இன்று விருப்பமுற்ற திருமணங்கள, மணவிலக்குகள்,
ஒப்பந்த கால சேர்ந்து வாழ்தல், Companionship என பல வடிவங்கள் ஆகி நிம்மதி அற்ற வாழ்க்கைகள்….
திருமணம் என்பது ஒரு நல்ல அமைப்பு முறை. சிலருக்கு சரியாக அமைவதில்லை, அல்லது அமைத்துக்கொள்ளத் தெரிவதில்லை. சிலருக்கு திருமணம் என்றால் பயம், தைரியமின்மை, மற்றும் நிர்வாகத் திறனற்ற தன்மை . இன்னும் கொஞ்ச பேருக்கு புரியாத்தன்மை. திருமண அமைப்பை திறன்பட நடத்தினால் கிடைப்பது பாதுகாப்புணர்வு, துணை, நட்பு, காதல், காமம், பிள்ளைகள் என ஏராளம். இது புரிந்தும் புரியாத மாதிரி சில விஷக்கிருமிகள் இந்த அமைப்பை உடைப்பதையே வேலையாக செய்கின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக. இவர்களிடம் எழுதும் / பேசும் ஆற்றல் நன்றாக உள்ளது. அவற்றை கொண்டு பலரை Influence செய்ய முயல்கின்றனர். சில வெற்றிகளையும் பெருகின்றனர். கல்யாணம் ஆனவர்களும் ஆகாதவர்களும் இவர்களை தவிர்த்தல் நலம்.
ஒரு பெண், ஆணை விரும்புவதால் உடலுறவு கொள்கிறாள்.
ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புவதால், உடலுறவு கொள்கிறான்.
வித்தியாசம் தெரிகிறதா?
இங்கு பெரும்பாலும், உடலுறவு என்பது ஒரு ஆணுக்கு உடல் சார்ந்த விஷயம்.
ஆனால் ஒரு பெண்ணுக்கு உடலுறவு என்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சம்பந்தப்பட்ட விஷயம்.
காதல் காரணமாக ஒரு பெண் உடலுறவு கொள்ள சம்மதிக்கிறாள். ஆனால் காதல் இல்லாமல், உடல் தேவை காரணமாக மட்டுமே ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியும்.
ஒரு பெண் உங்களுடன் உடலுறவு கொள்வதற்கு முன், அவள் உங்கள் மீது மன ரீதியான உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும். அவள் ஆணுடன், அந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலை கொண்டிருக்க வேண்டும்.
ஒரு பெண்ணின் அந்த பிழை கூட அன்பின் பரிமாணம் கொண்டதாக இருக்கும்.
ஒரு பெண் தான் காதலிக்காத ஆணுடன் உடலுறவு கொள்வதை நீங்கள் காண்பது அரிது. அவள் விபச்சாரியாக இருந்தால் தவிர.
ஆனால் ஒரு ஆணுக்கு, இது தலைகீழாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது சிறிதும் அன்பு இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளக்கூடும்.
இதனாலேயே ஒரு ஆண் விபச்சாரியை உடலுறவு கொள்வதற்காக தேவைக்கு தேடலாம். ஆண் தனது பாலியல் ஆசையை நிறைவேற்றும் முன் விபச்சாரியை காதலிக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு ஆண் தனது பாலியல் ஆசைகளுக்கு தீனி போட ஒரு பெண்ணாக, உங்களைப் பயன்படுத்தலாம். அவர் உங்களுக்கு தேவையான பணம் கூட கொடுக்க முடியும். அவர் உங்களை வெளியே அழைத்துச் செல்ல முடியும். இதெற்கெல்லாம் காரணம் அவர் உடலுறவை விரும்புகிறார், உங்களை அல்ல!
ஒரு ஆண் உங்களை உண்மையாக நேசிக்கிறானா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நின்று கவனியுங்கள்.
நீங்கள் அவருக்கு செக்ஸ் கொடுக்காததால் அவர் உங்களை விட்டு வெளியேறினால், அவர் உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் செக்ஸ்-ஐ மட்டுமே நேசிக்கிறார்!
அன்புள்ள இளம் வயது பெண்களே!
- நீங்கள் வளர்ந்து திருமண வாழ்க்கையின் பயணத்திற்கு நெருங்கி வரும்போது..
- உங்களுக்கான ஒரு கணவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
- ஆனால் உங்கள் குழந்தைகள் தங்கள் தந்தையை தேர்ந்தெடுக்க முடியாது
- அவர்களுக்கான தந்தையைத் தேர்ந்தெடுக்கும்போது, தயவு செய்து, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசிரியராக மற்றும் ஒரு வழிகாட்டியாக இருக்க தகுதியான ஒரு ஆணைத் தேர்ந்தெடுங்கள்.
பெண்களுக்கான கைவிலங்குகளில் மிகவும் மென்மையானது இந்த திருமண முக்காடு, எனவே ஆழ்ந்து சிந்தித்து, சிறைத் வாழ்க்கையைத் தவிர்க்க, உங்கள் இல்லத் துணையை கவனமாகத் தேர்ந்தெடுத்து, புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.
கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் #கணவன்& #மனைவி உறவில் ஏற்படும் தீய விளைவுகள்...
திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.
1. நெருக்கம் குறைகிறது
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2. எளிதில் போர் அடித்து விடும்
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.
3. உடலுறவில் நாட்டமின்மை
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும். “Sex is a beautiful
thing, and it should be
celebrated, not shamed.”
― Fiona Zedde
4. வேறு ஒருவர் மீது காதல்
நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.
5. சண்டைகள்
உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.
6. வெறுப்பு
உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
ஆகவே நண்பர்களே
துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்..
No comments:
Post a Comment