Saturday, June 3, 2017

கலைஞர்

தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் சட்டசபை வரலாற்றில்  வைரவிழா குறித்து எனது  கட்டுரை  இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது 
...............................................................
தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாள். சட்டசபை வரலாற்றில் அறுபது ஆண்டுகள் நிறைவுற்று வைரவிழா.
 
தாய், அண்ணன், தலைவர், முன்னோடி என நிலையில் பொருத்திப் பார்த்தாலும் பொருந்துகின்றார். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சம்பவங்கள் நெஞ்சினில் நிழலாடுகின்றன. சமூகநீதி பார்வையில் உலகின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள். அவரது நடவடிக்கைகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. கலைஞர் என்ற தனிநபரின் வரலாற்றை வாசிக்க முயன்றால் அது தமிழக அரசியல் வரலாற்றை தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்திய அரசியலின் பெரும்பகுதியை உள்ளடக்கியது தான் தலைவர் கலைஞரின் வரலாறு. 

நான் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட  கலைஞர் அவர்கள் தி.மு.க. மாநில கட்சியாக இல்லாமல் தேசிய இயக்கமாக நிலைக்கும் என்றும், இந்திய நாட்டினுடைய அரசியல் ஜாதகத்தை கணிக்கக் கூடிய இடத்தில் கழகம் இடம் பெறும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார். இந்த அறிவிப்பு  மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் பெரும் பேறாகவும் உள்ளது. மறுமலர்ச்சி என்று மாயாஜால வித்தையை காட்டிக் கொண்டிருந்த ஒரு பொய் தளத்திலிருந்து உண்மையான மறுமலர்ச்சியை அன்றுதான் பெற்றோம். இந்த எளியவனையும் ஒரு பொருட்டாக கருதி தலைவர் கலைஞர் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு கோடி வணக்கங்களை தலைவரின் பொற்பாதங்களில் வைக்கின்றேன்.

கலைஞர் தி.மு.கழகம் தேசிய இயக்கமாக நிலைக்கும் என்றும் இந்தியாவின் அரசியல் ஜாதகத்தை இந்த இயக்கம் கணிக்கும் என்று தலைவர் கலைஞர் அறிவிப்பு செய்ததை பல பத்திரிகையாளர்களும் நண்பர்களும் என்னிடம் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டனர். அந்த நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வது எல்லாம், இதற்கு முன்னும் பேரறிஞர் அண்ணாவோ, தலைவர் கலைஞரோ அகில இந்திய அளவில் பிரச்னைகள் ஏற்பட்டபொழுது முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளனர். சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்தபொழுது அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை தளர்த்தினார். அண்ணாவின் கொள்கைகளை அண்ணாவிற்கு பிறகு கழகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தலைமையேற்று பீடுநடைப் போட்டு நடத்துகின்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய பார்வையும் அகில இந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் மற்றும் அகில இந்திய தலைவர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. இதற்கு பல நிகழ்வுகளும், சம்பவங்களும் உண்டு. காங்கிரஸ் பிளவுண்டு இந்திரா தலைமையில் ஆளும் காங்கிரஸ் என்றும், நிஜலிங்கப்பா தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் 60களின் இறுதியில் ஏற்பட்ட பொழுது இந்திரா காந்தி அவர்களுடைய ஆட்சியை காக்க தலைவர் கலைஞர் அவர்கள் ஆதரவு கரம் நீட்டி ஆதரவை தெரிவித்ததனால்தான் அன்றைக்கு மன்னர் மான்ய ஒழிப்பு, பொதுவுடைமை தத்துவத்திற்கு ஏற்ற வகையில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு கலைஞர் அவர்களின் ஆதரவே காரணம். அவை அன்றைய பிரதமர் இந்திராவின் ஆளுமைக்கு வலு சேர்க்கும் வகையில் அச்சாரம் போட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நடந்த பெரும்பாலான நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.கழகம் தோழமை கொண்டுள்ள கட்சிகள்தான் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்திரா காந்தி காலத்திலும், ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமரான போதும், அதன்பின் 80ல் இந்திரா மீண்டும் பிரதமரான போதும், 90ல் வி.பி.சிங் பொறுப்பேற்ற போதும், தேவகவுடா, குஜ்ரால் ஆட்சி காலத்திலும், 99இல் வாஜ்பாய் பிரதமரானபோதும், 2004ல் தொடங்கி இன்றைக்கு வரை மன்மோகன் சிங் பிரதமராக நீடிப்பதற்கு கலைஞர் அவர்களின் பங்களிப்பும் தோழமையும் இதில் பிரதானமாகும். இதுமாதிரி மற்ற அகில இந்திய தலைவர்களின் பங்களிப்பு இல்லை, நாட்டில் நிலையான ஆட்சி அமைத்திட வேண்டிய முன்முயற்சிக்கு கலைஞருடைய அணுகுமுறையே காரணமாகும்.

