Monday, September 1, 2025

16 august

 சென்னை மாநகரின் மேயராக இருக்கும் அரைகுறையான விவரம் தெரியாத பெண்மணி சுதந்திர தின விழாவை எப்படி முறையுடன் அதற்குரிய ஒழுங்குடன் கொண்டாட என்பதை அறியாமல் தன் கைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டே அந்த தேசிய நிகழ்வில் பங்கெடுத்துள்ளார். இப்படியான அரைகுறைகளைத்தான் ஸ்டாலின் விரும்புகிறார். கட்சிக்கு உழைத்தவர்கள் அதற்கு பாடுபட்டவர்கள் அதன் மதிப்பு அறிந்தவர்களுக்கெல்லாம் ஸ்டாலினிடம் இடமில்லை. அவர் குடும்பத்திற்கு யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இப்படியான மதிப்புமிக்க பதவிகள் போய்ச் சேர்ந்து விடுகின்றன. இப்படித் தெளிவற்ற அனுபவமில்லாத ஆட்கள் தான் நமக்கு நல்லது என்று ஸ்டாலின் நினைப்பார். சந்தர்ப்பவாதத்துக்காக அதிமுகவில் இருந்து வந்தவர்கள் பிறகு புதிதாக எங்கேயாவது கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒருசில ஆட்களைத் தேடிக் கொண்டு வந்து முன்னிறுத்துவது. அதன் அடிப்படையில் கட்சிக்காக நீண்ட நாள் உழைத்தவர்களையெல்லாம் வெளியேற்றுவது! இதுதான் அவரது வாடிக்கை!. இப்படி எல்லாம் நடந்து கொள்ளும்படி ஸ்டாலினுக்கு யார் அறிவுரை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. சரி அவருக்குத் தான் தெரியவில்லை! இப்படியான குடும்ப அதிகார மையங்களை வைத்துக்கொண்டு நாட்டில் எப்படி செம்மையான ஜனநாயகத்தின் ஆட்சியை அவர் தர முடியும். ஸ்டாலினுக்கு ஆலோசகராக இருப்பது யாரோ? விளங்காத மனிதர்கள்….

எல்லாம் காலத்தின் கோலம் தான்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்