#தமிழகத்தில்_அன்றைய_சோசலிஸ்ட்கள்_PSP_SSP….
———————————————————-
ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெ.பி.கிருபளானி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி என்பார்கள். 1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி, வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த கட்சியின் சின்னம் குடிசை சின்னம்.
அதேபோலவே இந்த கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராம்மனோகர் லோகியா, இந்த கட்சியில் இருந்து பிரிந்து 1955 சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி அதாவது எஸ்எஸ்பி என்ற கட்சியை உருவாக்கினார். அதன் சார்பிலும் தமிழகத்தில் சில உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு சென்றார்கள். அதனுடைய சின்னம் ஆலமரம்.
தமிழகத்தில் பழைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள் என்று பார்த்தால், தமிழகத்தில் சோசலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராகளாக இருந்தவர்கள், தொழிற்சங்கத் தலைவராக இருந்த எ.சுப்பிரமணியம், எம்.சுரேந்திரன், பட்டுக்கோட்டை எ.ஆர்.மாரிமுத்து, பிற்காலத்தில் இவர் காங்கிரசில் இணைந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார், இவர்களெல்லாம் ஜே.பி தலைமையிலான பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல பூதலூர் ஆறுமுகம்சாமி, சட்ட மேலவை உறுப்பினர், என் மீது பாசம் கொண்டவர், அவர் இஸ்கஸ் என்ற அமைப்பில் அவரோடும் என்.டி.சுந்தரவடிவேல், என்.டி.வானமாமலை அவர்களோடு பணியாற்றிய காலங்கள் உண்டு.
அன்பு வேதாச்சலம் பார்வர்ட் பிளாக் கட்சியில் பங்காற்றிய முன்னாள் தமிழக சட்ட மேலவை உறுப்பினர் தலைவர் கலைஞர் அமைத்த முதல்Teso வின் உறுப்பினர் மதுரை அய்யன் அம்பலம், சோலை இருசன், மதுரை ராமர், ஹெச் எம் எஸ் என்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமையா போன்றவர்களெல்லாம் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள்.
அது மட்டுமல்ல, மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேந்திரன், எ.ஆர்.மாரிமுத்து பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து பி வேலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லடத்தில் இருந்து கே.குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சோஷலிஸ்டுகள் அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொடுக்கும்போது,காவேரி பிரச்சனைகளில் சட்ட மன்றத்தில் கடுமையாக வாதிட்டவர் ஈரோடு ஆர்.நல்லசிவன் அவர் மட்டுமல்ல சின்னத்துரை என்ற சட்டமன்ற உறுப்பினரும் இருந்தார். இவர்களெல்லாம் லோகியோவுடைய ஆதரவாளர்களாக சின்னத்துரையும் நல்லசிவமும் எஸ்எஸ்பி கட்சியில் இருந்ததாக எனக்கு நினைவு. பெருந்துறை பாலசுப்ரமணியனும் லோகியோ தலைமையிலான சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்தார். இவர்களைப் பற்றியெல்லாம் பலருக்கும் இன்று நினைவுக்கு வராது. சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த பலர் பிற்காலத்தில் காங்கிரசில் இணைந்து கொண்டார்கள்.
கடந்த 1967ல் அண்ணா ஆட்சி அமைக்கும்போது மாபெரும் கூட்டணி அமைத்தார். ராஜாஜியும் அந்த கூட்டணியில் இருந்தார். ஒரு முறை கழுதை மேல் 7 கட்சி கூட்டணி என்று ஒரு கார்ட்டூன் வந்தபொழுது அதில் சோஷலிஸ்டு கழுதைகளெல்லாம் ஏற்றிக் கொண்டுள்ளது என்று சொன்னபோது அதற்கு ராஜாஜி சொன்னார் அந்தக் கழுதை மெதுவாக நகர்ந்து சென்னையிலுள்ள கோட்டையை அடைந்துவிடும், கவலைப்பட ஒன்றுமில்லை என்று வேடிக்கையாகச் சொன்னார்.