மற்றொரு முக்கிய நிகழ்வு; டில்லியில் பத்திரிகையாளர்களிடம் 1969 மார்ச் 17ம் நாள், மத்திய – மாநில அரசுகள் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்பால் அகில இந்திய அளவில் ஒரு ஆரோக்கியமான விவாதம் நீண்டகாலமாக நடந்தது. இந்த அதிகாரப் பகிர்வு வெறும் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் இதுபற்றி ஆராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் டாக்டர் ஏ.லட்சுமண சாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய – மாநில உறவுகளும் அதனிடையே அதிகார பகிர்வு குறித்து ஆராய்ந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இதுகுறித்து கருத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடம் கேட்கப்பட்டு ஒரு அற்புதமான அறிக்கையை 27.5.1977இல் தலைவர் கலைஞரிடம் அந்த குழுவினர் வழங்கினர். 383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும். மத்திய – மாநில பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மகாசாசனமாக  உள்ளது. இந்த ஆவணத்தை அகில இந்திய அளவில் அனைவரும் விரும்பி படித்து அதுகுறித்தான விவாதங்களும் நடந்தன. அதற்கு பின் இந்திரா அம்மையார் பிரதமராக இருந்தபொழுது 1984வாக்கில் நீதிபதி சர்க்காரியா தலைமையில் மத்திய – மாநில உறவுகளை ஆராய குழு அமைக்கப்பட்டு அதற்கு அடிப்படை காரணமே கலைஞர் அவர்கள் அறிவித்த ராஜமன்னார் குழுவே ஆகும். சர்க்காரியா குழுவும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும் ஆய்ந்து இரண்டு தொகுதிகள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் ஈழத் தமிழர் பிரச்சனையில் 80களில் திம்பு பேச்சுவார்த்தைக்கும் இந்த ராஜமன்னார் குழு அறிக்கை அடிப்படை ஆவணமாகத் திகழ்ந்தது. அன்றைக்கு இந்த அறிக்கையின் நகல் கிடைக்காமல், அமிர்தலிங்கத்திற்கும் பாலசிங்கத்துக்கும் இந்த அறிக்கையை நகல் எடுத்து அடியேன் கொடுத்தேன்.

இந்த அறிக்கையும் திம்பு பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதோடு நார்வே பேச்சுவார்த்தையிலும் ஒரு ஆவணமாக இருந்தது என்ற செய்திகள் வந்தது. இப்படிப்பட்ட அறிய பணிக்கு கர்த்தா தலைவர் கலைஞர் அவர்களே. அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த அறிக்கை 80களில் மறைக்கப்பட்டது. சட்டப்பேரவை நூலகத்தில்கூட இந்த அறிக்கை கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் கலைஞர் அவர்களின் ராஜமன்னார் குழு அறிக்கை இந்திய அரசியல் வரலாற்றில் அழியா சிரஞ்ஜீவியாக இருக்கும். இதுமட்டும் இல்லாமல் அனைவரின் நினைவில் வாழும் அண்ணன் முரசொலி மாறனின் ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற நூல் இந்த தத்துவத்திற்கே வேதமாகும்.

