Friday, November 29, 2024

#யார்இந்தகழிசடை⁉️

 #யார்இந்தகழிசடை⁉️

#வழக்குதொடரப்படும். வாயை அடக்கிப் பேசு! #நடிகைகஸ்தூரிஉன்மீதுவழக்கு #பீடம்தெரியாமல்சாமிஆடாதே ———————————— நடிகை கஸ்தூரி என்ற நபர் எது வேண்டுமானாலும் பொது வெளியில் பேசலாமா? தெலுங்கு பேசுபவர்கள் தமிழ்நாட்டுச் சங்க இலக்கியத்தைக் கால காலமாகப் பாதுகாத்து வந்தது தொடங்கி தாங்கள் தமிழில் எழுதிய படைப்புகள் பலவற்றையும் தொகுத்துப் பகுத்து நூல் ஆக்கி அதற்காகத் தொண்டு செய்த பலரும் இங்கே இருக்கிறார்கள். தொடக்க கால தமிழ்நாட்டின் அரசியலில் அவர்கள்தான் தாங்கள் வகித்த அத்தனைப் பதவிகளையும் பயன்படுத்தி எழுத்துச் சீர்திருத்தம் முதல் பல்வேறு மக்கள்ச் சீர்திருத்த நடைமுறைகளை அமல்படுத்தினார்கள். எந்த ஒரு வரலாறும் தெரியாமல் வந்து நின்று கொண்டு முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது! சினிமாவில் நடிகையாக இருந்து கொண்டு எதோ நெடுங்காலமாக மக்களுக்குப் பாடுபட்ட மாதிரியும் சமூக சேவைகள் செய்தது மாதிரியும் வந்து எதையாவது பேசி கவர்ச்சி அரசியல் பண்ணக்கூடாது!. நான் கேட்கிறேன் உனக்கு என்ன தெரியும்? நடிகை கஸ்தூரி என்பதை தவிர மக்களுக்கு உன் வரலாறு எதற்கு வேண்டும்! அப்படி வரலாறு முதற்கொண்டு எல்லாவற்றையும் வாசித்து அதன் பொருளைப் புரிந்து பிறகு வந்து பேசினால் இப்படிப்பட்ட அபத்தமான பேச்சுக்களை பேசிக் கொண்டு திரிய மாட்டாய்! நாயக்கர் மக்களும் தெலுங்கு பேசும் மக்களும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டு என்னென்ன நலன்களைக் கொண்டு வந்தார்கள் பல நூறு ஆண்டுகளாக அவர்கள் செய்த மக்கள் அரசியல் பணி என்னவாக இருந்தது இன்னும் இருக்கிறது என்பதை வாசித்துக் கொண்டு வர வேண்டும்! இங்கு தெலுங்கு பேசும் பிராமணர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்! உங்கள் அம்மா ஹைகோர்ட்டில் வக்கீலாக இருந்தார்! அவர்பின்னால் வந்த ஒரு காலேஜ் ஸ்டூடண்டாக உன்னைப் பார்த்ததுண்டு.. சுபாஷ் கான சாகாய் வந்து துவக்கி வைத்த 1990 இல் கலைஞர் தலைமையில் நடந்த திரைப்பட விழாவில் கம்பெயராக இருந்தாய்!. பிறகு நாட்டுக்கு வேறு என்ன செய்தாய்? தெலுங்கர்கள் என்று பிரிவினை பேசும் வாயை அடக்கிக் கொள்ள வேண்டும்! தமிழ்நாட்டு அரசியலில் தெலுங்கர்களின் பங்களிப்புப் பற்றி உனக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டின்வளர்ச்சியில் தொழில் முனைவோராக அரசியலில் மக்கள் பணி செய்தவராக பலரும் இங்கு வாழ்ந்து தியாகம் செய்துவிட்டு போயிருக்கிறார்கள்! உனக்கு என்னம்மா தெரியும்? நீலகண்ட சாஸ்திரியை படித்திருக்கிறாயா? சத்தியநாத அய்யர சாண்டில்யனுடைய நாவல்களைப் படித்திருக்கிறாயா? தெலுங்கு பிராமணர்களும் இங்கு வாழ்கிறார்கள்! அவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறாயா நீ? இந்த சென்சேஷன் மற்றும் தூண்டி விடுகிற வேலைகளை எல்லாம் முகம் தெரிந்த நடிகை என்கிற பெயரில் ஊடகங்களில் செய்யக்கூடாது! அளவறிந்து அனைத்தும் அறிந்து பேச வேண்டும். அவை அறிந்து வட்டாடுதல் வேண்டும்! அறிவளித்தனமாகப் பேசுவதாக நம்பிக் கொண்டு வாந்தி எடுக்கும் வேலை இது! உன் வாயை, வலை சுருட்டி வை சினிமாவில் நடித்த நடிகைகள் என்றால் அவர்கள் எது சொன்னாலும் எடுபடும் என்று வைரல் செய்யும் வெட்டி வேலை ஊடகங்களுக்கு வாய்க்கரிசி போடும் வேலை இது! விளையாட்டுத் தனங்களை விட்டுவிட்டு எச்சரிக்கையாகப் பேசவேண்டும் கஸ்தூரி! இது பொதுமக்களும் அரசியலும் நாட்டு நலன் கருதிச் சந்திக்கும் புள்ளி! கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கழிசடைத்தனமாக பேசும் கஸ்தூரி!
மாதரசி கஸ்தூரி.. உங்களை நீங்கள் திருத்தி கொள்ளுங்கள். இல்லையேல் திருத்தப்படுவீர்கள். பிராமணர்களிலும் தெலுங்கு பேசும் ஐயர், ஐயங்கார் சமூக மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழ் அந்தபுர பெண்களுக்கு சேவகம் செய்ய வந்தவர்களா?தப்பு அபிராயம் பரப்பாதே. நீ போற்றும் காஞ்சி பெரியவர் தெலுங்கு தாய்மொழியாக கொண்டவர் என்பதை மறந்து விடாதே.உனக்கு மேடை அமைத்து கொடுத்த அர்ஜுன் சம்பத் ஒரு தெலுங்கர் என்பதை மறந்து விடாதே. தேசம் பாதி தெலுங்கன் பாதி என்பதை இந்த பதிவிரதை அம்மணிக்கு யார் தான் எடுத்து சொல்வது. பிராமணர்களே....இது போன்ற கழிசடைகளை கூப்பிட்டால் உங்களுக்கு தான் அவமானம். யாரோ தெலுங்கு பேசும் நபர் கொடுத்த அடியை தாங்க முடியாமல் இப்படி பேசுகிறார் என்று எண்ணுகிறேன். இந்த நாட்டின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் தெலுங்கு மன்னர்கள் என்பதை மறந்துவிடாதே. ஒரு தனி மனிதரை தாக்க வேண்டும் என்றால் பேர் சொல்லி தாக்கு. இல்லையென்றால் உன் வேலையில் தொடர்ந்திடு. பேசாமல் இருக்கும் தெலுங்கு மக்களை சீண்டாதே. நாங்கள் சகாப்தம் படைத்தவர்கள். பேரரசன் சாலிவாகனன் கூட ஒரு தெலுங்கு அரசன் தான் . மறந்து விடாதே.பொது வெளியில் நீ பேசிய அறமற்ற பேச்சுக்கு உடனே மன்னிப்பு கேள். பாரதி நாட்டு உடமை செய்ததும் தெலுங்கு முதல்வர்தான். இப்படி பல விடயங்கள் உண்டு. இதை எல்லாம் படித்து விட்டு வா…. உன் மீது வழக்கு தயார். #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 4-11-2024

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...