அன்றைக்கு பிஎஸ்பி,எஸ்எஸ்பி என்று தமிழகத்தைப் பொறுத்தவரை அழைக்காமல் அண்ணா சோசியலிஸ்ட்கள் என்றே அழைத்தார். 1969ல் கிட்டத்தட்ட ஆறு ஏழு உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். பல பிரச்சினைகளை கையில் எடுத்து சட்டமன்றத்தில் அறிவுப்பூர்வமாக பேசியதெல்லாம் மறுக்கமுடியாது. இன்றைய இளைஞர்களுக்கு சோசலிஸ்ட் கட்சி என்ற ஒன்று இருந்ததா, அது என்ன பகதூர் சோசியலிஸ்ட் கட்சியா என்று வேடிக்கையாக கேட்பதுண்டு. எஸ்எஸ்பி, பிஎஸ்பி ஜேபி நரேந்திரதேவ்வை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதேபோல ராம் மனோகர் லோகியா அமைத்த எஸ்எஸ்பி பற்றியும் தெரியவில்லை. இதுதான் இன்றைய தமிழக அரசியலின் புரிதலின் தன்மை இங்குள்ளவர்களுக்கு. அரசியல் என்பது கடந்தகால வரலாறு, கடந்த கால அரசியலில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் புரிந்து கொண்டால் தானே இன்றைக்கு அரசியலில் என்ன என்று தெரிந்துகொள்ள முடியும். ஏதோ இன்றே பிறந்தோம் இன்று தான் தமிழக அரசியல் தோன்றியது போல, இன்றைக்குள்ள சூழல்தான் என்று பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் எப்படி இருக்க முடியும். பழையன கழிதல் தான், அவசியம் இல்லைதான், ஆனால் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அதன் தொடர்ச்சி தானே இன்றைய அரசியல் என்ற புரிதல் இல்லாமல், பலரும் இருக்கின்றனர்.
சோஷலிஸ்டுகள்1960 மற்றும் 70 களில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றினார்கள். தன்னலமற்று மிகவும் எளிமையாக அவர்கள் அன்று கம்யூனிஸ்டுகள் போல வாழ்ந்தார்கள். அவர்கள் பற்றி இன்றைக்குள்ள பலருக்கும் தெரிதல் இல்லை. அதற்கு தான் இந்த பதிவு. வேதனையாக இருக்கின்றது. எவ்வளவு பெரிய தொழிற்சங்கவாதிகள் இந்த சோசியலிஸ்ட்கள். ஏ.சுப்பிரமணியம், ஹெச்.எம்.எஸ் ராமையா போன்ற சோஷலிஸ்ட் தொழிற்சங்க தலைவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தமிழகத்தில் தொழிற்சங்கங்களை வளர்த்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எஸ்எஸ்பி, பிஎஸ்பி என்ற கட்சிகள் இருந்தது தெரியுமா? தெரியாது. இதுதான் இன்றைக்கு நிலைமை. கச்சத்தீவை கொடுக்கக்கூடாது, தமிழகத்துக்கு உரிமைகள் பெற வேண்டும், மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசிடம் அதிகாரம் குவிந்திருக்கின்றன என்று அவர்களும் தமிழக சட்டமன்றத்தில் பேசியது உண்டு. ஈரோடு ஆர்.நல்லசிவம் அவர்களை பலமுறை சந்தித்தது உண்டு, என்னோடு அன்பு பாராட்டுவார்.
கேரளத்தில் பட்டம் தானுப்பிள்ளை முதல்வராக இவர்களின் ஆட்சியும் அமைந்தது.
லோகியோவின் சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், கடுமையான வாதாடினார்கள். அதேபோல ஜேபி தலைமையில் இருந்த எஸ்எஸ்பி உறுப்பினர்களும் திட்டமிட்டு சட்டமன்றத்தில் பேச வேண்டியதை பேசி அறிவுபூர்வமாக பல கருத்துக்களை சொன்னது இன்றைக்கும் சட்டமன்ற குறிப்புகளில் உள்ளன. இதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோகக்கூடாது என்று வாதாடினார்கள். 356 யை கொண்டு மத்திய அரசு விரும்பியவாறு மாநில அரசுகளை கலக்கக் கூடாது என்று பேசியவர்கள். காட்சிக்கு எளிமையான சட்டமன்ற உறுப்பினராக அன்றைக்கு இருந்தார்கள்.