மாநில உரிமைகளை வென்றெடுப்பதில் அக்கறையும் ஆவலும் கலைஞருக்கு இருந்தாலும் இந்தியாவின் ஒன்றுபட்ட ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்ற நோக்கமே இந்த அறிவிப்பாகும். ராஜ மன்னார் குழுவின் அறிக்கை வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு என்.டி.ராமாராவ் ஐதாராபாத்தில் மாநில உரிமைகள் குறித்து நடத்திய மாநாடும், அம்மமாதிரியே அசாம் கன பரிஷத் ஷில்லாங்கில் நடத்திய மாநாடும், அதற்குப் பிறகு ஸ்ரீநகரில் பரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டில் மத்திய அரசிடம் வெளியுறவு, பாதுகாப்பு, தொலைதொடர்பு, நிதி போன்ற துறைகள் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அரசும் ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையை அனுப்பியது. பெங்களூருவில் அன்றைய கர்நாடக முதல்வர் இராமகிருஷ்ண ஹெக்டே தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை இதுகுறித்து பேச கூட்டினார். இந்த நிகழ்வுகள் யாவும் தலைவர் கலைஞருடைய தொலைநோக்கு பார்வையில் ஏற்பட்ட பின் விளைவுகளாகும்.

மாநில சுயாட்சி என்பது விடுதலைக்கு முன்பே விவாதிக்கப்பட்ட பிரச்சனையாகும். 1916ல் மதன்மோகன் மாளவியா, சாப்ரூ, ஜின்னா போன்றோர் அடங்கிய 19 பேர் கொண்ட குழு அறிக்கை லக்னோவில் வெளியிடப்பட்டது. அதில் மாநில எல்லைக்குள் முழு சுயாட்சி வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுவே ‘லக்னோ ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. 3.4.1946ஆம் ஆண்டு அப்துல் கலாம் ஆசாத் போக்குவரத்து, வெளியுறவு, பாதுகாப்பு போன்ற துறைகள் மத்திய அரசிடம் வைத்துக் கொண்டு மற்ற துறைகளை மாநிலங்களுக்கு வழங்கி தன்னாட்சியாக தரவேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். 11.12.1944ல் காங்கிரஸ் கட்சி அறிக்கையிலும் மாநிலங்களின் தன்னாட்சி என்று அறிவிப்பு செய்தது. அதற்கு பிறகு இதுகுறித்து பல காலம் விவாதிக்காமல் இருந்து, அறிஞர் அண்ணா 1967ல் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தினார். இந்த அரிய தொடர் பணியை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பலம் சேர்க்கவே இக்கோரிக்கை ஆகும். இதில் வெற்றியும் பெற்று வருகிறார்.
ஆகஸ்டு 15, இந்திய விடுதலை நாளில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமை, ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது தேவகவுடா காலத்தில் மாநிலங்களிலிருந்து பெறுகின்ற வரிகளில் பங்கு சதவிகிதத்தை கூடுதலாகப் பெற்றது கலைஞருடைய சாதனை ஆகும். சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கொடி பரிவாரங்கள் இருந்தாலும் ஒருமைப்பாடு திகழ்கிறது. உலக நாடுகளில் பலவற்றிலும் அங்குள்ள மாநிலங்களுடைய உரிமைகள் சிறப்பாக கவனிக்கப்பட்டுள்ளன. அந்த உலக நாடுகளில் அரசியல் சட்டங்களின் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலமும் தன்னிறைவு அடைய வேண்டும். அப்படி அடைந்தால் ஒரு வளமான உறுதியான இந்தியாவாக அமையும். அதற்கு தலைவர் கலைஞர் அவர்களும், கழகமும் வழி காட்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் உள்ளது.
இந்திய – பாகிஸ்தான் போரிலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக தலைவர் கலைஞர் அவர்கள் போர் நிதி திரட்டி கொடுத்தது வரலாற்று செய்தியாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுதும் கார்கில் போரின் போதும் கலைஞர் அவர்கள் நிதி திரட்டி அனுப்பியதை அன்றைய பிரதமர் வாஜ்பாய் பாராட்டினார். இவ்வாறு பல நிகழ்வுகள் பல சம்பவங்கள். அதுவே நீண்ட கட்டுரை ஆகிவிடும். இன்றைக்கு இந்தியாவில் கலைஞருடைய வயதையொத்த மூத்தத் தலைவர் வாஜ்பாய்  உள்ளார். இந்திய வரலாற்றில் கலைஞர் போன்று இந்திரா காந்தியிலிருந்து இன்றைக்கு இருக்கின்ற டாக்டம் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் ஆனாலும் சரி, குடியரசுத் தலைவர்கள் ஆனாலும் கடந்த 40 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் தவிர வேறு எவரும் இல்லை. அந்த அளவில் தலைவர் கலைஞர் அறிவித்த கழகம் மாநில கட்சியாக இல்லாமல் தேசிய இயக்கமாக அமைவது காலத்தின் கட்டாயமும், அரசியல் சூழ்நிலையும் ஆகும்.

