Tuesday, November 26, 2024

தனித்தும், தனி செயல்திறன், தனியாக இருப்பது என்றால்…..

பிறரிடம் மன்றாடி தான் உங்கள் பக்க 
நியாயங்களை எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால்...
உங்கள் மனதுடன்கொஞ்சம் போராடி அவர்களை 
விட்டு விலகுவதே நலம்.

எதிர்மறை பேசுபவரிடம் வாதாடாதீர்கள்......... 
நீங்கள் எவ்வளவு பெஸ்ட் ரிசல்ட் கொடுத்தாலும்....... 
அங்கே எதிர்மறை விடை மட்டுமேபரிசாககிடைக்கும்.

 தனித்தும், தனி  செயல்திறன், தனியாக இருப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள, அச்சத்தின் முழு செயல்முறையையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அச்சத்தை புரிந்துகொள்வது  முற்றிலும் காலியாக (emptiness),  முற்றிலும் தனியாக இருக்கும் அந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.

அதாவது, நீங்கள் திருப்தியடைய முடியாத, நிரப்ப முடியாத, உண்மையில் இருந்து தப்பிக்க முடியாத ஒரு தனிமையை நீங்கள் நேருக்கு நேர் பார்க்கிறீர்கள். அப்பொழுது  தனிமையைத் தாண்டிச் செல்ல முடியும் என்பதை நீங்கள் காண்பீர்கள். பின்னர் நம்பிக்கை (hope),  நம்பிக்கையின்மை (hopelessness) என்று எதுவும் இல்லை. பயம் இல்லாத தனிமையின் நிலை மட்டுமே இருக்கும். 

பொருட்கள் மூலமாகவோ, ஒரு மனிதர் மூலமாகவோ அல்லது ஒரு சித்தாந்தத்தின் மூலமாகவோ உள்ளார்ந்த பாதுகாப்பு கிடைக்காது என்பது புரியும்போது, பின்னர், மனதின் முழுமையான பாதுகாப்பற்ற அந்த நிலையில், ஒரு சுதந்திரம் வருகிறது. அந்த நிலையில் மட்டுமே "உள்ளது என்ன" என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆனால் அத்தகைய நிலை, நம்பிக்கை (hope) உடையவர்களுக்கு, பயம் உடையவர்களுக்கு அல்லது ஒரு இலட்சியத்தை அடைய விரும்புவோருக்கு வாய்க்காது. 

கடிவாளமிட்டு வளர்க்கப்பட்ட குதிரை
கடமைகளோடு கனவுகளையும் சுமந்து 
காலத்தோடு சேர்ந்து நடந்தது
கல் நெஞ்சுக் காலம்
கனம் ஏற்றியதே தவிர
சுமைகளைக் குறைத்து
சுகம் கூட்டவில்லை
உரிய இடத்தில் சுமைகள் சேர்க்கும் வரை
ஓடி ஓடி உழைத்தது குதிரை

ஆனாலும் அப்போதும் 
ஆழ் மனத்தில் அந்தக் கனவு
குளத்தில் கிடந்த கல்போல
உறங்காமல் விழித்திருந்தது
பிரபஞ்சம் தீர்மானித்த 
ஒரு பிரம்ம முகூர்த்ததில்
ஏற்கனவே சொல்லப்பட்ட விதிகள்
எல்லாவற்றையும் மறுதலித்து
வானம் பார்க்க வந்தது கனவுக் கல்

மேலெழுந்து மிதந்து மெல்ல மெல்ல
ஆகாயம் பார்த்த அந்தத் தருணம் 
ஓர் ஆச்சரிய கணம் 
அற்புதம் நேர்ந்ததோர் அரிய நிமிடம்

நிலத்தில் உழனற குதிரைக்கு
முளைத்தன இரு சிறகுகள்
கால்கள் தேய ஓடிய குதிரை
ககனம் ஏறிப் பறந்தது.

இதனால் அறியப்படும் நீதி இதுதான்:
சுமைகளைக் கண்டு சுணங்கி விடாதே
வானம் வசப்படும் உனக்கும் ஓர் நாள் 
அதுவரைக் களைத்துப் போனாலும்
கனவுகளைக் கைவிடாதே!

காலம் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.  வாழ்க்கையில் யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்...
 நாம் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் காலம் நம்மை விட சக்தி வாய்ந்தது !!!

அதுவரை மௌனம் நல்லது…



மௌனம்  தவம்... 
மௌனம்  வரம்...
மௌனம் அழகு...
மௌனம் அமைதி...
மௌனம் அன்பு...
மௌனம் சம்மதம்...
மௌனம் தென்றல்... 
மௌனம் தூரல்... 
மௌனம் ஆயுதம்...
மௌனம் சாமி...
மௌனம் மழலை...
மௌனம் சுடர்...
மௌனம் நிலா...

நீ 
பேசாப் பொழுதுகளில் 
மௌனம்  காரிருள்…




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...