிய முறையில் இழப்பீடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழங்கினார்கள்.
ஆகவே, விவசாயிகளுக்காக நான் பல்வேறு பணிகளை செய்து உள்ளேன் என்ற பெருமிதம் எனக்குள்ளே உண்டு.இன்று உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு மறைந்த தினத்தில் அவர் செய்த மகத்தான தியாகத்தை நினைவு கூர்கிறேன். அதே போல் தமிழகம் முழுவதும் விவசாயிகளின் உரிமைக்காக போராடி, ஆளும் தரப்பினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு தன்னுயிர் தந்து தியாகம் செய்த விவசாயிகளை இன்னானில் அவர்களுடைய நினைவை போற்றுவோம்.
கோவில்பட்டியில், நாராயணசாமி நாயுடு
அவர்களின் நூற்றாண்டில் எனது சொந்த இடத்தில் அவரது சிலை வைக்கவும், எனது தமிழக விவசாய போராட்ட வரலாறு நூலை வெளியிட திட்டங்கள் உள்ளன.
#விவசாயிகள்சங்கம்
#நாராயணசாமிநாயுடு
#விவசாயிகள்போராட்டம்
#Narayanasamynaidu
#tamilnadufarmersprotest
#taminaduagricultristprotest
#kovilpatti
#ksrposts
#கேஎஸ்ஆர்போஸ்ட்
21-12-2024
No comments:
Post a Comment