தேசிய பார்வையோடு தமிழகத்தின் நலனையும் உரிமைகளையும் பெற தலைவர் கலைஞர் அவர்கள் சிந்தனை, மாபெரும் அரசியல் தத்துவமே. குளோபல் வில்லேஜ் என்று சொல்லக்கூடிய அளவில் உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது. தாராளமயமாக்கல், புதிய பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் தலைவர் கலைஞர் அறிவித்த அறிவிப்பு ஒரு முக்கியத்துவம் பெற்ற செய்தியாகும். அந்த அளவில் மாநிலங்களுக்குள் ஒரு சகோதர பாசத்தோடு பிரச்சனைகளை தீர்ப்பது இன்றியமையாதது. அந்த அளவில் கலைஞர் அவர்களின் சமயோசிதத்தால் 19 ஆண்டுகள் பெங்களூரூவில் திறக்க முடியாத ஐயன் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அதுபோன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்டது. இதுவே தலைவர் கலைஞர் அவர்களுடைய ராஜதந்திரத்திற்கும் பெருந்தன்மைக்கும் சான்று ஆகும்.

தலைவர் கலைஞர் விரும்பியபடி எதிர்காலத்திலும் இந்திய அரசியலில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் உலகத்திற்கு வழிகாட்டும் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா அமையும். இதற்காகவாவது அவர் நல்ல ஆரோக்கியம்  பெற்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்திய மதவாத அரசியல் ஆரோக்கியம் அடைய கலைஞர் கையாண்ட  வழியே  கரை சேர வழி. 

#HBDKalaignar94
#தலைவர்கலைஞர்94
#வைரவிழா 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்
03-06-2017
 
மலரும் நினைவுகள் Kalaignar

Kalignar 94

Normal leader artist their mullaic smile..... he may you live many 100 years. Periyar principles the command loaded for, personally i worship around our south ficus's grizzled liputtūriṉ proud periyalvar pācuram;

Many more years of the lāyi quarter
A Multi-hundred,
Mallāṇṭa tiṇtōḷ hours color! Your
The Kkāppu Cevvaṭi Chevy,
The yōmōṭum niṉṉōṭum without the
Thousand years,
Whether the filter ninh mārpiṉil and live
Maiden, and many more
& check the valattu freezing flame
Āḻi, and many more
In the creation of the varachol varachol up pāñca
Caṉṉiyamum Lāṇṭē University.

#HBDKalaignar94
#தலைவர்கலைஞர்94
#வைரவிழா 
#KSRadhakrishnanpostings
#KSRpostings
K s. Radhakrishnan
03-06-2017

கலைஞர் - 94.

