Sunday, December 29, 2024

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters
#PV. NarasimhaRao 
#ManmohanSingh
#officialfuneralrites
———————————————————-
#முன்னாள்பிரதமர்கள்
#பிவி.  நரசிம்மராவ்
#மன்மோகன்சிங்
#இறுதிச்சடங்குகள் 
———————————————————-
Yesterday, 28-12-2024 in the wake of the official funeral rites conducted by the Indian government for the late former Prime Minister Manmohan Singh, both Congress leader Rahul Gandhi and Tamil Nadu Chief Minister M. K. Stalin voiced their criticism. They claimed that the ceremony was conducted improperly and issued public statements to that effect. However, one has to wonder: on what grounds are they making these assertions?



The irony of their criticism is glaring when we look back at their own party’s history. Under Congress rule, when Sonia Gandhi was the party president, the funeral of former Prime Minister 



P. V. Narasimha Rao was handled without any official ceremony or memorial. His body was hastily moved to Hyderabad, and when the truth of this was exposed, they swiftly shut the doors of the Congress office. Given this, one must ask: how can those who mishandled such an important national figure’s farewell now claim the moral high ground when criticizing the respectful ceremony for Manmohan Singh?

Does Tamil Nadu Chief Minister Stalin know about this history? If so, shouldn’t he be asking about this justice? It’s unlikely that Stalin is aware of the events surrounding Narasimha Rao’s death in 2004!
Rahul Gandhi, too, seems to have little moral authority to comment. When a Prime Minister passed away during their tenure, his body was immediately sent to his hometown and later buried in Delhi without any formal ceremony or acknowledgment. Yet now, Rahul Gandhi is quick to criticize the lack of respect shown to another Prime Minister. The hypocrisy is clear. In a nation as diverse and vast as India, should not a Prime Minister, elected by the people, be treated with respect according to national traditions, regardless of political differences?
The situation is reminiscent of an old saying: "When the mother-in-law breaks something, it’s a golden pot; when the daughter-in-law breaks something, it’s a clay pot." The Congress party failed to follow the tradition of offering a dignified farewell to Narasimha Rao. In contrast, the current BJP government has respected this tradition by conducting Manmohan Singh’s funeral rites with the due reverence.
So, what are we witnessing now? Is it a genuine concern for respect, or is it just opportunistic criticism? Complaints without substance are nothing but hypocrisy. The question arises: Does the conscience of these leaders not bother them? What kind of politics are they playing, even in the face of death?

நேற்று 28-12-2024 இந்திய அரசு முறைப்படி நடத்திய மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின்  இறுதிச் சடங்கினை விமர்சிக்கும் முகமாக  அச்சடங்கு  முறையாக நடக்கவில்லை என்று ராகுல் காந்தியும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினும் முறையிட்டு இருக்கிறார்கள். அதற்கான அறிக்கையும் விட்டுள்ளார்கள். இவர்கள் எந்த அறிதலில் இவ்வாறு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

அதே காங்கிரஸ் காலத்தில் சோனியா தலைவராக இருக்கும் பொழுது 2004 இல் பிரதமராக இருந்து மறைந்த  பி வி நரசிம்மராவ் அவர்களின்  திரு உடலை டெல்லியில் அடக்கம் செய்து அதற்கு முறைப்படி எந்த நினைவுச் சின்னமும் எழுப்பாமல் அன்றைக்கே அவரது உடலை ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லுமாறு கையைக் காட்டி விட்டு உண்மையைச் சொன்னால் விரட்டிவிட்டு டில்லி தலைமை காங்கிரஸ் காரியாலய கமிட்டியினுடைய கதவுகளை மூடிவிட்டார்கள். அப்படிச் செய்துவிட்ட உங்களுக்கு நியாயம் பேச என்ன தகுதி இருக்கிறது.

இந்த வரலாறு எல்லாம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் இந்த நியாயத்தைக் கேட்டிருக்க வேண்டாமா? 2004 இல் நடந்த நரசிம்ம ராவின் இறப்புச் சம்பவம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ராகுல் காந்திக்கு மட்டும் கூட இதில் என்ன ஒழுக்கம் தெரிகிறது? தங்கள் ஆட்சியில் இறந்த ஒரு முன்னாள் பிரதமரை அவரது ஊருக்கு உடனே விரட்டி விட்டு அங்கே அடக்கம் செய்யுங்கள் என்று துரத்தி விட்டீர்கள். இன்னொரு பிரதமரின் நல்லடக்கத்திற்கு சரியான மரியாதை இல்லை என்று முறையிடுகிறீர்கள்.  உங்கள் ஆட்சியில் எல்லா பிரதமரையும் ஒரே மாதிரி தானே பார்க்க வேண்டும் ஒரு தேசிய நாட்டில் உங்கள் ஆட்சியில்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை எவ்வாறு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? மாமியார் உடைத்தால் பொன்குடம் !மருமகள் உடைத்தால் மண்குடம்! என்கிற கதையாகத்தான் இருக்கிறது. இறந்த பிரதமர்களை டெல்லியில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்கிற மரபை நீங்கள் தானே நரசிம்மராவ் இறப்பில் தவறவிட்டீர்கள். இன்றைய பாஜக அரசு அதைத் தன்னளவில் சரியாகத்தானே செய்து கொண்டிருக்கிறது!

உங்களுக்கு என்ன வந்தது இப்போது! அது சரி இல்லை! இது சரியில்லை! என்று சொல்லிக் கொண்டிருப்பது என்ன ஒரு வேடிக்கை ! தன் நெஞ்சே தன்னைச் சுடாதா? இவர்களெல்லாம் என்ன மாதிரியான மனிதர்கள் என்றே தெரியவில்லை! சாவிலும் அரசியல்! அநாகரிகம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!!

டெல்லியில் மட்டும் சோனியா குடும்பம் ஆக்கிரமித்துள்ள அரசு இடம் 110 ஏக்கர்! பிற காங்கிரஸ் தலைவர்கள் பெயரில் சமாதி வைக்க, காங்கிரஸ், ஆக்கிரமித்து உள்ள இடங்கள் இந்தியா முழுவதும் பல ஆயிரம் ஏக்கர்! எல்லாம் அரசின் இடங்கள்! 
        இதில் ஏதாவது ஒரு இடத்தில் மன்மோகன் சிங்  சமாதிக்கு இடம் கொடுக்க சோனியாவுக்கு விருப்பம் இல்லை! 
       மீண்டும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏக்கர் கணக்கில் ஆன இடத்தை கேட்கிறது காங்கிரஸ்! 
       இப்படி ஒவ்வொரு முன்னாள் பிரதமர்களுக்கும் ஏக்கர் கணக்கில் இடம் கொடுத்தால் கடைசியில் இந்தியாவில் சமாதிகள் மட்டுமே மிஞ்சும்! 
        ஏழைகள் அரை சென்ட் இடத்திற்கு கஷ்டப்படும் போது, பல நூறு ஏக்கர் நிலங்கள் சமாதிக்கு தேவையா? 
      ஏற்கனவே காங்கிரஸ் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள இடத்தில் மன்மோகன்சிங்கிற்கு இடம் கொடுக்கலாமே?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-12-2024.


No comments:

Post a Comment

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |  #Srilanka, #IndianOcean, # #AnuraKumaraDissanayake, #china, #Tam...