Friday, November 29, 2024

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை..

 பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை..

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு, அட சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு.. எவ்வளவு அதிக சொத்து, அதிக புகழ், அதிக அனுபவம், அதிக அறிவை நாம் சேகரிக்கிறோமோ, அவ்வளவு விரைவாக graphic fall போல் இருக்கும். இருக்கும் இருப்பதை கொண்டு மகிழ்வாக வாழ வேண்டும். மனதின்கட்டமைப்பேகையகப்படுத் துதல் மற்றும் பொறாமையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனித்தால், நீங்கள் சிந்திக்கும் விதத்தை கவனித்தால், பொதுவாக நாம் சிந்தனை என்று அழைப்பது ஒப்பீட்டு செயல்முறை என்பதை நீங்கள் காண்பீர்கள்: "என்னால் இன்னும் சிறப்பாக விளக்க முடியும், எனக்கு அதிக அறிவு உள்ளது; அதிக ஞானம் உள்ளது." 'இன்னும் அதிகமாக' என்றஅடிப் படையில் சிந்திப்பது, கையகப்படுத்தும் மனதின் செயல்முறையாகும்; இதுதான் வாழ்வியலாக இங்கு உள்ளது. நீங்கள் 'இன்னும் அதிகமாக' என்ற அடிப்படையில் சிந்திக்கவில்லை என்றால், சிந்திப்பது என்பதே கடினமாக இருப்பதை காணமுடியும்.. உங்கள் வரையறைகளுக்கு விழித்துக்கொள்ளும்போது, சார்பின்றி அதைப் பாருங்கள். உண்மையைப் பாருங்கள், அதைப்பற்றி கருத்துக்களைக் கூறாதீர்கள். #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 7-11-2024 (படம் - கிராமத்தில், ஐப்பசி - நெல் நாற்று நடவு காலம்)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...