Friday, November 29, 2024

#அமெரிக்காஅதிபர்தேர்தல்

 #அமெரிக்காஅதிபர்தேர்தல்

#டிரம்ப்

#USpresidentialelection #DonaldTrump #KamalaHarris, ————————————— உலகின் குடியேற்ற ஜனநாயக நாடுகளின் தலைமையில் இருக்கும் அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில் இன்றைக்கு வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. இரண்டு பிரதான எதிர் முகாம்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹாரிஸ் அவர்களும் ஏற்கனவே பதவியில் இருந்து வரும் அதிரடி பேச்சுகளுக்குச் சொந்தக்காரரான டிரம்ப் இருவருக்குமான கடும் போட்டி நிலவி வந்த சூழலில் உலகமே இந்த அமெரிக்க அதிபர்த் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருந்த வேளையில் டரம்ப் ஜெயித்து விட்டார் என்கிற செய்தி வந்து விட்டது! இருவரில் யார் ஜெயித்தாலும் உலக அரசியலில் அவை பல்வேறு வகையில் எதிரொலிக்கும் என்பதோடு பொருளாதாரம் மற்றும் அரசியல் பண்பாடு சார்ந்த வணிகம் பங்கு வர்த்தகம் என பல துறைகளிலும் மாற்றங்கள் வரும் என்பது பல்வேறு அரசியல் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருந்தது! அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒருவர் இரு முறைக்கு மேல் அங்கு பதவிக்கு வர இயலாது! இது ட்ரம்புக்கு இரண்டாவது முறை!மொத்தம் 24கோடியே 4லட்சம் அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஜனநாயக கட்சியை சேர்ந்த வேட்பாளர் கமலா ஹாரிஸ் அவர்கள் இன்று துணை அதிபராக பதவி வகித்து வரும் நிலையில் தொடர்ந்து அதிபர் பதிவிற்கும் போட்டியிட்டார்! அவருக்கு எதிராக குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் ஏராளமான வாக்குறுதிகளை தொலைக்காட்சியில் அள்ளி வீசினார்.. ஒருவேளை இந்த தேர்தலில் கமலஹாரிஸ் ஜெயித்திருந்தார் என்றால் அமெரிக்காவில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்திருப்பார். கூடவேஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க அதிபர் என்கிற பெருமையும் கிடைத்திருக்கும். இம்முறை அவருக்கு வாய்ப்பு தவறிவிட்டது. சமீபமாக நடந்து வரும் உக்கிரேன் யுத்தம் மற்றும் இஸ்ரேல் காசா பிரச்சனைகள் குறித்த விவகாரங்களில் இந்தியாவின் போக்குகள் குறித்து அமெரிக்காவிற்கு அதிருப்திகள் உள்ளன என்று நான் ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதி உள்ளேன். குறிப்பாக மோடி எடுத்த சில ஜனநாயக முறைப்படியான பின் வாங்காத உறுதியான முடிவுகள் தங்களுக்குச் சாதகமாய் இல்லை என்கிற முறையில் அமெரிக்க இந்திய உறவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதும் உண்மை! போக இந்திய கனடா பிரச்சினைகளும் இதன் பின்னணியில் இருக்கின்றன! இந்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலஹாரிஸ் அங்கே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இல்லை என்பதும் எதிர்பார்த்ததுதான்? அவர் ஒருவேளை வெற்றி பெற்றுஇருந்தால் இந்தியாவிற்கு சாதகமாக இருந்திருப்பார் என்கிற சம்சயத்தில் அங்கு வாழக்கூடிய குடியேற்ற அமெரிக்கர்கள் மீண்டும் டிரம்பையே தேர்ந்தெடுத்து விட்டார்களோ என்னவோ! தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள் இப்படியாகத்தான்இருக்கிறது! ட்ரம்ப் ஜெயித்தால் என்ன! இன்று சர்வதேசப் பிரச்சனைகளில் இந்தியாவின் கருத்து உலக நாடுகளில் முக்கியமாக பார்க்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது! இந்திய உள்நாட்டு அரசியல் சிக்கல்கள் என்பது வேறு சர்வதேச சிக்கல்கள் என்பது வேறு என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு நான் சொல்வது எளிதாக விளங்கும்!

