Monday, September 8, 2025

26 August

 #என்பதில்

————-
பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்ததற்காக என்மீது பலவிதமான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ஜனநாயகத்தில் யாரும் விமர்சனத்திற்கு உட்பட்டாகத்தான் வேண்டும். அதை ஏற்றுக் கொள்கிறேன். நான் எழுதிய புத்தகங்கள் செல்லரித்து விட்டது என்கிறார்கள் ஒருவேளை செல்லரித்துப் போய்விட்டால் புதிய காப்பிகளை நான் அனுப்புகிறேன் முகவரிகளை அனுப்பித்தாருங்கள்.
மிக முக்கியமான விஷயம் என்னவெனில் நான் இதுவரை திராவிட இயக்கத்தைப் பற்றியோ திக மற்றும் திமுகவைப் பற்றியோ உச்சி முகர்ந்து ஒரு புத்தகத்தையும் நான் எழுதியதில்லை. ஆண்டாண்டு காலமாக இவர்களின் வேர்களை நான் அறிந்தவன். இவர்களுக்கு அப்பால் நான் எழுதியது பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம், ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழ்நாட்டு உரிமைகள் பற்றிய நூல்கள், அதேபோல மாநிலத்தின் நதிநீர்ச் சிக்கல்கள், விவசாயிகள் போராட்டம், கச்சத்தீவு,நிமிர வைக்கும் நெல்லை, பாரதி, கி. ராஜநாராயணன் என இப்படியான 20 பொதுவான நூல்களை எளிமையாக அரசியல் பூர்வமாக எழுதி அதை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளேன். இவை பற்றி எழுதக்கூட இன்றைக்கு திமுகவில் அறிந்த ஆட்கள் என்று யாரும் கிடையாது. ஸ்டாலினிடம் எனக்கு #தகுதியேதடை. இவர்கள் பாசாங்கமாக சொல்லிவரும் சுயமரியாதை எனக்கு உண்டு. இவர்களின் கால் பாதத்தை தொடமாட்டேன். அவ்வளவுதான் …..
இன்று வந்து என்னை விமர்சனம் , ஆலோசனை களை செய்பவர்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன். திமுகவிலிருந்து என்னை இடைகாலமாக 3 ஆண்டுகளுக்கு முன் நீக்கும் போது நீங்கள் யாராவது எனக்கான என் உழைப்பு மீதான நியாயத்திற்குக் ஆதாரவு குரல் கொடுத்தீர்களா? குரல் எழுப்பக் கூட வேண்டாம். இப்படி நடந்து விட்டது நீங்கள் ஆறுதலாக இருங்கள் உங்கள் தகுதிக்குரிய காலம் வரத்தான் செய்யும் என்று ஆறுதலாவது கூறினார்களா? நான் திமுகவிற்கு செய்த தவறுதான் என்ன?
1986 இல் டெசோ ஒன்று, 2012இல் டெசோ இரண்டு என்ற ஈழத் தமிழர் மாநாடுகளைக் கலைஞரின் வேண்டுகோளுக்காக ஒன்றிணைத்தது தான். பின இந்த நன்றி கெட்ட ஸ்டாலினை ஈழத்தமிழர்கள் ஆவனங்கள் ஐநா மன்றந்தில் வழங்கவும் மற்றும் பிரிட்டி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ( லண்டன் ) அழைத்து சென்று பேச வைத்தவன். இந்தளவு திமுகவில் பணியாற்ற திரணி உள்ளவர்களை சொல்லுங்கள்.அதன் மூலம் திமுகவிற்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களையும் களங்கங்களையும் நான் துடைக்கத் துணையாக நின்றேன். ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளை இங்கு விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதற்காக கர்நாடகத்துக்கு மாற்றுவதற்கு நான் தான் சட்டபூர்வமான ஏற்பாடுகளைச் செய்தேன். நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அந்த காணொளிக் காட்சிகளை சிடியாக மாற்றிக்கொண்டு நான் கொண்டு போய் ஊடகங்களில் கொடுத்திருக்காவிட்டால் அந்த செய்தி உடனடியாகப் பரபரப்புடன் உலகத்தின வெளியே வந்திருக்காது! இன்னும் சொன்னால் ஒரு காலத்தில் நான் திமுகவிலேயே இல்லை.அப்போது எம்ஜிஆர் ஆட்சி காலத்தின் ஊழல்ப் பட்டியலைத் தயாரித்து தருமாறு முரசொலி மாறன் என்னிடம் கேட்டுக் கொண்ட தற்காக அந்த பட்டியலைத் 1985 இல் தயாரித்தும் கொடுத்தேன். அதேபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகப் பரபரப்பாக இருந்த இக்கட்டான சூழ்நிலையில் அதன் காரணங்களின் அடிப்படையில் 1991இல் திமுக ஆட்சிக்கவிழ்க்கப்பட்டிருந்த நிலையில் கலைஞரின் மகள் கனிமொழியின் குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட மண விலக்குப் பிரச்சனைகளை பிறர் அறியாதவாறு இரவு நேரத்தில் மிக ரகசியமாகத் தீர்த்து கொடுத்ததும் அடியேன் தான்..
