கலைஞர் வரை இருந்த உண்மையான திமுகவில் அவரோடு நெருங்கியிருந்தவர்களில் துரைமுருகன் தொட்டு என் உட்பட அப்போது இருந்தவர்களைக் கட்சிக்காரர்கள் மிக மரியாதையுடன் மதிப்பார்கள். இப்போது அந்த மரியாதையும் இல்லை. இவர்கள் யாரையும் மதிப்பதும் இல்லை. டி ஆர் பாலு வரை கூட அந்த மரியாதை இல்லை.
ஸ்டாலின் மகன் ஸ்டாலின் மருமகன் யாரோ ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி என்று ஒரு பெயரில் இருக்கிறாராம் போக ஸ்டாலினின் துணைவியார் இவர்கள் மட்டும் போதும் என்கிற அளவில் திமுக வின் பரந்துபட்ட ஆளுமை கவுரவம் மற்றும் செல்வாக்கு யாவும் குறுகிப் போய்விட்டது என்று நீண்ட காலம் திமுகவில் இருக்கும் முக்கிய நண்பர் சொல்கிறார்.
இதையெல்லாம் விட இன்றைக்கு அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான் திமுகவில் அதிகம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் இது திமுகவின் பழைய ஸ்திரத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று வருத்தப்பட்டார். ஏனெனில் மிக மோசமான சந்தர்ப்பவாதிகளும் திமுகவின் வரலாறு தெரியாத புதிய நபர்களும் திமுகவிற்குள் வந்து அதை கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகவும் அவர் ஆழ்ந்த யோசனையுடன் பேசி முடித்தார். என்ன சொல்ல?
No comments:
Post a Comment