பன்னாட்டு ஓருலகப் பொருளாதாரம் உருவாகிவிட்ட காலத்தில் ஒவ்வொரு நாடும் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளில் ஒரு சாத்தியமான நிலையை பேணவேண்டியிருப்பதாலும் அந்த நாட்டு தேசிய வருமானங்களுக்குள் தங்களுடைய செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டி இருப்பதாலும் வரி விகிதங்கள் கடன் சுமைகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலும் இன்று அனைத்து ஜனநாயக நாடுகளும் வெளியுறவு விவரங்காரங்ளில் சிக்கலை எதிர்கொள்கின்றன!. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல! ஆனால் ட்ரம்ப் ஜெயித்து இருப்பதால் மீண்டும் அதே அமெரிக்க போலீஸ்காரத்தன்மை தான் எல்லா நாடுகளின் மீதும் நிலவும் ஏனெனில் டிரம்ப் ஒரு மிகப்பெரும் கோடீஸ்வரர் அவர் அறம் சார்ந்த ஜனநாயக பூர்வமான முடிவுகளை எடுப்பார் என்று சொல்ல முடியாது! வறுமைப்பட்ட நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் மீது அவரது வெளியுறவு கொள்கைகள் சுரண்டல் வடிவத்தில் தான் இருக்கும். அங்கே அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு கூட அவர் கருணை காட்ட மாட்டார் அவர்களை வெளியேற்றும் படிக் கூட இனிச் சொல்லுவார் என்பது என்னுடைய எண்ணம். தனக்குப்போட்டியாக துணை அதிபராகவும் இந்திய வம்சாவளி பெண்ணாகவும் கமலா ஹாரிஸ் தேர்தலில் நின்று தோற்று இருப்பதால் ட்ரம்பின் இன்றைய வெற்றி இன்னும் அவருக்கு அகங்காரத்தைத்தான் தரும்! கவனித்து பார்த்தோமேயானால் இந்திய வம்சவழிப் பெண்ணான கமலஹாரிஸ் அங்கே மெதுவாக படிப்படியாக அரசியல் முன்னேற்றங்களை தன்னுடைய சொந்த கருத்தாலும் அங்கு இருக்கக்கூடிய பல்லின குடியேற்றவாதிகளை அல்லது குறிப்பாக அமெரிக்கர்களை ஒரு சாத்வீகமான முறையில் இந்திய சகிப்புத்தன்மை முறையில் அனுசரித்துக் கொண்டு வந்தததால்தான் அவர் இந்த நிலையை அடைந்திருக்கிறார் என்பது என்னுடைய வாசிப்பு. போக அவர் ஜெயித்து இருந்தால் இந்திய சந்தைக்கும் அமெரிக்காவினுடைய உற்பத்திக்கும் இல்லை பல நாட்டு உற்பத்தி உறவுகளுக்கும் அவர் ஒரு பாலமாக இருந்திருப்பார்! அவரும் அமெரிக்கர் தான் என்றாலும் கூட இந்திய அமெரிக்க உறவில் மாற்றங்களைக் கொண்டுவர அவர் காரணமாக இருக்கக்கூடிய சிறப்பான தகுதி உடையவர் என்று நான் நினைத்தேன்! பரவாயில்லை டிரம்பே ஜெயித்து விட்டார்!இனி வழக்கம் போல உலக இடர்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்! இதில் வேறு என்ன சொல்ல இருக்கிறது! இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாக அளிக்கும் ஓட்டுகள் பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிறது! அதாவது எந்தக் கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் மக்களிடம் நேரடியாக அதிகச் செல்வாக்கான ஓட்டுகளைப் பெற்று இருக்கிறார் என்பதைக் குறிப்பதே பாப்புலர் ஓட்டு! ஆனால் அந்த பாப்புலர் ஓட்டு பெற்றவரே தான் அதிபர் ஆவார் என்றெல்லாம் சொல்ல முடியாது! இதுதான் அமெரிக்க தேர்தலின் விசித்திரமான விஷயங்கள்! அப்படி இல்லாமல் எலக்ட்ரோரல் காலேஜ் உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டுதான் அதிபரின் வெற்றியை தீர்மானிக்கும். கடந்த 2016 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் எதிர்த்துப் போட்டியிட்ட கிளாரி கிளின்டனுக்கு 30 லட்சம் கூடுதல் பாப்புலர் ஓட்டுகள் கிடைத்தன! ஆனால் எலக்ட்ரோரல் காலேஜ் ஓட்டெடுப்பில் ட்ரம்புக்கு 304 ஓட்டுகளும் கிளாரி கிளின்டனுக்கு 227 ஓட்டுகளுமே கிடைத்தன. இந்த 2024 தேர்தலில் பாப்புலர் ஓட்டும் எலக்ட்ரோரல் காலேஜின் வாக்குகளும் எப்படி இருந்தது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்! முன்பு சில வருடங்களுக்கு முன் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி.. அடைந்த டிரம்ப் சொன்னதாவது. .... நானே வெற்றி. நானே ஜனாதிபதி என்று சொல்லி வெள்ளை மாளிக்கைக்குப் போய் அங்கேயே பிடிவாதமாக ஜனாதிபதி நாற்காலியின் மீது உட்கார்ந்தார். இவரை பாதுகாப்பு அதிகா ரிகள் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டே வெளியே வாரந்தாவில் டிரம்ப் அமர்ந்தார். நானே ஜனாதிபதி என்று கூச்சலிட்டார். கமலா ஹாரிஸ் தேர்தல் முன்பு இந்திய தனது தொடர்புகள் குறித்து பெருமையாக எழுதி இருந்தார். இதனால் இந்திய வாக்களார்கள் ஓட்டை பெற நினைத்தார். #டிரம்ப் #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...