Monday, September 8, 2025

29 August

 நண்பர் ஒருவரைச் சந்திக்க இன்று காலை 8:15க்குக் கிளம்பிச் சென்றேன். ஈசிஆரில் ஒரே டிராபிக் நெரிசல்!. என்ன என்று பார்த்தால் விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு பக்கமும் திமுக கொடிகளளை நட்டுக் கொண்டிருந்தார்கள். என்றும் இல்லாத வகையில் திடீரென்று திமுக காரர்கள் வந்து இடைஞ்சல் செய்துகொண்டு கருப்பு சிவப்புக் கொடிகளை நடுகிறேன் என்று வேன்களைக் கொண்டு வந்து நிறுத்தி நெரிசலை உண்டாக்கி கொண்டிருந்தார்கள். பெரும் அவஸ்தையாக இருந்தது. பிள்ளையார் சிலைகளை உடைக்க வேண்டும் பிள்ளையார் சிலைகளுக்குச் சக்தி இல்லை திருமணங்கள் புகை மண்டலத்திலா நடக்கிறது என்றெல்லாம் கேலி பேசியவர்கள் இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி அன்று இந்த அக்கிரம வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் திமுகவிற்கும் கணேச பண்டிகைக்கும் என்ன தொடர்பு? அவர்களது கட்சிக் கூட்டம் போல விளம்பரங்கள் தட்டிகள் பேனர்களை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தத் திமுக காரர்கள் எதிலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இயங்குகிறார்களே தவிர கொள்கை அடிப்படையில் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தெளிவில்லாத அந்த ரெண்டு கெட்டான் கொள்கைதான் இவர்களின் சூழ்ச்சி.

மக்களிடம் எந்த மரியாதையும் இல்லை. பெரியாரைத் தந்தை என்று சொல்கிறவர்கள் அவரை என்ன விதமாகத் திட்டி திட்டி தீர்த்தார்கள் என்பதெல்லாம் எழுத்தாக இருக்கிறது பெரியாரும் இவர்களை கடுமையாக விமர்சித்துத் திட்டியவை கூட ஆவணங்களாக இருக்கின்றன. அன்றைய காங்கிரஸ்காரர்களும் ஜன சங்க காரர்களும் கூடப் பெரியாரை இவ்வளவு திட்டியதில்லை. மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது என்ன உங்கள் கட்சிக் கூட்டமா வந்து கொடிகளை நட்டு கொண்டு இருக்கிறீர்கள்?.நான் யாரையும் காழ்ப் புணர்ச்சியுடன் குறை சொல்லவில்லை! நியாயத்தின் பக்கம் நின்று பேசுகிறேன். இப்படி எல்லாம் வந்து இடைஞ்சல் செய்து கொண்டிருப்பது மக்களிடையே அதிருப்தியைத்தான் உண்டாக்கும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்