Wednesday, November 20, 2024

#தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1

 #தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1

தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்) உதயமான நாள் வேறு. பெயர் மாற்றம் நாள் வேறு…. #காமராஜர், #எம்ஜிஆர், #கலைஞர், #நெடுமாறன், #வைகோவைத்து2006இல்நான்_எடுத்தவிழா.இங்கு புரிதல் இல்லை என்ன சொல்ல⁉️ (1) #இன்று_நவம்பர்1, இதே நாள்….. 1956 இல் #இன்றையதமிழகம் எல்லைகள்,நில பரப்பு #அமைந்தநாள். தெற்கே கன்னியாகுமரி, வடக்கே திருத்தணி பெற்று அமைந்தது. தென்காசி மாவட்ட செங்கோட்டையும் இணைந்த நாள் என முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்தில் ஏன் வரவில்லை. வரலாற்று பிழைகள் கூடாது. இன்றைய தமிழகம் எல்லைகள் அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகிறோம். தமிழ்நாடு நாள் உருவாகி 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நாளை எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருத்தணியையும் கன்னியாகுமரி மாவட்டத்தையும் இணைத்ததை மட்டும் சொல்லியுள்ளார். ஆனால், இதே அளவுக்குப் கரையாளர் தலைமையில் போராடிப் பெற்ற செங்கோட்டையை ஏன் சொல்லவில்லை? பூகோள ரீதியான விஷயங்களை கவனித்து தென்காசி மாவட்டம் செங்கோட்டையையும் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? இற்றைத் தமிழ்நாடு உருவான நாளில் எல்லை மீட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்களை நினைவுகூர்வோம்! வடக்கெல்லைப் போராளிகள்: ம.பொ.சிவஞானம், கே.விநாயகம், மங்கலங்கிழார், சித்தூர் சி.வி.சீனிவாசன், தணிகை என்.சுப்பிரமணியம், பொதட்டூர்பேட்டை ஏ.ச.தியாகராஜன், ஏ.ச.சுப்பிரமணியம், சித்தூர் வழக்கறிஞர் என்.அரங்கநாத முதலியார், திருவாலங்காடு திருமலைப் பிள்ளை, தணிகை காந்தி, ஜோதிடர் சடகோபாச்சாரியார். தெற்கெல்லைப் போராளிகள்: குமரித் தந்தை மார்‌ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், சிதம்பரநாதன் நாடார், எம்.வில்லியம், டி.டி. டேனியல், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரம் பிள்ளை, சிவதாணு பிள்ளை, ராமசாமி பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. தமிழ்நாடு பெயர் வேண்டி உயிர் நீத்த சங்கரலிங்கனார். சித்தூர் திருப்பதி காஹஸ்தி கொள்ளேகால் மாண்டியா கொல்லங்கோடு வனப்பகுதி பெங்களூர் தண்டுப்பகுதி கோலார் தங்கவயல் பகுதி தேவிகுளம் பீர்மேடு நெய்யாற்றின்கரை செங்கோட்டை வனப்பகுதி பாலக்காடு வனப்பகுதி நெடுமாங்காடு வண்டி பெரியார், பாலக்காடு,திருப்பதி, குடகு இவை அனைத்தும் தமிழகத்துடன் சேர்க்கப்பட வேண்டும். முடியுமா நதிநீர் சிக்கல் மூன்று மாநிலங்களிடமும் இன்றளவும் உள்ளது.


*திருத்தணி தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டது ஏப்ரல் 1, 1960-அன்று.



No comments:

Post a Comment

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி,

  #அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் # தமிழ்நாடு 68* #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான ந...