#வைகோ அவர்களின் வீட்டு திருமணத்தை சமூக ஊடகங்களில் ஏகடியம் பேசும் நபர்களுக்கு….
பொதுவாக கம்மவார்கள் ஸ்ரீ வைணவ சாம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள்.அதனால் பிராமணர்களில் அய்யங்கார்,வைணவ பட்டர்களை வைத்து தான் நேரம், காலம், நல்ல சுப முகூர்த்தம் பார்த்து தான் திருமணம் செய்வார்கள். அது தான் எங்கள் சமூக மரபு. திருமண பத்திரிகை கூட மிக சாதாரண அழைப்பிதழ் அதுவும் மஞ்சள் நிறத்தில் அழைப்பிதழ் அடித்து, ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய வாரண ஆயிரம் பாடலான மத்தளம் கொட்ட என்று தொடங்கும் வாரண ஆயிரம் பாடலை பத்திரிகை தொடக்கத்தில் இருக்கும். இது தான் எங்கள் சமூக பாரம்பரிய திருமண முறை. இதில் வைணவ பிராமண பெரியவர்களை நடத்தினால் கிண்டலும் கேலியும் பேசுவது ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல. நானும் வைகோ சுமார் 50 ஆண்டு கால பழக்கம் உடையவர்கள். அவரோடு பல காலம் சேர்ந்து பயணித்து, தற்போது எந்த எந்த தொடர்பும் அவருடன் இல்லை. இருந்தாலும் சமூகம் சார்ந்த மரபுகளை கேலியும் கிண்டலும் செய்வது ஏற்றுகொள்ளமுடியவில்லை. அத்துடன் ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்கு என தனி குடும்ப பொறுப்பு உண்டு என்பதை கிண்டல் செய்யும் நபர்கள் அறிய வேண்டுகிறேன். சாமி இல்லை. கடவுள் இல்லை என்பது அவரவர் விருப்பம். ஆனால் மரபு, மதம், பண்பாடு, கலாச்சாரம் என்பது அவரவர் தனி உரிமை. அதை கேலியும், கிண்டலும் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாகரிக உலகில் காட்டுமிராண்டிகளை போல நடந்து கொண்டு தனி உரிமை விஷயத்தில் தலையிடும் நபர்களின் விமர்சனங்கள் முற்றிலும் புறம்தள்ள வேண்டிய ஒன்றாகும். தமிழகத்தில் தற்போது மக்களின் மனங்களில் நஞ்சு கலக்கும் முயற்சியை முளையிலே கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் மரபு மற்றும் தேச நலனுக்கு எதிராக கொண்டு போய்விட்டு விடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடுவார்கள் என்று ஐயம் அடைகிறேன். நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள். #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 8-11-2024
No comments:
Post a Comment