இயல்பான தலைவர் கலைஞர் அவர்களுடைய முல்லைச் சிரிப்போடு.....அவர் வாழட்டும் பல 100 ஆண்டுகள். பெரியாரின் கொள்கைளை நெஞ்சில் ஏற்றிய தலைவருக்கு, தனிப்பட்ட முறையில் நான் வணங்கி அளிக்கின்ற எங்கள் தெற்கு சீமையின் ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குரிய பெரியாழ்வார் பாசுரம்; 
 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்;
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு;
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு;
வடிவாய் நின் வல மார்பினில் வாழகின்ற
மங்கையும் பல்லாண்டு;
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு;
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.

(போட்டோ எடுத்த வருடம் 1982.)

Friday, June 2, 2017

பட்டுப் பாதை!சீனப்பாதை!!

இந்தியாவை அச்சுறுத்தும் இந்தியாவை அச்சுறுத்தும் பட்டுப் பாதை!சீனப்பாதை!!
-------------------------------------
புதிய பட்டுப் பாதையாக கருதப்படும் இந்த பாதையை வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. (CPEC – China Pakistan Economic Corridor) சிபிஇசி சீனாவின் காசர் (காசி) நகரையும் பாகிஸ்தானின் குவாடர் நகரையும் சாலை, குழாய்கள், இருப்புப் பாதை வழியே இணைக்கும் திட்டமாகும். இப்பொருளாதார பாதை பாகிஸ்தானின் உள் கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமான பொருளாதார உறவை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. புதிய பட்டுப் பாதையின் ஒரு பிரிவாக இதை சீனா கட்டமைக்கிறது. சீனா இத்திட்டத்துக்கு அளிக்கும் சிறப்பை அதன் 13வது ஐந்தாண்டு திட்டத்தில் சிபிஇசிக்கு பணம் ஒதுக்கியதிலிருந்து அறியலாம்.
ஒரே ஒரு பாதையை உருவாக்குவாதாலேயே ஒரு தேசம் உலகின் வல்லரசு ஆகிவிட சீனா நம்புகிறது. அதற்கான பலப்பரீட்சைகளை கடந்து பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, தான் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உலகின் பலப் பஞ்சாயத்துகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்தும் அது வெளியேறுகிறது. 
இந்தச் சூழலில், நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு, பொருளாதார உதவி தேவைப்படும் அரசுகளுக்கு ஒரு ‘உலகத் தலைவன்’ தேவைப்படுகிறான். ‘நான்தான் அந்தத் தலைவன்’ எனச் சொல்லாமல் சொல்கிறது சீனா. இதனால் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கிறது இந்தியா. 
இத்திட்டத்திற்குள் உள்ளடங்கும் நாடுகளுக்கு சீன வங்கிகள் கடனாக நிதியை வழங்குவதற்கான உந்துதலை அளிப்பதென்பதுவும் சீனாவின் கோட்பாடாகும். பட்டுப் பாதைத் திட்டத்தில் சீனாவின் பங்காளி நாடுகளுக்கு ஏற்கனவே நிதி வழங்கப்படும் என சீனாவால் உறுதியளிக்கப்பட்டது. இந்தவகையில், இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்காக 1.4 பில்லியன் டாலர்களும், மத்திய ஆசியாவின் கட்டுமான மற்றும் சக்தி அபிவிருத்திக்காக 50 பில்லியன் டாலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு பொது உதவியாக 327 மில்லியன் டாலர்களும் வழங்குவதாக சீன அறிவித்திருந்தது.
இதுதவிர, சீனாவின் புதிய ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கியானது ஆசிய நாடுகளின் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக மேலும் நிதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பட்டுப் பாதைத் திட்டமானது முழுமையாக நிறைவடையும் போது 21.1 றில்லியன் டாலர்கள் செலவாகும் என ‘வோன்ற் சீன ரைம்ஸ்’ கணிக்கிறது.
அண்டை நாடுகளால் பிரச்னைகளைச் சந்தித்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முன்வரிசையில் இடம் உண்டு. அந்த அளவுக்குப் பாகிஸ்தானும், சீனாவும் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்குக் குடைச்சல் கொடுத்து வருகின்றன. காஷ்மீர் பிரச்னையை வைத்து இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளைத் தூண்டி விட்டுத் தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தானை ஒருபக்கம் ஆதரித்தபடி, காஷ்மீரின் கிழக்குப் பகுதியிலும், அருணாசலப் பிரதேச மாநிலத்திலும் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகிறது சீனா.

