Monday, September 1, 2025

#1970களில்இலகணேசன்_ராமானுஜம்ஆனார்

 #1970களில்இலகணேசன்_ராமானுஜம்ஆனார்

————————————————————————-
இல கணேசன் - ஆழ்ந்த அஞ்சலி. 90களில் டிவியில் இல கணேசன் உடன் நாங்கள் இணைந்து விவாத்தில் அருமையாக தமிழில் பேசுவார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த ஸ்வயம்சேவகர், தமிழக பாஜக தலைவர் ,பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர், ராஜ்யசபையின் முன்னாள் எம்.பி., நாகலாந்து கவர்னர், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர் எனப் பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் இல.கணேசன்.
நாகலாந்து ஆளுநர் இல கணேசன் அவர்கள் தனது 80 வது வயதில் இயற்கை எய்தி உள்ளார். ஆழ்ந்த அஞ்சலிகள். நினைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் போது 1970களில் நான் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது அவருடன் எனது நட்பும் தொடர்பும் இருந்து வந்தது. அன்றைக்கு இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலைக் காலத்தின் போது அன்றைய தூத்துக்குடி தென்காசி இணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இல கணேசன் களப்பணி ஆற்றினார். அப்போது அவரது பெயர் ராமானுஜம். அவரைக் கல்லூரி விடுதிகளில் எப்போதாவது சந்திப்பது உண்டு. அப்போது வெளியிடங்களில் சாப்பிடச் செல்லும் போது தன்னைக் கவனித்து விடுவார்கள் என்று வெறும் பன்ரொட்டியை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு செங்கோட்டை கேரளா எல்லை வரை பயணிப்பார். அதற்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு அமைப்பு உருவான பிறகு தான் அவர் மக்கள் மத்தியில் வெளிப்பட்டுப் பிரபலமாகத்தொடங்கினார். அவருடன் மதுரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இணைந்து பயணித்து வந்தவர் தான் இன்றைக்கு பாரதியஜனதாக் கட்சியின் பொருளாளராக இருக்கும் நண்பர் வழக்கறிஞர் எஸ் ஆர் சேகர். இல கணேசன் ராமானுஜம் என்ற பெயரில் மாறு கோலத்தில் கட்சிக்காகப் பயணித்தவர். அதன் பிறகு அவரை நான் எங்கு சந்தித்தாலும் பழைய கதைகளைப் இருவரும் பேசிக் கொள்வோம். அவர் கவர்னர் ஆனார் அதற்கு பிறகு அவரைப் பார்க்க வாய்ப்பு இல்லை. திமுகவில் இருந்து நான் நீக்கப்பட்ட நேரத்தில் உங்களைப் பற்றி கலைஞர் பெருமையாகப் பேசுவாரு இப்போது உங்களை நீக்கி விட்டார்களே என்று இல கணேசன் வருத்தப்பட்டதுடன் ஆறுதல் கூறியதும் உண்டு. அந்தக் காலத்தில் ஜனசங் என்ற இருந்த அரசியல் கட்சியில் குறிப்பாக ஜனா கிருஷ்ணமூர்த்தி
இல கணேசன் எச் ராஜா எஸ் ஆர் சேகர் மகளிர் அணியில் லலிதா சுபாஷ் சுஜாதா ராவ் மற்றும் சிலரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். 1998 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக தமிழகத்தில் ஒரு அமைப்பு ரீதியாக கவனம் ஈர்த்ததற்கு இல கணேசன் ஒரு காரணமாக இருந்தார். சிபி ராதாகிருஷ்ணனும் அந்தக் காலத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தார். அப்போது எல்லாம் ஜனசங் கட்சியின் தீபம் சின்னம் அடையாளம் . மதுரையில் மதுரை முத்து மேயராக நின்ற போது அங்கே ஜன சங்கத்தில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேஷாத்திரி என்பவருடைய ஒரு ஓட்டு மூலமாகத்தான் அவர் மேயராக முடிந்தது. இவையெல்லாம் தான் இலகணேசன் ஜனா கிருஷ்ணமூர்த்தி காலத்தின் நிகழ்வுகள். இன்றைய நாளில் இவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இல கணேசன் கட்சி மாச்சரியங்கள் அற்று அன்றைக்கு என்னுடன் நட்பாக பேசிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிய அவர் தமிழ் இலக்கியத்திலும் பாரதி மீதும் பற்று கொண்டவர். இன்றைக்கு காலையில் தான் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எச் ராஜா மற்றும் நானும் அவரது இல்லத்திற்கு சென்று வந்தோம்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்