Tuesday, November 26, 2024

Nation celebrates #ConstitutionDay today to mark 75 years of its adoption.

#இந்தியஅரசியல்சாசனம்75 
#ConstitutionDay
———————————————————
Nation celebrates #ConstitutionDay today to mark 75 years of its adoption.

சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் சாசனத்தை நமக்கு நாமே   என்று ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் கடந்து விட்டன.!

இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தக் காலத்தில் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-இல் இந்தியாவிற்கு ஓர் அரசியல் நிர்ணய மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய மன்றத்தை உருவாக்கலாம் எனக் கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-இல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய மன்றத்திற்கான தேர்தல், ஜூலை 1946-இல் நடைபெற்றது. டிசம்பர் 1946-இல் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. அம்மன்றத்தின் தற்காலிக தலைவராகச் சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-இல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.





















1947,ஆகஸ்ட் 15-இல் இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய மன்றம் செய்ய வேண்டியதாயிற்று.

யூனியன் மற்றும் மாநில சட்டமன்றங்
களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட வகுப்புகளைச் சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தைப் பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்துக் கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தைப் பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 106 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1930, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஓர் ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்குப் பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. 

1947, ஆகஸ்ட் 29 -இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
பீ. இரா. அம்பேத்கர்
என். கோபாலசாமி அய்யங்கார்
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
என். மாதவ ராவ்
டி. டி. கிருஷ்ணமாச்சாரி
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். 

இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது. நவம்பர் 4-இல் அரசியல் நிர்ணய மன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26-இல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-இல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திரபிரசாத்தேர்ந்தெடுக்
கப்பட்டார்.

இடைக்காலத்தில் இந்த அரசியல் சாசனத்தின் முகப்பில் 42வது சட்ட திருத்தத்தின் படி சோசலிச மதச்சார்பற்ற என்ற வரிகளை இந்திரா காந்தி அம்மையார் தனது ஆட்சி காலத்தில்  முகப்பில் ( Preamble) திருத்தி (amendment)இணைத்தார்.

அதன்படி செக்யூலர் கவர்ன்மெண்ட்! என்கிற மதச்சார்பற்ற அல்லது சோசலிசம் போன்ற வார்த்தைகள்  மூலச் சாசனத்திற்குப் பொருத்தமற்றவை ஆகிவிட்டன! நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான்
மதச்சார்பின்மை என்பதே ஒரு பிழையான சொல்! மத நல்லிணக்கம் அல்லது கம்யூனல் ஹார்மனி என்றுதான் சொல்ல வேண்டும். மூலச் சாசனத்தில்  மேற்சொன்ன சோசலிச மதச்சார்பற்ற என்ற வரிகள் இல்லை! 
இணைத்தது இந்திரா காங்கிரஸ் அரசு! இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது! இந்தியாவின் 51-வது தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற சஞ்சீவ் கன்னா அவர்கள் கூட இதுகுறித்து விவாதம் செய்து இருக்கிறார். சோசலிசம் என்கிற சொற்பதம்  எல்லா மக்களின் நலனுக்கானது தான் என்று அவரும் சொல்கிறார். நேற்று அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த இடத்தில் ஏற்பட்டிருக்கும் மூலஅர்த்த இழப்பு என்பது 42வது சட்ட திருத்தத்தின்படி சுவரங்சிங் குழு பரிந்துரைபடி ஒரு தனிப்பட்ட கட்சி சார்ந்ததாக இருக்கிறது என்று தான் சொல்கிறோம். ஒவ்வொரு கட்சிகளும் ஆட்சிக்கு வரும்போதும் அந்தக் கட்சி சார்ந்த அரசியல்வாதிகள் அரசியல் சாசனத்தைத் திருத்த முயல்கிறார்கள் !இதுவரை இந்திய அரசியல் சாசனம் 105 முறை திருத்தப்பட்டிருக்கிறது மேலும் 10 திருத்தப்படவிருக்கிறது. அந்த வகையில் இந்திய ஆட்சி அதிகாரத்தைப் பொருத்தவரை அதன் அரசியல் சாசனம் உலக ஜனநாயக நாடுகளில் உள்ளதை எல்லாம் தாண்டி அதிக பக்கங்களைக் நமது சாசனம் கொண்டதும்

ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அறிவிக்கப்பட்ட அமெரிக்காவில் சுதந்திரம் பெற்று 200 வருடங்கள் ஆகிய பின்பும் கூட 
கூட 25 முறைக்கு மேல்  சட்ட திருத்தங்கள் அவர்களின் சாசனத்தில் அனுமதிக்கப்படவில்லை. அதில் பக்கங்களும் குறைவு பிரிவுகளும் குறைவு!

பிரிட்டன், இஸ்ரேல், நீயூஸ்லாந்து நாடுகளில் அரசியல் சட்டச் சாசனம் கிடையாது அங்கு மரபுகள்தான. ஆனால் நமது அரசியல் சாசனம் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா,பிரான்ஸ், சோவியத் யூனியன் போன்ற  பல்வேறு நாடுகளில் உள்ள சரத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. அதற்காக பி என் ராவ் அவர்கள் மேற்ச்சொன்ன நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து அதைத் தொகுத்து ஒழுங்கு படுத்தினார். அவர் பெயரை எல்லாம் இப்போது யாரும் சொல்வதில்லை!