இப்படி பல பணிகள் அடங்கிய நீண்ட பட்டியல் உண்டு.இத்தனை உடன்பாடுகளோடு இருந்தவனை கலைஞரின் மகன் men and matter தெரியா ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவே இல்லையே! இதையெல்லாம் இன்று வந்து என்னை விமர்சிக்கும் உங்களிடத்தில் தான் கேட்கிறேன்.
இந்தத் திராவிட இயக்கத்தில் நான் பயணித்த பாதைகள் எல்லாம் துரோகத்தின் முட்பாதைகள்தான்.
இந்த திமுகவைப் பயன்படுத்தி எம் எல் ஏ எம் பி மந்திரியாகி நான் அனுபவித்திருந்தால் நீங்கள் எனனை விமர்சனம் செய்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். நேற்றுவரை (2016 வரை)திமுக -கலைஞரை திட்டி தீர்த்தவர்கள் திட்டக்குழு, நூலக ஆணையம் , மகளிர் நல வாரியம், கலைஞர் தொலைக்காட்சி என 2021 முதல் பதவிகளை அள்ளி வழங்கிய மாபெரும் மகான் ஸ்டாலின் .
ஐநா சபையில் வேலை வாய்ப்புக் கிடைத்ததைக் கூட மறுத்துவிட்டு வைகோ - திமுக கட்சிக்காரர்களுக்கு நான் உழைத்தேன் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். இப்போது உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் தொழிலையும் விட்டு விட்டேன். இவர்கள் மூலம் என் இளமை, பொருள் இழப்புகள் நடந்தது . பெற்றது ஒன்றும் இல்லை. இழந்தது அதிகம்.
எல்லாம் போகட்டும் நேற்று வரை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு மன்றம் வரை கொண்டு சென்ற செந்தில் பாலாஜி இன்றைக்கு திமுகவில் அமைச்சராக இருக்கிறார். சட்டமன்றத்தில் ஓடி வந்து அவமானப்படுத்திக் கலகம் செய்த சேகர்பாபு இன்று திமுகவில் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். இன்றைக்கு சேகர் பாபுவைத் தான் ஸ்டாலின் வலதும் இடதுமாக பக்கத்தில் வைத்து இருக்கிறார்.இதற்கு என்னய்யா உங்கள் விமர்சனம். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்களுக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்தேன் அவர்கள் ஆட்சிக்கு வந்த போது எந்த பதவியும் நான் கேட்டுப் பெறவில்லை. அவர்களுக்கும் மனச்சான்று இல்லை.
அதிமுக எம்எல்ஏவாகயிருந்தபோது' ஏவவேலுசட்டசபையில்' பேசும்போதுதமிழகத்தில்' கள்ளசாராயம்பெருக' கருணாநிதியேகாரணம்' எனபேசியதுஇன்னும்' சபைக்குறிப்பிலேஉள்ளது' அவர்தான்இன்று' பொதுபணித்துறைமந்திரி' சட்டசபையில்கருணாநிதியை' அடிக்கபாய்ந்த' சேகர்பாபுஇன்றுஅறநிலைய மந்திரி' எம்ஜிஆர்மந்திரிசபையில்' மந்திரியாகயிருந்த' கேகேஎஸ்எஸ்ஆர்ராமசந்திரன்' திமுகவினரை' விரட்டிவிரட்டி' வெளுத்தவர்தான்' இப்படிஅதிமுகவினரை' வைத்துகட்சியையும்' ஆட்சியையும்நடத்துகிற' ஸ்டாலினைகவிழ்க்க' அந்த அதிமுககாரர்களால்' முடியாதா?ஏவவேலுவும்' சேகர்பாபுவும்' செந்தில்பாலாஜியும்' அனிதாராதாகிருஷ்ணனும்' சாத்தூர்ராமசந்திரனும்' செல்வகணபதியும்' ராஜகண்ணப்பனும்' என்னபுடம்போட்டதங்கங்களா?கொள்கைகுன்றுகளா?ஸ்டாலின்வீழ்ந்தால்' ஸ்டாலின்உடல்மீதேதாவிகுதித்து' கும்பலில்தப்பிஓடுகிற' நபர்களாகநாளைஇவர்கள்' வென்றமுகாமைநோக்கி' ஓடமாட்டார்களா?மிசாவில்சிறையிலிருந்த' ஸ்டாலினைகாப்பாற்றபோய்' தன்இன்னுயிரைஇழந்த' சிட்டிபாபுவைஇன்று' ஸ்டாலின் நினைக்கிறாயா?சிட்டிபாபுபெயரில்விருதுதான்' வழங்குகிறாரா?இல்லையே?தனதுபெயரில்தானே' விருதுகளைவழங்குகிறார்' சிட்டிபாபுகுடும்பம்எங்கே' இருக்கிறதுஎனவாவது' ஸ்டாலினுக்கு தெரியுமா?
