கடினமான உணர்வுகள், கவலைகள் மற்றும் பிரச்சனைகள்; இவைகள் தாமே உங்களை விடுவிக்கும் - சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி அடைவதற்கான ஆசை மூலம் நீங்கள் அவற்றிலிருந்து தப்பிக்க முயற்சிக்காமல் இருந்தால்.
சுதந்திரமும் மகிழ்ச்சியும் வேண்டும் என்று சொல்கிறீர்கள் - ஏனென்றால் கடினமான உணர்வுகளையும் துன்பங்களையும் பொறுத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. எனவே நீங்கள் அவற்றிடமிருந்து தப்பி ஓடுகிறீர்கள்.
அவை ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லை; உங்களுக்கு ஏன் கவலைகள் இருக்கின்றன, உங்களுக்கு ஏன் பிரச்சனைகள், கடினமான உணர்வுகள், வலி, துன்பம், அவ்வப்போது மகிழ்ச்சி இருக்கிறது என்று புரியவில்லை.
உங்களுக்குப் புரியாததால், எளிதான வழியை, குறுக்கு வழியை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள்.
நான் சொல்கிறேன், உங்களுக்கு குறுக்கு வழியைக் காட்டும் மனிதனைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.
நீங்கள் தப்பிக்க முயற்சிப்பதை நிறுத்தும் தருணத்தில் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
விளக்கங்களில் சிக்கிக்கொள்ளாத பொழுது உங்களால் புரிந்து கொள்வதைத்தவிர வேறு மார்க்கமில்லை.
எல்லா விளக்கங்களும் முடிவுக்கு வந்துவிட்டால் - ஏனென்றால், அவைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை - உண்மை மட்டுமே இருக்கிறது.
உங்களுக்குள் மோதலை உருவாக்கும் விஷயத்தை நீங்கள் முழுமையாக எதிர்கொள்ளும்போது, அதுவே உங்களை விடுவிக்கும். இன்றைய எனது எண்ணம் அநேகருக்கு வியப்பை விளைவிக்கலாம் இருந்தாலும் என்னை பொறுத்த மட்டில் நான் சத்தியத்திற்கு சாட்சியம் சொல்ல வேண்டும் என்கிற சங்கடத்திற்கு எப்பொழுதும் ஆட்பட்டே வந்திருக்கிறேன் ஆகவே உண்மைகளை சில வேளைகளில் சொல்லாமல் இருந்தது உண்டே தவிர பொய் புகன்றேன் என்று ஒரு பொழுதும் என் மனம் எனக்கு சொன்னதில்லை. நியான் விளக்குகளை போட இயலாமல் இருந்திருக்கலாம் என்றாலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது அவசியமானது என்பது எனது வாழ்க்கை வழங்குகின்ற நியாயமான செய்தி ஆகும் இளைஞர்களே பறந்து போங்கள் சிறகுகளால் மேகங்களை கிழித்துக்கொண்டு கிழக்கு நோக்கி பறந்து செல்லுங்கள் பறக்கிற நீங்கள் கால்கள் மட்டும் களவாடப்படாமல் கவனமாக இருங்கள் என்று அடிக்கடி எப்போதும் சொல்லி வருகிறேன் சிறகுகள் என்பவைகள் நம்பிக்கைகள் கால்கள் என்பவைகள் கடினமான உழைப்பு இந்த உற்சாக ஊசியை போடுகிற போதெல்லாம் பலரிடத்திலும் அது உடனே வேலை செய்ய ஆரம்பித்து விடுவதை நான் உடனிருந்து மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்…
வாழ்வில் நிறைவு என்ற ஒன்று கிடையாது நிறைவடைந்த மனங்கள் மட்டுமே உண்டு. வாழ்வில் தேக்க நிலை என்ற ஒன்று கிடையாது தேக்கமடைந்த மக்கள் மட்டுமே உண்டு.
