#ஆதிச்சநல்லூர்அகழாய்வு..
#கீழடிஆய்வும்
வழக்கறிஞர் கனிமொழி மதியும்
———————————————————-
அகழ்வாய்வுச் செயற்பாட்டினுள் பல சிறப்பு நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொரு அகழ்வும் கொண்டிருக்கக்கூடிய அதற்கேயுரிய துவக்க முதல் சிறப்பம்சங்கள் தொல்லியலாளர் கைக்கொள்ள வேண்டிய உண்மையானஅணுகுமுறை வேண்டும்.
திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ஆய்வு. சத்தியமூர்த்தி குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மற்றும் ஆபரணங்கள் நாணயங்கள் யாவற்றையும் முழுமையாக பல்வேறு இடங்களில் சேகரித்துத் தொகுத்து மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் பிரதமராய் இருந்த காலத்தில் அனுப்பி வைத்தார்கள்.. அகழ்வாய்வு வரலாறு
திருநெல்வேலி நகரத்திலிருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள "ஆதி தச்சநல்லூர்" எனும் ஆதிச்சநல்லூர்,உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. 1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மத்திய அரசு காங்கிரஸ் காலத்தில் 10 15 ஆண்டுகள் அதை வெளியிடாமலே தாமதித்து வைத்திருந்தது!.
கீழடி ஆய்வும் மிக முக்கியமானது தான் தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் அகழாய்வு நடக்கிறதோ அவை அனைத்தும் மிக முக்கியமானதும் வரலாற்று பூர்வமானதும் மனித நாகரிகங்கள் பற்றிய கூடுதல் அறிவுப் பெருக்கம் காண ஏதுவானது தான்! அவை அனைத்தும் தமிழ் மண்ணுக்கான பெருமை தான் மறுக்கவில்லை!
வரலாற்று அறிஞர்கள் சத்திய நாத ஐயர் ரங்கசாமி ஐயங்கார் கே ஏ நீலகண்ட சாஸ்திரி அவர்கள் மட்டுமல்லாமல் வையாபுரி பிள்ளை சேதுப்பிள்ளை
தெ பொ மீனாட்சி சுந்தரனார் போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் ஆய்வுதான் மிக முக்கியமானது அது சீரிய முறையில் தமிழர் பண்பாட்டையும் அவர்கள் தொன்மத்தையும் விளக்கும் வகையில் இருக்கிறது என்று சொன்ன பிறகும் இன்று அந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மிக மந்தமாக அல்லது கவனிப்பாரற்று நடந்து கொண்டிருக்கிறது. இது சற்று வேதனை தரக்கூடியதுதான் என்னிடம் பலரும் இது பற்றி எடுத்துரைத்தார்கள்!
அந்த வகையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆதிச்சநல்லூர் ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருந்தது என்பது முக்கியமான விஷயம் !ஏனெனில் இது உண்மையான வரலாற்று பூர்வமான தகவல்களையும் மிக சிறந்த ஆய்வு உண்மைகளையும் கொண்டு இருக்கிறது!.
இதை நான் குற்றச்சாட்டாக சொல்லவில்லை ஒரு உண்மையான பணியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரங்களும் இவற்றின் மீது கவனம் கொள்ள வேண்டும் எனும் அக்கறையில் தான் சொல்கிறேன்!
கீழடி ஆய்வில் வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்கள் கொடுத்த வழக்கு மூலம் இன்று வரைக்கும் அது அடிப்படையாக பேசப்படுகிறது! அவரின் பணியை யாரும் வெளியேசொல்வதில்லை! பிறகு அதை பயன்படுத்திக் கொண்டு மேடைகள் பல்வேறு அலங்கார பூச்சுகளை நடத்திக் கொண்டு அதைத் தாங்களே கண்டுபிடித்ததாக பலவாறு சிலர்பிரச்சாரம் செய்கிறார்கள்.
அதை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சி எம்பி
சு வெங்கடேசன் தான் கீழடி ஆய்வின் மொத்த குத்தகைதாரர் போலப் பேசப்பட்டு வருகிறார்! அமர்நாத் கீழடி ஆய்வு கனிமொழி மதி வழக்கு குறித்து வாயை திறப்பதே இல்லை…. என்ன இவர்களின் நேர்மை⁉️வேடிக்கை!
கீழடி ஆய்வில் கனிமொழி மதி வழக்கில் உச்ச நீதிமன்ற அதற்கான அனுமதியையும் அதைத் தொடர்ந்து அகழாய வேண்டியது முக்கியம் என்பதைத் தீர்ப்பாக சொல்லிய பிறகுதான் கீழடி ஆய்வு வேகம் பெற்றது!
இவை ஒருபுறம் இருக்கட்டும்! மீண்டும் உலகின் கவனத்தைக் கவர்ந்த ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்! அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை எனில் அதற்கான வழக்குகள் தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது! தொடரப்படும்!!
#ஆதிச்சநல்லூர்அகழாய்வு..
#கீழடிஆய்வு
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
23-11-2024.
No comments:
Post a Comment