உலகின் எந்த மூலைக்குப் போனாலும், எந்த வணிக வளாகத்துக்குப் போனாலும், அது சீனாவில் தயாரான பொருட்களால் நிரம்பி வழியும். 
ஆனாலும், சீனாவுக்கு இது போதவில்லை. சுமார் 57 பில்லியன் டாலர்கள் மதிப்பில் டாலர்களாகத் மதிப்பிடப்பட்டு,  தற்போது சீனா  அதனை அதிகரித்துக் கொண்டே வருகிறது, இந்த நிலையில் பாகிஸ்தானுடன் இணைந்து சீன - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC - China-Pakistan economic corridor) என்ற திட்டத்தை மேற்கொண்டு வருகிறது சீனா. இதைத் தொடர்ந்து, ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் சீனா உருவாக்கி இருப்பது, One Belt-One Road (OBOR) எனப்படும் ‘ஒரு சூழல் - ஒரு பாதை’ என்ற திட்டம். 
பண்டைக்காலத்தில் ‘பட்டுப்பாதை’ என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதை ஒன்று இருந்தது. அதை மீண்டும் உருவாக்குவதுதான், ‘புதிய பட்டுப் பாதை’ (New Silk road) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது இந்தத் திட்டம்.
இது தொடர்பான மாநாட்டை, பெய்ஜிங்கில் மே 14, 15 தேதிகளில் சீனா நடத்தியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதுதவிர அமெரிக்கா உள்பட 130-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டைத் தவிர்த்த முக்கியமான நாடு, இந்தியா. சீனாவை இது முள் மாதிரி உறுத்தக்கூடும். ஆனால், நமக்கு தவிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.  
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாதை செல்வது பிரச்னைக்குரிய வழியில்! பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நம் காஷ்மீரில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் வழியாக இந்தப் பாதை செல்கிறது. நமக்குச் சொந்தமான ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருக்க, அந்த நாட்டோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அங்கு சீனா சாலை அமைக்கிறது. இதில் எப்படி இந்தியா பங்கேற்க முடியும்?
ஆனால், எப்படியாவது இந்தியாவைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. ஆனாலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்டது. இந்தத் திட்டத்தால் உலகளாவிய அளவில் சீனாவின் பொருளாதார, வணிக ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதால் ஏற்கெனவே அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் அந்நாட்டின் மீது அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பும் புறக்கணிப்பும், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 
இதை, சீன மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலேயே வெளிப்படுத்தினர்.  
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய சீன அதிபர்   ஷி ஜின் பிங், “இது இந்த நூற்றாண்டின் முக்கியமான திட்டம். இது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயனளிக்கும்’என்றார். ஆனால், இந்தத் திட்டத்தினால் நிறையப் பயனடைய போவது சீனாதான் என்றும், இந்தத் திட்டத்தின் பங்காளியான பாகிஸ்தானே, சீனாவின் காலனி நாடாகி விடும் என்றும், அதன் விவசாய நிலங்கள், வேளாண் உற்பத்தி, அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் சீனாவின் நேரடி கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக்குள் வந்துவிடும் என்றும் பாகிஸ்தான் ஊடகங்களே அபாயச் சங்கை ஒலிக்க ஆரம்பித்துள்ளன. 
சீனா ஆரம்பத்தில் தனது பட்டுப் பாதைத் திட்டத்தில் குறிப்பிடாத சில இடங்களை கடந்த ஆறு மாத காலத்தில் இணைத்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்ள்ளது. அதாவது மாஸ்கோ, ரஸ்யா: டுசன்பே, ரஜிகிஸ்ரான்: ஜகார்த்தா, இந்தோனேசியா: கொழும்பு, இலங்கை போன்றனவே சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் இடங்களாகும். இன்னொருபுறம் சீனா தற்போதும் தனது முக்கிய பங்காளி நாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அண்மையில் ஆப்கான் அதிபர் அஸ்ராப் கானி சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டமையும் பட்டுப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பட்டுப் பாதைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பெரும்பாலான பிராந்திய நாடுகள் தமது மக்களின் முன்னேற்றத்திற்காக சீனாவின் நிதியுதவியைப் பெறுவதில் ஆர்வங் காட்டுகின்றன. ‘ஒரு நாடு செல்வந்த நாடாக மாறுவதற்கு முன்னர் அதன் வீதிகள் சிறப்புற செப்பனிடப்பட்டிருக்க வேண்டும்’ என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ அண்மையில் ஊடக மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் திட்டத்தால், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. “சீனாவும் பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்துள்ளதால், இந்தியாவுக்கு அரசியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படக்கூடும். 
சீன ராணுவத்துக்கு, பாகிஸ்தான் ஒரு வாடகை வீடாகச் செயல்படக் கூடிய அளவுக்கு அதிகார நிலைகள் மாறிவிடும். நமக்குச் சொந்தமான கில்கிட்-பலுசிஸ்தான் மீதான சீன - பாகிஸ்தானிய தலையீடுகள், இந்தியாவுக்குச் சவால் விடும் நகர்வாகவே இருப்பதாக  இந்திய பாதுகாப்பு வியூக ஆலோசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  
இந்தியா உரிமை கொண்டாடும் கில்கிட் - பல்டிஸ்தான் பகுதி, இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்னும் பிரச்னைக்குரிய பகுதியாகவே உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 18,000 முதல் 21,000 அடி உயரத்தில் இருக்கும் சியாச்சின் சிகரத்தையொட்டிதான் சீனா - பாகிஸ்தானை இணைக்கும் காரகோரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கான பாதுகாப்புக்கு என தன் படைகளை சீனா அங்கு நிறுத்தியுள்ளது. 
ஏற்கெனவே, சியாச்சின் சிகரத்தைக் குறிவைத்துதான், 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவியது பாகிஸ்தான் ராணுவம். இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்திய நிலப்பகுதியில், இந்த வழித்தடத்தை வரம்புமீறி அமைப்பது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.
 
