நினைவுகள் என்றும் கனதியானவை!
அவை என்றும் உறுதியானவை!
என்
எல்லாத் தவறான முடிவுகளுக்காகவும்
அவசரக் காதல்களுக்காகவும்
அதீத எதிர்பார்ப்புகளுக்காகவும்
போலி நம்பிக்கைகளுக்காகவும்
வீண் பிடிவாதங்களுக்காகவும்
பயனற்றக் காத்திருப்புகளுக்காகவும்
என்னை நானே தூக்கிலேற்றிக்கொள்கிறேன்
இதற்காகத்தான்
சொன்னோம்
என்றோ
இதெல்லாம்
உனக்கு தேவைதான்
என்றோஇனியேனும்
சொல் பேச்சைக்கேள்
என்றோ
எரியும் தீயில்
எண்ணெய் வார்க்காதீர்கள்
எவரும்
பின்னும்
என் முட்டாள்த்தனங்களுக்கான
விலையை
நான்தானே செலுத்த
வேண்டும்
ஆக
ஆறுதலலிப்பதாய்
அருகிலிருந்து
தானாய் ஆறும் காயங்களை
எவரும்
தடவித் தடவியே
வடுக்களாக்காதிருந்தால்
போதும்
எனக்கு
"உம்.. காலத்தின் கோலம்..."
ஒப்பனையில்லா "நேர்மை" நிராகரிக்கப்படுவதும்,
ஒப்பனையுடனான "பொய்" அங்கீகரிக்கப்படுவதும்,
பெரும்பாலும் இன்றைய
உலக நடைமுறைகளாக..
காரணம்,
ஒப்பனையில்லா "நேர்மையும்"
ஒப்பனையுடனான "பொய்யும்"
அப்பட்ட அம்மனமாக
உள்ளதாலேயும் உலவுவதாலேயும்
உங்களிடம் இன்பம் இருக்கலாம்; நீங்கள் ஒரு புதிய திருப்தியைக் காணலாம், ஆனால் விரைவில் அது சோர்வாக மாறுகிறது.
ஏனென்றால் நமக்குத் தெரிந்த விஷயங்களில் நிரந்தரமான மகிழ்ச்சி இல்லை.
முத்தத்தைத் தொடர்ந்து கண்ணீர் உள்ளது; சிரிப்பைத் தொடர்ந்து துன்பமும் சீர்கேடும் உள்ளது.
எல்லாம் வாடுகிறது; எல்லாம் சிதைகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் தத்துவங்கள், நம்பிக்கைகள் மற்றும் மதங்களைக் கொண்டுள்ளோம்; அவை மனிதனை மாற்றவில்லை. அவை அவரை மேலோட்டமான மெருகேற்றி இருக்கலாம்; அவர் ஒருவேளை குறைவான காட்டுமிராண்டித்தன்மை - ஒருவேளை - உடையவராக இருக்கலாம். ஆனால் அவர் இன்னும் மிருகத்தனமானவராகத்தான், வன்முறையானவராகத்தான், சலன புத்தி கொண்டவராகத்தான் இருக்கிறார்.
இதுதான் உண்மை.
உண்மையைப் பற்றிய எந்த ஊகக் கோட்பாடுகளும் உண்மையைப் பாதிக்காது. உண்மையைப் பாதிப்பது எதுவென்றால், நீங்கள் அதைப் பார்க்கும் திறன், ஆற்றல், தீவிரம், ஆர்வம்.
உங்கள் மனம் ஏதோ ஒரு சித்தாந்தத்தை துரத்திக் கொண்டிருந்தால், ஏதோ ஒரு மாயையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தால், உங்களிடம் ஆர்வமும் தீவிரமும் இருக்காது.
No comments:
Post a Comment