வாழ்க்கை என்பது வேலியில்லாத் திறந்த வெளி, வேண்டியமட்டும் அதில் நிரப்பிக் கொள்ளுங்கள்.
உங்கள் இதயத்தால் எவ்வளவு உருவாக்க முடியுமோ, மனத்தால் எவ்வளவு நம்ப முடியுமோ, மனப்போக்கால் எவ்வளவு விசாலமாக்க முடியுமோ, அந்த அளவிற்கு அதில் இடமிருக்கின்றது!
கடின உழைப்பு வாழ்க்கை என்ற வாகனத்தை வெற்றிக்கான பாதையை இயக்குகிறது, ஆனால் அதற்கு தன்னம்பிக்கையின் எரிபொருள் இல்லாமல் பயணம் சிறக்க முடியாது !!!
மறக்க முடியாதவர்களை மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாதவர்களை மறந்து விடுங்கள்.
எப்படி முடியும் என்பதற்கும், ஏன் முடியாது என்பதற்கும் உள்ள தூரமே துணிச்சல்.
எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சல் உங்களுக்கு இருந்தால், எதிர்வரும் பிரச்சினைகள் தூசுகளாகப் பறந்து விடும்.
எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த உலகில் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எது போனாலும் விட்டு விட்டு நகர்ந்து செல்லுங்கள்.
சவால்களும் தடைகளும் பல வந்தாலும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே உறுதியாய் இருங்கள்.
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் தன்மை இருந்தால் மட்டுமே தடைகளை எதிர்கொண்டு
வெற்றி பெற முடியும்.
போதும் என்பவனுக்கு போதனையும் தேவையில்லை.போதாது என்பவனுக்கு புதையலும் போதவில்லை. இல்லை என்பதை தேடி இருப்பதைத் தொலைப்பது ஏனோ.
உப்பிற்கும் நட்பிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உப்பு உணவை சுவையாக்கும். நட்பு வாழ்க்கையை சுவையாக்கும்.
திருத்திக் கொள்ளவோ திருந்திக் கொள்ளவோ இங்கு யாரும் விடைத்தாளோ வினாத்தாளோ இல்லை பிடித்ததை செய் பின் விளைவுகளை உன்னால் எதிர்கொள்ள முடிந்தால்.
உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.
இன்றைய எனது எண்ணம் அநேகருக்கு வியப்பை விளைவிக்கலாம் இருந்தாலும் என்னை பொறுத்த மட்டில் நான் சத்தியத்திற்கு சாட்சியம் சொல்ல வேண்டும் என்கிற சங்கடத்திற்கு எப்பொழுதும் ஆட்பட்டே வந்திருக்கிறேன் ஆகவே உண்மைகளை சில வேளைகளில் சொல்லாமல் இருந்தது உண்டே தவிர பொய் புகன்றேன் என்று ஒரு பொழுதும் என் மனம் எனக்கு சொன்னதில்லை. நியான் விளக்குகளை போட இயலாமல் இருந்திருக்கலாம் என்றாலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது அவசியமானது என்பது எனது வாழ்க்கை வழங்குகின்ற நியாயமான செய்தி ஆகும் இளைஞர்களே பறந்து போங்கள் சிறகுகளால் மேகங்களை கிழித்துக்கொண்டு கிழக்கு நோக்கி பறந்து செல்லுங்கள் பறக்கிற நீங்கள் கால்கள் மட்டும் களவாடப்படாமல் கவனமாக இருங்கள் என்று அடிக்கடி எப்போதும் சொல்லி வருகிறேன் சிறகுகள் என்பவைகள் நம்பிக்கைகள் கால்கள் என்பவைகள் கடினமான உழைப்பு இந்த உற்சாக ஊசியை போடுகிற போதெல்லாம் பலரிடத்திலும் அது உடனே வேலை செய்ய ஆரம்பித்து விடுவதை நான் உடனிருந்து மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்….
No comments:
Post a Comment