Friday, November 29, 2024

#சிலவேடிக்கைகள்

 #சிலவேடிக்கைகள்

——————————- #தமிழின்இலக்கியம் சங்க இலக்கியங்கள்,பக்திஇலக்கியங்கள் இருந்துதான் உருவாகியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது! ஆனால் முதல் முதலாக திருக்குறள் பின், புரட்சி மற்றும் ஜாதி மறுப்பு என்றெல்லாம் பேசியது மகாகவி பாரதியார் தான். அப்படியான முன்னோடிகளை யெல்லாம் மறந்துவிட்டு இலக்கியவாசிப்போ அதன் இலக்கிய வரலாறு தெரியாத துணை முதலமைச்சர் உதயநிதி கேரளா மனோரமா பத்திரிகை நடத்திய விழாவில் எங்கள் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் தான் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுத்தார்கள் என்று அந்தத் தலைவர்களின் பெயரைக்கூடச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக பேசியிருப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது! மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உவேசா, தியாகராஜ செட்டியர், மாயூரம் முனுசீப் வேதநாயகம் பிள்ளை, மாதவையா என நீண்ட பட்டியல் உண்டு. இப்படித்தான் இலக்கியம் பற்றி வாசிக்காமல் அதன் ஆகி வந்த வரலாறு மற்றும் கல்வி திட்டங்களில் தமிழின் சங்க காலம் முதல் இக்கால வரையிலான நவீன இலக்கியங்கள் இடம் பெற்றது எதுவும் தெரியாமல் அல்லது தமிழ் இலக்கியங்கள் உலக அளவில் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றன என்பதைக் கூட அறியாமல் யாரோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை வாங்கிக் கொண்டு வநது மேடையில் ஒப்பிப்பது பொருத்தமற்றதாகப் போய் விடுகிறது. நான் கேட்கிறேன் இலக்கியம் பற்றி உனக்கு என்ன தெரியும்? #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 3-10-2024.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...