உன் மீது வரும் வரும் விமர்சனங்களை ரசிக்க கற்றுக்கொள்.ஏனென்றால் உன் வளர்ச்சியை தாங்க முடியாதவர்களின் கதறல் அது.
உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழுங்கள்.உங்கள் ரயிலைத் தவற விடாதீர்கள்.
மனிதன் மனிதனாக இருப்பது தான் அவனது அடிப்படை உரிமை.
உண்மையான ஒரு மனித சமூகத்தில் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறானோ அப்படியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
ஒருவன் தெருவில் புல்லாங்குழல் இசைக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அவனை அனுமதிக்க வேண்டும்.
அவனால் இந்த உலகில் மிகப் பெரிய பணக்காரனாக ஆக முடியாது.அவன்
தெருப்பிச்சைக்காரனாகத் தான் இருக்க முடியும்.
இன்னும் நான் சொல்கிறேன், சுதந்திரம் என்பது விலை மதிப்பற்றது. நீங்கள் ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக இல்லாமல் தெருவில் புல்லாங்குழல் வாசித்துச் செல்லும் ஒரு பிச்சைக்காரனாக இருக்கலாம்.
ஆனால் நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள்.
அப்படியிருப்பதில் ஒரு ஆழ்ந்த மனநிறைவு, திருப்தி ஏற்படும்.
இதை அறிந்துக் கொள்ளவில்லையெனில் நீங்கள் வாழ்க்கையெனும் ரயிலைத் தவற விட்டு விட்டவர்களாகி விடுவீர்கள்.
ஆசை என்பது, பொதுவான கருத்துக்கு நேர்மாறாக ( அதாவது ஆசை தவறானது, தவிர்க்க வேண்டியது போன்ற கருத்துக்களுக்கு நேர்மாறாக) மனிதனின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷமாகும். அது வாழ்வின் அழிவில்லாத தீச் சுடர் ஆகும்; அதுவே வாழ்க்கை ஆகும். அதனுடைய இயல்பும் செயல்முறையும் புரிந்து கொள்ளப்படாதபோது , எப்படிப்பட்ட ஆசையாகினும், அது கொடூரமானதாகவும், கொடுங்கோன்மை செயலாகவும், மிருகத்தன்மையானதாகவும், முட்டாள்தனமானதாகவும் ஆகிவிடுகிறது. ஆகவே உங்கள் வேலை உலகில் பெரும்பாலான ஆன்மீகவாதிகள் செய்ய முயற்சிப்பது போல ஆசையை அழிப்பது கிடையாது, மாறாக அதைப் புரிந்து கொள்வதே ஆகும்.
நீங்கள் உங்கள் ஆசையை அழிப்பீர்கள் என்றால், நீங்கள் ஒரு அழகான மரத்தின் காய்ந்துபோன கிளை போல இருக்கிறீர்கள். ஆசை வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும் மேலும் அதன் உண்மையான அர்த்தத்தை அது உண்டாக்கும் முரண்பாடு மற்றும் உரசல்களின் மூலமாகக் கண்டறியுங்கள். முரண்பாடுகளைத் தொடர்வதன் மூலமாக மட்டுமே புரிதல் உண்டாகக்கூடும். இதைத்தான் பெரும்பாலான மக்கள் காண்பதில்லை.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
Public Talk - Los Angeles, 10 th April 1930
நாம் எளிமையாக இருக்க பயப்படுகிறோம். விஷயங்கள் சிக்கலானதாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். விஷயங்கள் எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நம்மை அறிவாளிகள் என்று நினைக்கிறோம்.
விஷயங்களை மிக எளிமையாகப் பார்க்க நமக்குத் தெரியாது.
ஆனால் நீங்கள் அவற்றை மிக எளிமையாகப் பார்க்கும்போது, நீங்கள் எல்லா அறிவாளிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறீர்கள்.
பின்னர், நீங்கள் உண்மையான ஒன்றைக் காண்கிறீர்கள் - அது உங்களுடையது அல்ல; அது உங்கள் மூளையால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல.
யதார்தங்களுக்குத்தான்
எத்தனை வலிகள்
எத்தனை உதைகள்
எத்தனை அடிகள்...
எத்தனை துரோகங்கள் ..
எத்தனை அவப்பெயர்கள் ....
எத்தனை தண்டனைகள்
எத்தனை கதவடைப்புகள்...
எத்தனை ஏமாற்றங்கள்
யதார்த்தம் இயற்கையோடு
ஒன்றிய அருள் மழை...
உண்மையான இதயத்தின்
அருட்கொடை....
யதார்த்தங்கள் எல்லாவற்றையும்
யதார்த்தமாக்கிக் கொள்ளும் ...
அர்த்தப்புதையல்களின்
கையில் தான் கவித்துவமான
வெற்றியின் வானம்
விசாலமாய் விரித்து கிடக்கிறது ....
வார்த்தைகள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் கடைசியில் வரும் மவுனம் மட்டுமே தீர்மானிக்கும் அதன் முடிவை
No comments:
Post a Comment