Friday, November 29, 2024

ஒரு மனிதனுக்கு விளையும் நன்மையும், தீமையும் ஒருவரை வெகுசுலபத்தில் சாமானியமாக எண்ணி விடாதீர்கள்.

 ஒரு மனிதனுக்கு விளையும் நன்மையும், தீமையும் ஒருவரை வெகுசுலபத்தில் சாமானியமாக எண்ணி விடாதீர்கள்.

அமைதியாய் இருப்பதால் அடக்கமானவர்கள் என்றோ. கோபத்தை வெளிப்படுத்துவதால் மூர்க்கன் என்றோ. வம்புக்கு பயப்படுவதால் பலகீனமானவர்கள் என்றோ. எதிர்த்து நிற்பவர்கள் எல்லாம் பலசாலிகள் என்றோ. நேர்மையாய் இருப்பதால் பிழைக்கத் தெரியாதவன் என்றோ. இளகிய மனதைக் கொண்டதால் கோழை என்றோ. கண்ணீரை வெளிக்காட்டாதவர்கள் கல்நெஞ்சுக்காரர்கள் என்றோ. குடும்பத்திற்கு உழைத்து தேய்வதால் ஏமாளி என்றோ எண்ணி விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் ஈட்டி பாயும் தூரத்தை விட வளைந்துக் கொடுக்கும் வில்லிலிருந்து செல்லும் அம்பு வெகுதூரம் பாயும். இதை என்றும் மனதில் வையுங்கள். ஒரு மனிதனுக்கு விளையும் நன்மையும், தீமையும் அவன் செய்யும் செயல்களை பொறுத்தே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. நன்மை தரும் செயல்களை செய்யும் ஒருவருக்கு நன்மையான பலன்களே கிடைக்கும். தீய செயல்களில் ஈடுபடுபவன் அதே தீவினையினால் துன்பத்தில் துவளும் வாய்ப்பே வந்தமையும். அதே சமயத்தில் நல்ல செயல்களை செய்ய எண்ணும் சிந்தனையும் கூட ஒருவனுக்கு நற்பயனை கொடுத்து அவனின் வாழ்வை உயர்வு பெறச் செய்யும் வாழ்க்கையை வளமாக்கும்.

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...