யாரிடமும் எதையும் சொல்லி புரிய வைக்க முயலாதீர்கள் அவர்களுக்கு காலம்புரிய வைக்கும் பொறுமையாக இருங்கள்.!
இருப்பினும்,சிலநேரங்களில் எல்லார்கிட்டயும் சகிச்சுக்கிட்டே போனா,. இவனை ஈசியா டீல் பண்ணிடலாம்"னு உலகம் அசால்ட்டா முடிவுரை எழுதிடும்..
வாழ்வில் அடிபட்ட பின்புதான் சிலரின் சுயரூபம்
தெரிகிறது..என கண்ணதாசன் சொல்வார்.
பெருந்துயரத்தில் உழலும் எந்த ஜீவனும் அந்த சமயத்தில் ஒரு கம்பீரத்தைப்பெறுகிறது என தி.ஜானகிராமன் எழுதுகிறார்.
உங்கள் #வாழ்க்கை, யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள்.
என் கடந்த காலங்களில் களபணிகள் நன்றியற்றை சிலர் எடுத்துக் கொண்டனர், நான் பெற்றதும் ஒன்றும் இல்லை. நான்இழந்தது எனது இளமை, நான் கற்ற கல்வி, தொழில்,கால தேச வர்த்தமான்கள், பொருள் என பல……
எனது விளக்கமல்ல எனது நிலைப்பாடு இதுவே;
எனது பாதை ஒன்றுதான்
எனது பயணம் ஒன்றுதான் வாகனங்களே மாறின என்னை எதிர்த்து சொல்லுகிறவர்கள் எல்லாம் கங்கையிலேயே ஏன் நீ காரிலே போகவில்லை என்று கேட்கிறார்கள். கரையேறி வந்த பின்னும் ஏன் நீ படகிலே பயணம் செய்யவில்லை என்று கேட்கிறார்கள் இவர்கள் பைத்தியக்காரர்கள் என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாகும். அவர்கள் மண்டைகள் மரத்தால் ஆனது என்பதை இன்னமும் என் மனம் ஏற்க மறுக்கிறது. சகவாழ்வு பணிக்கு ஒரு கூட்டை கட்டும் பணிகள் எனது வேலை முக்கியம். ஆனால் அந்த கூட்டில் தங்க முடியாமல் என தான்மானத்துக்கு இழுக்கு வந்தால் நான் கட்டிய குச்சிகள் கைபற்றாமால் அடுத்த நொடி வெளியேறுவதான் என் நிலை.
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதேஉனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.
இன்றையதலைமுறைகளில்உழைப்பை விடவும்,
பொறாமை உணர்வேமேலோங்கி நிற்கிறது.
வயது ஐம்பதை கடந்த பிறகாவது அமைதியாக வாழவேண்டும் என நினைத்தால்...
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக் கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்..
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்த உறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...
பந்தபாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்? தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் .
அதையும் மீறி சிலவேளைகளில் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக் கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர் கொள்ளக் கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட நீ உன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
உன் கண்ணீரும் உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும் ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்து கொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது.
மறதி என்பது வியாதி
இல்லை அது ஒரு
வகையான *வரம்*.
அந்த வரம் கிடைத்தால்
வாழ்க்கையில்
வருத்தம் இருக்காது
துக்கமும் இருக்காது.
•••
எதிர்பார்ப்புகள்
வான்மழையொத்தவை
எந்நேரமும் பொய்க்கலாம்...
எதிர்பார்ப்புகள்
இயற்கையின் அமைதி
எந்நேரமும் பூகம்பமாகலாம்...
எதிர்பார்ப்புகள்
வண்ணமயமானவை
எந்நேரமும் சாயம் போகலாம்...
எதிர்பார்ப்புகள்
ஏக்கம் கொண்டவை
எந்நேரமும் நமை வதைக்கலாம்...
எதிர்பார்ப்புகள்
எதிர்கோட்டில் நிற்பதை
எந்நேரமும் அருகிலமராது...
ஆனாலும்
எதிர்பார்ப்புகள் சுகமானவை
எந்நேரமும் கைக்கிட்டலாம்.
No comments:
Post a Comment