Friday, November 29, 2024

ஆணிடத்தில் பெண்ணும், பெண்ணிடத்தில் ஆணும் கொண்டிருக்கும் அன்புக்கு ஈடாக உலகத்தில் எதுவும் இல்லை..

நினைவுகள் என்றும் கனதியானவை!
அவை என்றும் உறுதியானவை!

ஒரே ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என நினைக்கும்படி சிலர்….இனி ஒரு முறை கூட பார்த்து விடக் கூடாது என நினைக்கும்படி சிலர்….
•••

அன்பின் கையெழுத்தாக
மூடிய கதவுகளைத் திறக்கும் திறவுகோலாக
சில நேரங்களில்
மௌனத்தின் சின்னமாகத் திகழ்கிறது

மழைத்துளி போலத் துயரத்தில் ஒரு தேற்றம்
சோர்வுக்குள் உயிர்ப்பூட்டும் ஒளி
மனங்களை இணைக்கும் பாலம்
அன்பின் நவீன மொழி 
உணர்வுள்ள உறவுகள் இன்றைய சந்தை உறவுகள் அல்ல.

ஆணிடத்தில் பெண்ணும், பெண்ணிடத்தில் ஆணும் கொண்டிருக்கும் அன்புக்கு ஈடாக உலகத்தில் எதுவும் இல்லை.. அன்பினால் ஒரு பெண் எதையும் செய்யத் துணிந்து விடுகிறாள். அன்பு இல்லாமல் போகையிலும் அப்படித்தான்.. நீயா?  நானா? என்ற முஸ்தீபுகளை எல்லாம் களைந்து விட்டுப் பார்த்தால், அன்பு என்ற ஒற்றைச் சாளரத்தின் வழியே தான் உயிர் பயணித்துக் கொண்டிருக்கிறது.. 

“Sex is a beautiful 
thing, and it should be 
celebrated, not shamed.”

― Fiona Zedde

எண்ணம் போல் வாழ்க்கை என்போம். அப்படியானால், கெட்டவர்கள் என நம்மால் அறியப்படுகிறவர்கள் எல்லாரும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? நிஜத்தில் அவர்கள் கொண்டுள்ள கெட்ட எண்ணத்திற்கு எத்தனையோ முறை அழிய வேண்டும் அல்லவா? ஆனால், ஏன் அப்படி எதுவும் நிகழ்வதில்லை?
•••
வாழ்க்கை
-ஷண்முக சுப்பையா

பந்தல் கட்டி
 படரவிட்டேன் 
கொடியொன்றை நான்.
அது
படர்ந்து பந்தளித்து
காயொன்றை ஈன்றிட
ஆனந்தம் மேலிட்டு
வளையவளைய வந்தேன்
அதைச் சுற்றி.
வந்ததுதான் 
மிச்சம் எனும்படி 
பந்தலதுவும்
 படுத்ததொருநாள்.
அதை
எப்பாடு பட்டேனும்
எடுத்து நிறுத்திடலாம் 
என்றாலோ
எல்லாம் ஒரே சிக்கல்
அதனால்
எப்படியோ போகட்டும்
என்றிப் பொழுது
என்பாட்டிற்கு
அதன் மூட்டில்
என்னால் முடிந்தமட்டும் 
நீரை மட்டும் 
கொட்டுகின்றேன்.

யாரை எங்கே வைக்க வேண்டும் என்று முதலில் கற்றுக் கொள்ளுங்கள்...
இல்லை என்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்...! இதுவும்
சுயமரியாதைதான்!



No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...