இன்றைக்கு பிஜேபியில் நான் சேர்ந்தேன் என்பது ஒருபுறம் இருக்க அன்றைக்குக் கலைஞர் வாஜ்பாயுடன் கூட்டணி வைத்தது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் மதுரையில் திமுக மேயர் முத்து ஜெயிப்பதற்கு ஜன சங்கத்தின் கவுன்சிலர் சேஷாத்ரியின் ஆதரவைக் கலைஞர் கோரிப் பெறவில்லையா? இல்லை இன்று திமுகவில் இருப்பவர்கள் எத்தனை பேர் பாஜகவுடன் ரகசியத்தொடர்பில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லவா? அன்றைக்கு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் பாஜக கூட்டணியில் மூன்று பேர் திமுகவில் மந்திரிப் பதவி பெற்றார்களா இல்லையா? அப்போது எங்கய்யா போயிட்டு உங்கள் விமர்சனங்கள் எல்லாம். டி ஆர் பாலு ஆ ராசா முரசொலி மாறன் மூன்று பேரும் பாஜகவின் ஆதரவில் மந்திரிகளாய் இருந்தபோது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள்? முன்னாள் திமுக அமைச்சர் முத்தூர் சாமிநாதனும் தங்கவேலும் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிக் கூட்டத்திலே நேரடியாக கலந்து கொண்டார்களே அப்பொழுது உங்கள் கண்களை மூடிக் கொண்டீர்களா?அதேபோல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு மறுநாளே பத்திரிகையாளர் கூட்டத்தில் கலைஞர் என்ன சொன்னார். குஜராத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்கு நான் ஏன் அதைக்கண்டிக்க வேண்டும் எனச் சொன்னார். இவ்வளவும் நடந்த உண்மைகள் தானே! இன்னும் இப்படியான பாஜகவுடன் திமுகத் தலைமைகளின் அணுகுமுறைகள் பல்வேறு விஷயங்களில் எவ்வாறு நீடித்து வந்தன என்பதைச்சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்றைக்கு மிகவும் பராக்கிரமாக பேசும் முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் அமித்ஷாவுக்கு எதிராக மறுபடியும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில்; ராஜ்பவனில் ஆளுநர் புரோகித்தின் அவருடனான சந்திப்பில் பேச்சு வார்த்தைக்கு பிறகு அந்தப் போராட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்று சொன்னதன் காரணம் என்ன? திராவிட சிசுக்களே அவர்களை விமர்சனம் செய்தீர்களா! திராவிட ஞானிகளே, திராவிட அடியார்களே இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பிறகு என் மீது பாயுங்கள். நான் என்ன முன்னாள் இந்நாள் திமுக பதவியில் ஏக போகமாய் வாழ்ந்தவனா? போங்கடா போக்கத்த பயலுகளா.! உங்களுக்கு திராவிட இயக்க வரலாறு தெரியுமாடா?
இன்றைக்கு வந்து பல் இளித்து எல்லாச் சலுகைகளையும்நத்திப் பெற்றுக் கொண்டிருக்கிற உங்களுக்கு அதன் ஆதியும் அந்தமும் அறிந்த எங்களைப் போன்றவர்களை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது? நான் திமுகவில் இழந்தது அதிகம் பெற்றது ஒன்றுமில்லை.
அன்றைக்குக் கச்சத்தீவு விவகாரத்தில் வாஜ்பாய் தான் நமக்கு ஆதரவாக இருந்தார். நீங்களும் இந்திரா காந்தியும்தான் கட்சத் தீவைத் தாரை வார்த்தீர்கள். ஜனா கிருஷ்ணமூர்த்தி வழியாகத்தான் இந்த பிரச்சினை எல்லாம் வழக்குகளாக மாறிப் பேசப்பட்டது. பாஜக இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது.