அதன் அடிப்படையில்தான் அம்பேத்கர் தலைமையில் சட்ட வரைவு குழு அமைக்கப்பட்டது.

இப்போது என் கையில் இருக்கும்  கீழே புகைப்படத்தில் காட்டியுள்ள புத்தகம்தான் அரசியல் சட்ட சாசனத்தின் மூலப்பிரதியின் நகல்ஆகும்!

அரசியல் சாசனம் இறுதியில் ஏற்று கொண்ட அரசியல் அமைப்பு  அவை குழு உறுப்பினர் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் என் தந்தையாரின்நல்ல நண்பருமான மு சி வீரபாகு அவர்கள் ஒருவரும் மட்டும் தமிழில் கையெழுத்து  இட்டிருக்கிறார்! அதை இந்த படத்தில் சுட்டிக்காட்டி உள்ளேன்.!

இந்த மூல சாசனத்தின் படி  அரசியல் சாசனம் கான்ஸ்டியூஷன்அரசியல் என்பது வேறு! அரசியல்க் கட்சிகள் என்பது வேறு என்பதை நாம் பார்க்க வேண்டும்! தங்கள் வசதிக்கேற்ப கட்சிகள் இதில் சரத்துகளை சேர்க்கும்போது மூலப்பிரதியின் நோக்கம் சிதைந்து விடுகிறது! தேவையில்லாத அர்த்தங்கள் குவிந்து விடுகின்றன. 

அரசியல் சாசனம் என்பது ஒரு நாட்டின் அடிப்படைக் கூறு! அதை அரசியல் துறையும் நீதித்துறையும் முறையாக இணைந்து ஒழுங்கு அமைக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான பொது நல்லிணக்க ஒப்பந்தமாக நாம் பார்க்க வேண்டும்.

பிரிவினைகளை உள்ளடக்கிய சொற்களின் மூலம் மூல சாசனத்தின் கான்ஸ்டியூசன் இறையாமையை நாம் அர்த்தம் இழக்க செய்து விடக்கூடாது என்பது தான் இதில் முன் வைக்கப்படும் உண்மை! ஆசை காட்டும் சொற்களை விட ஒட்டுமொத்த நாட்டு நலன்களுக்காக அளவறிந்து இயக்க வேண்டிய செயல்திறன் நடவடிக்கைகள் தான் முக்கியம்!.

முதல்வர் ஸ்டாலின்  இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கொண்டாட வேண்டும் என்கிறார்.

ராகுல் காந்தி அந்த அரசியல் சட்டச் சாசன சிகப்புப் கையடக்க Eastern law publication  புத்தகத்தை தூக்கி வைத்துக்கொண்டு போகும் இடங்களில் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் இருக்கும் 42 வது சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது யார்? அதற்கான கான்ஸ்டிடியூஷன் வரலாறு அவருக்கு தெரியுமா?  எல்லா சட்டங்களையும் அலட்சியப்படுத்தியது யார் என்பதையெல்லாம் அவர் வரலாற்றைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்! 42 ஆவது சட்ட திருத்தத்தின்  மூலம் அவசர காலத்தின் போது நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பறித்தவர்கள் யார்?
அவற்றை மனம் போன போக்கில் ஏதோச்சதிகாரமாகப் பயன்படுத்தியவர்கள் யார்?
என்பதெல்லாம் ராகுலுக்குத் தெரியுமா?  திமுக அதில் பாதிக்கப்பட்டதாவது ஸ்டாலினுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? 

உங்கள் தோழமைக் கட்சியான காங்கிரஸ் தானே கல்வி திருத்தச் சட்டத்தை மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்குக் கொண்டு போனது! விவசாயத்தையும் மத்திய அரசின் பட்டியலுக்குள் கொண்டு போனது!

 இப்படி எல்லாம் செய்த உங்கள்தோழமைக் கட்சியான காங்கிரஸுடன் சேர்ந்து அரசியல் சாசன விழாவைக் கொண்டாடப் போவதாகச் சொல்வதுஸ்டாலினுக்குவேடிக்கை
யாகப் படவில்லையா?

அந்த அரசியல் சாசனத்தை ஒருபோதும் மதிக்காதவர்கள் அதை டின்ட் பண்ணியவர்களுடன் சேர்ந்து கொண்டு விழாக் கொண்டாடுவோம் என்று பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது!?  ஒரு போராட்டமோ ஒரு அரசியல் மாற்றமோ அது நடந்த வரலாறு அது ஏன் இவ்வாறு நடந்தது என்பதை தெரிந்து கொண்டு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும்!

அரசியல் சட்டச் சாசனத்தை மதிக்காதவர்களே அதன் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகச் சொல்வது  வேடிக்கை தானே!




#ConstitutionAt75 । #10YearsOfConstitutionDay । #SamvidhanDivas2024
 #இந்தியஅரசியல்சாசனம்75 
#ConstitutionDay

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrvoice
#ksrpost
26-11-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...