மக்கள் நலனுக்காக ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டு அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் வேறு ஒரு நோக்கத்திற்கும் பயன்படுத்தியது உண்டு. இதுவும் நீதிமன்றங்களுக்கு வழக்காக வந்தன.
அண்மையில் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அளித்த தீர்ப்பில் கிருஷ்ணய்யர் தீர்ப்பு சரியானது அல்ல. நிலங்களை தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவரை அரசாங்கங்கள் எடுத்துக் கொள்வது நியாயம் கிடையாது என 97 பக்க தீர்ப்பு அளித்தது. நில ஆர்ஜித சட்டத்தில் அதற்கென தகுந்த காரணங்களை வகுத்துக் கொண்டுதான் தனியார் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்ற கிருஷ்ணய்யர் அமர்வு கொடுத்த தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பை தந்தது. கடந்த காலத்தில் கிருஷ்ணய்யர் அமர்வில், நிலம், வீடு முதலிய அனைத்து சொத்துக்களும் நாட்டின் பொது சொத்துக்களாகக் கருதப்பட வேண்டும், பொதுமக்கள் நலனுக்கு தேவைப்பட்டால் தனியார் சொத்துக்களை அரசு விரும்புகின்ற இழப்பீடுகளைக் கொடுத்து நிலத்தை எந்தவித தடையும் இல்லாமல், தாராளமாக ஆர்ஜிதம் செய்யலாம் என்ற தீர்ப்பு இன்றைக்கு செல்லுபடி ஆகாத நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமயிலான தீர்ப்பு வந்துள்ளது. நீதிபதி கிருஷ்ணய்யர், அரசாங்கம் ஒரு சொத்தை மக்கள் நலனுக்காக ஆர்ஜிதம் செய்துவிட்டால், அந்த சொத்தில் எந்த விதமான உரிமையோ, சொத்துக்கான பந்தமோ உரிமையாளருக்கு இருக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருந்தார். மேலும், தனி நபர்கள், தனி நிறுவனங்கள்ளைக் காட்டிலும் சமூக நலன் முக்கியம் என்ற கிருஷ்ணய்யரின் கோட்பாட்டின் ( Iyer’s doctrine) அடிப்படையில் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்பு அன்று இருந்தது. ஆனால், அன்றைய காலகட்டங்களில் அந்தக் கோட்பாடு, அந்த நெறிமுறைகள் பெரிதாக மதிக்கப்பட்டாலும், இன்றைக்கு உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் வந்துவிட்டது. இன்றைய நிலையில் அதைச் சிந்திக்க வேண்டும் என்று சமீபத்தில் வந்த தீர்ப்புக் கூறுகிறது. கிருஷ்ணய்யர் தீர்ப்பு 1977 இல் அவசரநிலை காலத்தில் அளித்த தீர்ப்பாகும். அந்த தீர்ப்பு 42வது அரசியல் சாசன திட்டத்தில் இந்திராகாந்தி கொடூரமாக கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோசியலிசம் என்ற நிலையில் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. கிருஷ்ணய்யர் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சென்னை ராஜதாணியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இம்எம்எஸ தலைமையில் அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த தீர்ப்பை மாற்றி அமைக்கக்கூடிய வகையில் சமீபத்திய டி. ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு, கிருஷ்ணய்யரின் தீர்ப்புக்கு மாறாக உள்ளது. அதாவது, அரசாங்கம் தங்களுக்கு ஏற்றவாறு தனியார் நிலங்களையோ, சொத்துக்களையோ இனிமேல் ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. கிருஷ்ணய்யருடைய சோசலிசம், மக்கள் நலன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தனியார் சொத்துக்கள் எவ்வளவு சிரமப்பட்டு, அதை காலங்காலமாக விவசாய நிலங்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்று சந்திரசூட் கூறியுள்ளார். இந்த நிலையில் 1986இல் மகாராஷ்டிரா அரசு, மும்பையில் பொதுமக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஹவுசிங் ப்ராஜெக்ட் என்று சில தனியார் நிலங்களை கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் ஒரு சங்கம் அமைத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு மனு தாரர்களுக்கு எதிராக தள்ளுபடி ஆனது. அதற்கு மேல்முறையீடாக 1992-ல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் உட்பட மேலும் பல்வேறு நில ஆர்ஜித வழக்குகளை எல்லாம் சேர்த்து 2002-ல் 9 நீதிபதிகள் இடம்பெற்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், ரிஷிகேஸ் ராய், நாகரத்னா, சுதன்சு துலியா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிந்தல், சுரேஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மைஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு, அண்மையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதில், சந்திரசூட் உள்பட 7 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வாசித்தனர். இதில், கிருஷ்ணய்யருக்கு எதிராக, தீர்ப்பில் சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்த வழக்கில் இருந்த பெண் நீதிபதி நாகரத்தினா தனி தீர்ப்பு வழங்கினார்,மற்றும் ஹார்ஸ் ஆகியோர் தங்களுடைய எதிப்பினைத் தெரிவித்துள்ளனர். நீதிபதி ராய், ஆக்கப்பூர்வமான, எதிர்நோக்குப் பார்வையில் இயற்கை வளத்தை மனதில்கொண்டு அறிவுபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைப் பதிவு செய்யவேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் சிறப்புப் பொருளாதார
Subscribe to:
Post Comments (Atom)
#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.
———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment