Friday, November 29, 2024

#இந்தியர்களுக்கு_கனடாவில்பாதுகாப்புஇல்லை

 #இந்தியர்களுக்கு_கனடாவில்பாதுகாப்புஇல்லை

#இந்தியகனாடா_உறவில்சிக்கல்* —————————————இந்தியர்களுக்குப் கனடாவில் பாதுகாப்பு இல்லை என்றும் கனடா அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளாமல் இந்துக்களின் கோவில்களுக்கும் இந்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்காமல் விடுவதோடு இந்தியத் தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்கவில்லை என்று இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார். அதனால் அங்கே இருக்கக் கூடிய நமது தூதரகங்களை இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. டொரண்டோ ஒட்டோவா வான்கூவர் போன்ற இடங்களில் இருக்கும் இந்திய தூதரகங்களுக்குப் பாதுகாப்பில்லை. அதேபோல் அங்கு இருக்கும் இந்து மக்களுக்கும் கோயில்களுக்கும் பாதுகாப்பில்லை! அங்கு இருக்கக்கூடிய ஒரு இந்துக் கோவில் பூசாரி ஒருவர் மீது கனடா அரசு பிரிமிங்டன் வழக்குத் தொடர்ந்து அவரைப் பதவியை விட்டு விலக்கி இருக்கிறது. நேற்று 07-11-2024 இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சகம் கனடாவிலும் பங்களாதேஷிலும் இந்து கோயில்களுக்கும் இந்து மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அதை நடுநிலையோடு இரு நாடுகளும் கவனிக்க வேண்டும்! அவர்களுக்கு உரிய உரிமைகள் தரப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. தொடர்ந்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருடோவால் கனடாவில் வாழும் இந்துக்கள் பாதிக்கப்பட்டும் பல வகையில் துன்புறுத்தப்பட்டும் வருவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ட்ருடோ இந்தியா வந்தபோதும் கிறுக்கன்-Madman நடந்து கொண்டதும் வேடிக்கையான விடையம். அதுமட்டுமில்லாமல் அங்கே நிலை பெற்றிருக்கும் சீக்கியர்களின் தீவிரவாத இயக்கமான காலிஸ்தான் அமைப்பிற்குக் கண்மூடித்தனமான ஆதரவை ட்ருடோ தந்து வருவது இந்தியாவைப் பொறுத்தவரை குதிரைக்குப்புறத் தள்ளியதோடு அல்லாமல் குழியும் பறித்த கதையாய் நீள்கிறது! இந்த விஷயத்தில் பொறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டிய ட்ருடோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். நமது நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை கொலை செய்த கொலையாளிகளை விடுதலைப் போராட்ட வீரர்களாக சித்தரித்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அவ்வப்பொழுது கோயில்களின் மீது அப்பாவி இந்து பக்தர்களின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கனடா நாட்டின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தேர்தல் அரசியலுக்காக கனடா நாட்டில் வாழும் 7 லட்சம் சீக்கியர்களின் ஓட்டுகளுக்காக காலிஸ்தான் பிரிவினைவாத நடவடிக்கைகளை தூண்டி விடுகிறார். இந்து பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டார். மத்திய அரசும் ஐக்கிய நாடுகள் சபையும் கனடா நாட்டு அரசாங்கத்தை கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கனடா நாட்டில் நடைபெற்ற இந்துக்களின் மீதான தாக்குதலை கண்டனம் செய்திருக்கிறார்கள். இருநாட்டு நல்லுறவையும் பேணுகிற வகையில் உண்மையானவராகவும் சர்வதேசச் சட்டங்களின்படி எவ்வளவு தூரம் ஒரு அந்நிய நாட்டில் தலையிட முடியும் என்பது குறித்த தெளிவோடு நடந்து கொள்வது தான் இரண்டு நாடுகளுக்கும் நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும்! வலுத்தநாடு என்கிற பெயரில் ஐந்து கண் நாடுகளின் ஆதரவோடு இந்தியாவை அசைத்துப் பார்க்கலாம் என்று அவர் நினைப்பது இரண்டு நாடுகளின் எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல!. சீக்கியர்கள் இந்துக்கள் என்று வந்தால் ட்ருடோ ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறார். கனடாவின் 1.86 மில்லியன் ஜனத் தொகையில் இந்தியர்கள் ஐந்து சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ள பிராம்டனில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அங்கு வாழும் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் மட்டும் 28 சதவீதம்! இப்படியாக அங்கு கனடக் குடியுரிமையோடு வாழும் இந்தியர்களுக்கு அவர்களுடைய கலாச்சாரங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனில் எந்த நம்பிக்கையில் அவர்கள் கனடாவின் வளர்ச்சிக்கு உழைத்து கொடுக்க முடியும்? அவர்களது சுமூகமான வாழ்க்கை முறையும் இயல்பு வாழ்க்கை முறையும் பாதிக்கப்படும்படியாக அல்லது அச்சம் அடையும் வகையில் மாறும்போது பதற்றங்கள் ஏற்படத்தானே செய்யும்! நேற்று வரை கனடா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் நமக்கு நம்பிக்கை அளிப்பதாகத் தெரியவில்லை! பிரதமர் மோடியும் அங்கே வாழும் இந்துக்களுக்கும் இந்தியர்களுக்கும் முறையான வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் தன் நாட்டில் வாழும் புலம்பெயர் மக்களில் ஒரு சாரார் ஆன அதாவது சீக்கியர்களுக்கு மட்டும் சலுகை வழங்கி மற்றைய இந்தியர்கள் இந்துக்களுக்கு விரோத மனப்பான்மையைக் காட்டுவது என்பது ஒருபோதும் நியாயமாகாது! அது இந்தியர்களை தங்கள் நாட்டுக்குள்ளே பிரித்தாளும் சூழ்ச்சி என்று தான் சொல்ல

வேண்டி இருக்கிறது!இதை நாம் மட்டுமல்ல சர்வதேச 5 கண் நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும். கனடா நாட்டில் இந்துகள மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெரும் துன்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்துக்களும் சீக்கியர்களும் தொப்புள் கொடி உறவாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கனடா நாட்டின் ஜஸ்டின் ரூடோ அரசாங்கம் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு இந்தியாவில் தனி நாட்டை உருவாக்க முயற்சிக்கிறது. #IndiaCanadaIssue #இந்தியகனடாசிக்கல் #ட்ருடோ #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 8-11-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...