திமுககூட்டணியில்' இன்றுஇருக்கிற' திருமாவளவன்' வைகோ' இருகம்யூனிஸ்டுகள்' ஆகியோர்' மக்கள்நலகூட்டணியை' உருவாக்கி' திமுக கூட்டணி' சேரயிருந்த' விஜயகாந்த்தை' ஆசைகாட்டி' முதல்வர்வேட்பாளராக அறிவித்து' கலைஞர் முதல்வராககூடாது' திமுக ஆட்சியை'. பிடிக்ககூடாதுஎன' கங்கணம்கட்டிகொண்டு' திரிந்தவர்கள்தான்' ஸ்டாலினுக்குகொஞ்சமாவது' சூடுசொரணையிருந்திருந்தால்' திருமாவளவன்' வைகோ' இருகம்யூனிஸ்டுகளை' தனதுகூட்டணியில்' வைத்திருப்பாரா?சீமானேதனியாக' நிற்கும்போது' பழையமக்கள்நலகூட்டணி' கட்சிகளான' விசிக' மதிமுக' மார்க்சிஸ்டு' இந்தியகம்யூனிஸ்டு' ஆகிய' தனதுதந்தை' முதல்வராகவிடாமல்' தடுத்த' மேற்கண்டகட்சிகளை' ஏன்வெட்கமின்றி' கூட்டணியில்' வைத்திருக்கிறார்'' தனியாக நிற்கஸ்டாலினுக்கு' தைரியமில்லையே!மக்கள்நலகூட்டணியாக' போட்டியிட்டபோது' ஆறுகட்சிகளும்சேர்ந்து' நாலுசதவீதவாக்குதான்' வாங்கினர்' இதில்விஜயகாந்த்கட்சியும்' வாசன்கட்சியும்' இப்போதுதிமுககூட்டணியில்' இல்லாதநிலையில்' வைகோதிருமாவளவன்' இருகம்யூனிஸ்டுகளுக்கும்' சேர்த்துமொத்தமாக' இரண்டுசதவீதவாக்குகூடவராது' மேலும்இன்றையநிலையில்' திருமாவளவன்' வைகோ' இருகம்யூனிஸ்டுகளும்' மிகபலவீனமானநிலையிலேயே' உள்ளார்கள்' ஆளுங்கட்சிமிதப்பில் திமுக' இருப்பதால்' அதனுடன்கூட்டணியிலிருக்கிற' தைரியத்தில்' திருமாஉள்பட' பழையமக்கள்நலகூட்டணி' வெட்டிபில்டப்செய்கிறது' இந்தபலவீனமானகட்சிகளை' கூடகழட்டிவிட' ஸ்டாலின்அஞ்சுவதிலிருந்தே' அவரதுபலவீனம்' அம்பலமாகியுள்ளது' பழைய அதிமுகபழைய' மக்கள்நலகூட்டணியைவைத்து' அரசியல்செய்வதே' திமுகதனதுபலவீனத்தை' உணர்த்திவிட்டது' தனதுஇயலாமையை' தோல்வியைதிமுகவே' உறுதிசெய்துவிட்டது' தான்அசைக்கமுடியாத' செல்வாக்குபெற்றவராக' ஸ்டாலின்கருதுவாரேயானால்' பழையமக்கள்நலகூட்டணி' பழைய அதிமுகவினரை' கழட்டிவிட்டு' தனித்து அசல்திமுகவினரை' வைத்துஸ்டாலின்' தேர்தலைசந்திக்கவேண்டும்' செய்வாரா ஸ்டாலின்?
உங்கள் காலகாலமான சாயங்கள் வெளுத்துக் கொண்டிருக்கிறது. திமுக என்ன ஜமீன்தார் வழித் தோன்றல்களா? ஜாகிர் தார்களா? இத்தகைய ஏகபோக அதிகாரத்தை வைத்துக்கொண்டு எல்லாத் துறைகளிலும் கவனமின்றி சொத்தை குவித்துக் கொண்டிருப்பதில் மட்டுமே குறிக்கோளாய் இருக்கிறார்கள் என்பதை மக்கள் அறியாமலா இருக்கிறார்கள்?காலம் மாறத்தான் செய்யும். 14 ஆம் லூயி -பிரஞ்சுப் புரட்சி எல்லாம் நடந்த உலகம் தான் இது. ஏதோ பிரிட்டிஷ் கால அரசாங்கத்தைப் போலத் தங்களது வாரிசுகளை முன்னிறுத்திக்கொண்டு ஜனநாயகத்தை ஒடுக்கி இங்கே அதிகாரம் செய்து கொண்டு நீடிக்கிறார்கள்.
இதையெல்லாம் விமர்சிக்காமல் என் மீது வந்து விமர்சனம் வைக்க உங்களுக்கு என்னடா தகுதி இருக்கிறது போங்கடா முட்டாள் பயலுகளா. இன்னும் ஆவனங்களோடு ஸ்டாலின் நடந்து கொண்ட வரலாற்றை அள்ளி தெளித்தால் நல்லா இருக்காது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்