Friday, November 29, 2024

#சிஎம்கே_ரெட்டிக்குகண்டனங்கள்

#சிஎம்கே_ரெட்டிக்குகண்டனங்கள்

———————————

#நடிகைகஸ்தூரி தெலுங்கு மக்களை பற்றி அவதூறாகப் பேசியதைக் கண்டித்து நான் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை போட்டு இருந்தேன்.

அதன் அடிப்படையில் அவ்வாறெல்லாம் நான் பேசவில்லை என்று அதற்கு நடிகை கஸ்தூரி வருத்தம் கேட்டுக் கொண்டார்.


மீண்டும் இது மாதிரியான கிறுக்குத்தனங்களை அவர் செய்து கொண்டிருந்தால் அதற்கான எதிர்வினைகளை அவர் எப்போதும் சந்தித்தாக வேண்டும். 


அது ஒரு பக்கம் இருக்க இந்த சி எம் கே  ரெட்டி என்பவர் தேவையில்லாமல் தெலுங்கு மக்களை யார்  அவமதித்தாலும் அவர்கள் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விட்டு இருக்கிறார்!


இது பாம்பை அடிக்க மலையைப் பெயர்த்த கதையாக இருக்கிறது!


தமிழகத்தில் நீண்ட நாட்களாக மரபாகவும் அதன் நிலத்தோடு இணைந்தும் வாழும் தெலுங்கு மக்கள் தங்கள் வாழ்வின் பெருமைகளோடு சுயமரியாதையும் இந்த தமிழகதிக்கு செய்த கொடைகளையுமே பெரிதாக எண்ணுபவர்கள்.


தமிழ் மண்ணின் நீண்ட பாரம்பரியத்தில் பண்பாடு கலாச்சாரம் மற்றும் அரசியல் அனைத்திலும் இணைந்து பங்காற்றி தங்களின் இருப்பிற்கு நியாயம் தேடியவர்கள். பலர் தங்கள் சொந்தத் தாய்மொழியைக் கூட மறந்து  தமிழை மட்டும் பேசி வாழ்ந்து வருகிறார்கள். எந்த அரசியல் ஆதிக்கங்களையும் தங்களுக்கென தக்க வைத்துக் கொள்ளாமல் தமிழகத்தின் பொதுவெளியில் கரைந்து இருக்கிறார்கள். தெலுங்கு முன்னோடிகள் பலர் தமிழகத்தை ஆண்டும் மறைந்தும் தியாகம் செய்தும் போயிருக்கிறார்கள். இவர்கள மனிதர்கள் எங்கு வாழ்ந்தாலும் பரஸ்பரம் மற்றும் இணைந்து வாழ்வதில் தான் அறம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவர்கள் தெலுங்கு மக்கள்!


ஒருவர் தவறாக பேசுகிறார் என்றால் அவரை தார்மீகமான முறையில் கண்டித்து அவ்வாறு இனி பேசக்கூடாது என்பதற்கான அரசியல்ப் பூர்வமான நடவடிக்கைகள் தான் எடுக்க வேண்டுமே ஒழிய வன்முறையுடன் யாரும் தெருவில் நடமாட முடியாது என்கிற வகையில் பேசுவதெல்லாம் சட்டம் மீறலும் நாட்டின் சட்ட ஒழுங்கையும் குலைப்பதற்கு ஏதுவாகிவிடும் என்பதை உணர வேண்டும். இதையெல்லாம் ஊக்குவிக்க முடியாது! யார் இவர்?


 சி எம் கே  ரெட்டி பேசியதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரின் அறிக்கை திரும்ப பெற வேண்டும்.


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

4-11-2024.

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...