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் பலரும் ஏற்கெனவே காஷ்மீர் பிரச்னையில் சீனாவின் பங்கு குறித்துப் பேசிவரும் சூழலில், கில்கிட் - பலுசிஸ்தான் பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் என்பது, ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பில் மிகத்தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சீனாவோ, ‘‘இந்தியாவின் கவலைகள் தீர்க்கப்படும். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நட்பு மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய உறவுகளை வைத்துக் கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். காஷ்மீர் மீதான சீனாவின் நிலையில் பட்டுப் பாதைத் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்கிறது. 
சீனாவின் வாக்குறுதியை எந்த அளவுக்கு நம்பலாம் என்பதற்கு, அதன் கடந்தகால செயல்பாடுகளே சாட்சி. 
சீனாவைப் பொறுத்தளவில் புதிய பட்டுப் பாதை மற்றும் கடல் சார் பட்டுப்பாதை போன்றன சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும், தனது மென்மையான பக்கத்தைக் காண்பிப்பதற்குமான வாய்ப்பாகவே காணப்படுகின்றன. சீனா பெருந்தொகையான நிதியை பிராந்திய நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் அந்த நாடுகள் சீனா தமக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை மென்போக்கையே கடைப்பிடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதன் மூலம் சீனாவானது மென்போக்காக நடக்கும் அதே வேளையில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கையும் அதிகரிப்பதற்கு ஏதுவான நிலைகள் தோன்றுகின்றன.
சீனாவின் பொருளாதார வலு தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. சீனாவானது தனக்கான நல்வாய்ப்பாகக் காணப்படும் தனது நிதிவளத்தைப் பயன்படுத்தி வெளியுறவுச் செல்வாக்கை வலுப்படுத்துதை தனது நல்வாய்ப்பாகக் கருதுவது இயற்கையானதாகும். 
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவால் அமுல்படுத்தப்பட்ட மார்சல் திட்டத்துடன் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை சிலர் ஒப்பீடு செய்கின்றனர். இவ்விரு வாய்ப்புக்களின் போதும், அதிகரித்து வரும் பிராந்திய அதிகார சக்தியானது தனது பொருளாதாரப் பலத்தைப் பயன்படுத்தி தனது வெளியுறவு இலக்குகளை அடைய விரும்புகின்றன. 
தனது நாட்டின் பொருளாதாரத்தையும் இதன் வாயிலாக வலுப்படுத்துவதே இதன் அடிப்படை நோக்காகும். அமெரிக்காவின் மார்சல் திட்டமானது அனைத்துலக அரங்கில் அமெரிக்கா ஒரு வல்லரசாகத் திகழ்வதற்கு உதவியது. இதே போன்று சீனாவும் தனது இரண்டு பட்டுப் பாதைத் திட்டங்களின் மூலம் அனைத்துலக வல்லாதிக்க சக்தியாக வருவதற்கான சவாலை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தப் பொருளாதார வழித்தடத்  திட்டத்தினால் பாகிஸ்தான், சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிப்பது ஏன் என்பது குறித்த விவரங்களும், பட்டுப் பாதைத் திட்டம் எப்படிச் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமே பட்டுப் பாதை அமைக்கும் என்பது குறித்த விவரங்களும்.