ஜெயபிரகாஷ் நாராயணன் என்ற ஒருவர் இருந்தார், ஆச்சாரியர் நரேந்திர தேவ் இருந்தார், ஜே.பி.கிருபளானி இருந்தார் ராம் மனோகர் லோகியா அகில இந்தியத் தலைவர் இருந்தார், என்று யாருக்காவது தெரியக் கூடிய வாய்ப்பு இருக்கா? இல்லை. இந்த வரலாறை நாம் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லவில்லை. இது யாருடைய பிழை? இந்தப் பிழைகள் தான் நமக்கு காட்சி பிழைகளாகவும்… இடமாற்று பிழைகளாகவும் அமைந்து, ஒரு புரிதல் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். இன்றைக்கு உள்ள அரசியலை மட்டுமல்ல, கடந்த கால அரசியலை அறிந்து கொண்டால்தான் இன்றைக்குள்ள அரசியலுக்கான புரிதல் வரும். கடந்தகால அரசியல் வரலாறு நமக்கு எதற்கென்றால் நீங்கள் அரசியலுக்கு லாக்கியற்வர்கள் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தைரியமாக சொல்வேன். அரசியலில் வருவோர்க்கெல்லாம் வரலாறு தெரியவேண்டும், பொருளாதாரம் தெரியவேண்டும், உலக நாட்டு அரசியல் தெரிய வேண்டும், உலக நாட்டு உறவுகள் தெரிய வேண்டும், அகில இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். இந்த புரிதல் இல்லாமல் அரசியல் வந்து என்ன செய்யப் போகிறீர்கள். எஸ்எஸ்பி, பிஎஸ்பி யின் கொள்கைகளை படியுங்கள். அருமையான கொள்கைகள். திராவிட இயக்கத்திற்கு எப்படி கொள்கைகளை அண்ணா, வகுத்தாரோ, அதேபோல சரிசமமாக அரசியலுக்கு ஏற்றவாறு, நேர்மையோடும் மக்களுக்கு ஏற்றவாறு, மக்கள் நல அரசியல் என்று கட்சியை வளர்த்தார்கள்.
பிஎஸ்பி கட்சித் தலைவர்கள் ஹிந்தி ஆதரவாளர்களாக இல்லை. லோகியா நல்ல மனிதர் ஆனால் இந்தி பற்றாளராக இருந்தார் என்பது எதிர்வினை. அதைச் சொல்லித்தான் ஆகவேண்டும் தமிழகத்தை பொறுத்தவரை.
The Praja Socialist Party, abbreviated as PSP, was was founded when the Socialist Party, led by Jayaprakash Narayan,Rambriksh Benipuri, Acharya Narendra Deva and Basawon Singh (Sinha), merged with the Kisan Mazdoor Praja Party led by J. B. Kripalani (former president of the Indian National Congress and a close associate of Jawaharlal Nehru).
It led the cabinet under Pattom A. Thanu Pillai as chief minister of State of Travancore-Cochin from March 1954 to February 1955. A section led by Rammanohar Lohia broke from the party in 1955,resuming the name "Socialist Party".[citation needed]. It again came to power in the new state of Kerala under Pattom A. Thanu Pillai from February 1960 to September 1962. In 1960, Kripalani left the party and in 1964, Asoka Mehta joined Congress after his expulsion from the party.
Another section of the party, led by the trade union leader George Fernandes, broke off to become the Samyukta Socialist Party in 1969. In 1972, a section merged with Fernandes' party to become the Samyukta Socialist Party/Socialist Party once more, before becoming part of the Janata coalition following the Emergency in 1977.
In September 1952, the Kisan Mazdoor Praja Party merged with the Socialist Party with J. B. Kriplani as the chairman and Asoka Mehta as the general secretary.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
5-1-2022
#ksrposts
No comments:
Post a Comment