Saturday, November 30, 2024

தகுதியான சிலர் தன் நிலையை தக்க வைக்கவே இங்கு போராட்டம். இங்கு தகுதியேதடை… மேடையில் கத்துகிறது ஆட்காட்டி பிணமாய்க் கிடக்கிறது அரசியல்…! இந்த வாரிசு அரசியலும் குலத்தொழில்தான்.

இங்கே களத்தில் பலர்
அடுத்தவன ஏமாற்றிதான் தன்
குடும்பத்தில் உயர்வு பெறுவது.
உழைக்கும் தகுதியான சிலர் தன் நிலையை
தக்க வைக்கவே இங்கு போராட்டம்.  இங்கு தகுதியேதடை… மேடையில் கத்துகிறது ஆட்காட்டி
பிணமாய்க் கிடக்கிறது  
அரசியல்…! இந்த வாரிசு அரசியலும் குலத்தொழில்தான். 

இங்குள்ள நிலை என்ன⁉️  அதிகமான வெளிப் பகட்டு, புற ஆடம்பரம் என்பது அதிகமான உற்புற
 ( மனதிற்குள்ளாக) செழுமையின்மையைக் காட்டுகிறது;  எங்க துண்டு சீட்டு இல்லாம ஞான ஓளி-னு நீ சொல்லு பார்ப்போம்  என்கிற நிலை.  ஆனால் வெளிப்புற எளிமை, அதாவது எளிமையான உடை,  போன்றவைகள் மனதின் இந்த செழுமையின்மையிலிருந்து விடுபட்டதாக ஆகாது. நாம் யாரோ ஒருவராக ஆவதற்கான, ஏதோ ஒன்றாக இருப்பதற்கான ஆசையே இந்த மனதிற்கு உட்புறமான செழுமையின்மைக்குக் காரணமாகும்; நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், இந்த மனதிற்குள்ளான வெறுமை ஒருபோதும் நிரப்பப்படமாட்டாது. நீங்கள் அதிலிருந்து ஒழுங்கற்ற வழியில் அல்லது உங்கள் மனதைத் தூய்மைபடுத்துதல் மூலமாகத் தப்பிக்கலாம்; ஆனால் அது உங்கள் நிழல் போல உங்களுக்கு அருகிலேயே இருக்கிறது. நீங்கள் இந்த வெறுமையை
ஆழ்ந்து நோக்க விரும்பாமல் அதனை விட்டு விலகி இருக்கலாம், ஆனால் , இருப்பினும் அது இருக்கிறது. 
" சுயம்" பாவனை செய்கின்ற வேஷங்கள், துறவுகள் இவைகள் அந்த உள்ளார்ந்த வெறுமையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. மனதிற்கு உள்ளாகவும் வெளிப்புறமாகவும் தான் செய்கிற்ற செயல்களால், " சுயம்" உற்புற  வளத்தைத் தேட முயற்சி செய்கிறது. அதை அது அனுபவம் என்றோ அல்லது அதனுடைய வசதிக்கும் மனநிறைவுக்கும் ஏற்ப வேறு பெயரிட்டோ அழைக்கிறது. " சுயம்"  ஒருபோதும் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்கமுடியாது; அது புதுவிதமான வேற்று  ஆடையை அணியலாம், வேறு பெயரை புனைந்து கொள்ளலாம், ஆனால் அடையாளம் கொள்ளலே  அதன் மதிப்பாகும். இந்த அடையாளப்படுத்திக் கொள்ளும் செயல்முறை அதன் உண்மையான இயல்பை புரிந்து கொள்வதை, அது குறித்து விழிப்புணர்வு கொள்வதைத் தடுக்கிறது.  படிப்படியாக பெருகுகின்ற இந்த அடையாளப்படுத்தும் செயல்முறை 
 " சுயத்தை" நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வடிவமைக்கிறது. மேலும் அதன் செய்பாடு எப்போதுமே தன்னைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்வதே, அது எவ்வளவு பரந்து இருந்தாலும் வேலியே.  ஏதோ ஒன்றாக இருப்பதற்கான அல்லது இல்லாமல் இருப்பதற்கான சுயத்தின் ஒவ்வொரு முயற்சியும் அது நிஜமாக என்னவாக இருக்கிறதோ அதிலிருந்து விலகிச்செல்வதே ஆகும். 
அதனுடைய பெயர், பண்புக்கூறுகள்,
விசித்திர நடத்தைகள், உடைமைகள் இவைகளின்றி  " சுயம்" வேறு என்னவாக இருக்கிறது?
அதனுடைய தனிக்கூறுகளை நீக்கிவிட்ட பிறகு அங்கு அந்த " நான்", அந்த " சுயம்" இருக்கிறதா?
யாராகவும் இல்லாமல் இருக்கும் இந்த பயமே அதுவே  சுயத்தை இயங்கச் செய்கிறது; ஆனால் அது ( சுயம்) ஒன்றுமில்லாதது, வெறுமையானது.

உங்களை வேறொன்றாக மாற்ற முயற்சிக்கும் இவ்வுலகில் தொடர்ந்து நீங்கள் நீங்களாகவே இருப்பது பெரிய சாதனை…

•••

ஷண்முக சுப்பையா | பாவிகள்

சாகாப் பழமையை
சாகடிக்கும் 
பாவிகளே!
பிறவாப் புதுமையின் 
பிறப்பறுக்கும் 
பாவிகளே! 
உங்கள்
இருதரப்பார்க்கும்
இடையே 
அகப்பட்ட 
அப்பாவிகள் 
நாங்கள்
எத்தனை காலம்
ஒப்பாரி வைத்து
அழுது தொலைப்போம்.

•••

*உங்களுடையது கடினமான காலத்தை கடக்கும்போது;  அதைப் புரிந்து கொள்ளுங்கள்: இது உங்களுக்குத் தான் “நான் வலிமையானவன், நான் எனக்காக வருத்தப்பட்டு உட்காரவும் இல்லை, மக்கள் என்னை தவறாக நடத்தவும் அனுமதிக்கவில்லை*.  எனக்கு ஆணையிடும் நபர்களுக்கு நான் பதிலளிப்பதில்லை அல்லது என்னை வீழ்த்த முயற்சிப்பதில்லை.  நான் விழுந்தால் நான் இன்னும் பலமாக எழுவேன், ஏனென்றால் நான் உயிர் பிழைத்தவன், பலியாகவில்லை.  நான் என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறேன், என்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.  உங்கள் கதை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும்.  தொடருங்கள்….




#கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



 30-11-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...