Thursday, December 12, 2024

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..

இன்றெனை வருத்தும்

இன்னல்கள் மாய்க.

நன்மை வந்தெய்துக

தீதெல்லாம் நலிக....

~  பாரதி  

அவரவர் வாழ்க்கையில் 

ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்அந்த

நினைவுகள் நெஞ்சினில் 

திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…….. 


நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..


என் மௌணத்தை சிறைபிடித்து...தனிமையை ஆட்கொண்டு..ஏகாந்தத்தை வசப்படுத்திய நினைவுகள்..சுமையானாலும்..




சுகமாய்தான்...


இதில் புனிதம் என்று ஏதும் உள்ளதா? 


இதில் சிந்தனையால் தீண்டப்படாத ஒன்று? 


தூய்மை, புனிதம் என்று அழைப்பதை நாம் தேவாலயங்களில் சின்னங்களாக, அடையாளங்களாக வைத்துள்ளோம் - கன்னி மேரி, கிறிஸ்து, சிலுவை என. 


இந்தியாவிலும், பௌத்த நாடுகளிலும் அவற்றின் குறிப்பிட்ட சின்னங்கள், உருவங்கள் உள்ளன - அவை புனிதமானவை: பெயர், சிற்பம், உருவம், சின்னம். 


ஆனால் வாழ்க்கையில் புனிதமான ஒன்று இருக்கிறதா?


புனிதமானது என்பது மரணமில்லாதது, காலமற்றது - தொடக்கமும் முடிவும் இல்லாதது.


உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது, யாராலும் கண்டுபிடிக்க முடியாது.


புனிதம் என்று நீங்கள் நினைப்பதை கைவிடும்போது அது வரக்கூடும்.


மதங்கள், அவற்றின் பிம்பங்கள், அவற்றின் கோரிக்கைகள், மற்றும் நம்பிக்கைகள், அவர்களின் சடங்குகள், கோட்பாடுகள், அனைத்தும் புரிந்து கொள்ளப்பட்டு முற்றிலும் நிராகரிக்கப்படும் போது, ​​புனித நூல்கள், குருமார்கள், பின்பற்றுபவர் என யாரும் இல்லாதபோது, ​​​​அந்த அமைதியின் மகத்தான தரத்தில், தன்மையில், சிந்தனையால் தொட முடியாத ஒன்று வரக்கூடும். 


ஏனென்றால் அந்த அமைதி சிந்தனையால் உருவாக்கப்படாத ஒன்று.


காலச் சக்கரம்...

இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....

முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....

நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....

ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட

பரவாயில்லைனு தோணும்.....

அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்....

எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!

காலமாற்றம்....காலச்சுழற்சி...கால நேரம்....!

பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!

ஆணவம் எல்லாம்பணிவா மாறும்....!

அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!

மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!

எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ....

அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!

எதற்காக ஓடினோம்....

எதற்காக ஆசைப்பட்டோம்....

எதற்காக எதைச் செய்தோம்.....

என்ற காரணங்கள் எல்லாமே .....

காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!

தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து

ஆட விடுவதும் காலம்தான்...

அதன் பின் ஆட்டத்தை அடக்கி....

மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும்

அதே காலம்தான்....!

வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,...

உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!

வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.....

அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்....


எனக்கு நடிக்க தெரியாத தால் என்னை நிறைய பேருக்கு பிடிப்பதில்லை நடிப்பதினால் நிறைய பேரை எனக்கு பிடிப்பதில்லை... !!


வாழ்க்கைக்கு எது தேவை பணமா, நிம்மதியா?


முதலில் வாழ்க்கையில் நிம்மதி இருந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். வாழ்வில் இரண்டுமே தேவைதான். அதை நாம் அளவோடு வைப்பதும் அளவுக்கு மேல் வைப்பது தான் தவறு. 

உதாரணமாக கூறினால் நாம் ஒரு வேலைக்கு செல்லும் முன்பு மனம் நிம்மதியாக இருந்தால்தான் வேலை பூர்த்தி அடையும்.


ஆடம்பர வாழ்க்கைக்கும், அற்ப சுகத்திற்கும் பணம் மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் ஒருவேளை கஞ்சி குடித்தாலும் மனதை நிம்மதியோடு குடித்தால் அதுவே போதுமான வாழ்க்கையாகும்.


திருவோட்டினை எடுத்துக்கொண்டு தெருக்கடையில் யாசகம் பெறும் மனிதரை பாருங்கள்.


அவர்களுக்கு போதுமான பணமும் போதுமான உணவும் சாலை ஓரத்தில் உறங்க இடமும் இருப்பதால் என்னவோ அவர்களுக்கு,


ஆடம்பரமா அப்படி என்றால் என்ன? நிம்மதியா அப்படி என்றால் என்ன? என்ற கேள்விக்கு நம்மிடம் அவ்வாறு கேட்பார்கள்.


அளவிற்கு அதிகமான பணம் இருப்பவரால் தான் மனதில் நிம்மதியற்று இருப்பார்கள். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.


வாழக்கையில் ஆயிரம் கவலைகள் வலிகள் இருந்தாலும், முகத்தில் புன்னகையெனும் முகமூடியை அணிந்து கொண்டே வாழ்கின்றனர் பலர்.


சுமைகளோடே தான் மனிதர்கள் பயணிக்கிறார்கள். அதை இறக்கி வைப்பதற்குத் தயாராக இல்லை எவரும்.அந்த சுமையை ஏற்பதற்கும் யாரும் தயாராக இல்லை.


இறுதிப் பயணத்தில் தன்னை சுமக்கும் நாள் வரை இது தொடரும் போது வாழ்க்கை உற்சாகமாக இல்லாமல் கடினமானதாக இருக்கிறது.


பதற்றத்தோடும் குழப்பத்தோடும் வாழ்க்கையின் பெரும்பான்மை கழிந்து விடுகிறது.

ஆகையால் குழந்தையின் மன நிலையில் இருந்தாலே போதும் வாழ்க்கை ரசனையாகும்.


இன்முகத்தோடு இதயத்தின் கதவுகளைத் திறப்போம். அதாவது வழி தேடிச் செல்லும் பாதையில்  வலிகள் இருக்கத் தான் செய்யும்.


*சிறு குச்சியை தூக்கிப் பறக்கும் பறவைக்கு, பாரம் கூட வலி தான். பாரத்தை தாங்கி, தன் பாசத்தில் கூடு கட்டும்.


குழிகளில் விழுந்தாலும் வலிகளை மறந்து வழிகளைத் தேடிக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் .


அச்சமின்றி வாழ்வதுதான் வாழ்க்கை.

மறைப்பதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும்போது நீங்கள் எதையும் தவிர்க்க விரும்ப மாட்டீர்கள்.

உண்மையான சுதந்திரத்தை வெளிப்படையான வாழ்க்கை நடத்துவதில்தான் காண முடியும்.

ஒருவன் தனக்குத் தானே அளித்துக் கொள்ளக்கூடிய நற்சான்றிதழ்களிலேயே தலைசிறந்தது, இப்படிப் பிரகடனம் செய்வதுதான்: "நான் ஒரு திறந்த புத்தகம்."


#கே.எஸ்.ஆர் போஸ்ட்

#ksrpost

12-12-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...