பாகிஸ்தானுக்கு சீனா தரும் இலவசம்!
சாலைகள், ரயில் பாதை மற்றும் கடல் வழிகள் ஊடாக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடன் சீனாவின் முக்கிய நிலப்பகுதிகளை இணைக்கும் நோக்கத்தில்தான், சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மனிதர்களும் பொருட்களும் எளிதில் பயணிப்பதே நோக்கம். சுமார் 3,000 கி.மீ. தூரத்துக்கான ரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக இந்தப்பகுதிகள் இணைக்கப்படும். கூடவே, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படும். 

சீனா, இந்தத் திட்டத்துக்காக இதுவரை இல்லாத வகையில், சுமார் 57 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இந்தப் பொருளாதாரப் பாதை திட்டத்துக்காகப் பாகிஸ்தானில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர உதவிகளை சீனா இலவசமாகவோ நீண்டகாலக் கடன் என்ற அடிப்படையிலோ செய்து கொடுக்கும்.

William Shakespeare

Love me or hate me,
Both are in my favor...
If you love me,
I'll always be in your heart .
If you hate me,
I'll always be in your mind...
 
~William Shakespeare

Thursday, June 1, 2017

Athens-Greek...

The Caryatids, erechtheion, Acropolis of Athens-Greek...
-------------------------------------
After gloriously won the conflict, the Greeks took the mutual decision to war against the people of caria. Conquered the rock, killed all the good men. They burned the city and they reduced to slavery, women without make them stop the stoles or other ornaments're matronly.. Wanted that espiassero for all their citizens, oppressed by the shame of a heavy exemplary slavery not only during the celebration of the triumph, but forever... the architects of the time they then in public buildings images of women of caria in the act of Bear heavy loads; posterity their guilt and their punishment.
 
#காவிரி....

  #காவிரி .... #ஆடிப்பெருக்கு நீராடையின்றி நிர்வாணமாய்க் காவிரி தாயின் ரணங்கள் ; மேலாடைத் தருவாளா மேகத்தாய்?